search icon
என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • 100 யூட்டுகள் வரை பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிப்பு.
    • அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கவும், பாஜக ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முதல் 100 யூனிட்டுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசேக் கெலாட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " பணவீக்க நிவாரண முகாம்களை பார்வையிட்டேன். பின்னர் பொதுமக்களிடம் பேசிய பிறகு, மின்கட்டணத்தில் சிலாப் வாரியான விலக்குகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூட்டுகள் பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை. 200 யூனிட்டுகள் வரை நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் தாமத கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
    • சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்பா? என எதிர்க்கட்சி விமர்சனம்

    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். நான்கரை ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதனால் மக்கள் மனதை கவரும் வகையில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை நழுவ விட்ட பா.ஜனதா, கெலாட்- சச்சின் பைலட் இடையிலான மோதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை கையில் எடுத்து ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டி வருகிறது. இந்த நிலையில் அசோக் கெலாட் அறிவிப்பு பா.ஜனதாவை சற்று அச்சம் அடைய செய்துள்ளது.

    இதற்கிடையே, நான்கரை ஆண்டுகள் மக்களை கொள்ளை அடித்துவிட்டு, ஆட்சியின் கடைசி காலத்தில் அறிவிப்புகளை வெளியிடுவதா? என சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ராஜேந்திர ரதோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஜேந்திர ரதோர் கூறியதாவது:-

    மோடியின் மாநாடுகளை பார்த்து அசோக் கெலாட் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால்தான் நேற்றிரவு வலுக்கட்டாயமாக இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    நான்கரை ஆண்டுகள் மக்களை கொள்ளையடித்துவிட்டு, தற்போது தேர்தலை அணுகுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் திடீரென உங்களுடைய அறிவிப்புகளை மக்கள் நம்புவதற்கு ஒன்றும் முட்டாள்கள் அல்ல. உங்களுடைய கொள்கை மற்றும் நோக்கம் குறைபாடானது.

    இவ்வாறு ரதோர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது.
    • அங்கு முதல் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரம் இலவசம் என முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார்.

    ஜெய்ப்பூர்:

    மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கருடன் சேர்த்து ராஜஸ்தான் மாநிலத்திலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.

    இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரம் இலவசம் என முதல் மந்திரி அசோக் கெலாட் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனால், அவர்கள் அந்த மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. 100 யூனிட்டுக்கு கூடுதலாக பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

    இதேபோல், 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதுடன், நிலையான கட்டணம், பிற கட்டணங்கள் உள்ளிட்டவை 200 யூனிட் வரை தள்ளுபடி செய்யப்படும். அவர்களுக்கான மின் கட்டணத்தொகையை அரசே செலுத்தி விடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • நாட்டின் நாயர்களான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது.
    • காங்கிரஸிடம் புதிய உத்தரவாதத்தில் சூத்திரம் உள்ளது. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக்கும் என்றார்.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், 9 ஆண்டுகள் நிறைவையொட்டி அஜ்மீர் நகரில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டு மக்களுக்கு சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலனுக்காக பாஜக அரசு 9 ஆண்டுகாலத்தை அர்ப்பணித்துள்ளது.

    2014க்கு முன், ஊழலுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர். முக்கிய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. காங்கிரஸ் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சியை நடத்தியது.

    காங்கிரஸிடம் புதிய உத்தரவாதத்தில் சூத்திரம் உள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் உத்தரவாதங்களை நிறைவேற்றுகிறார்களா? இல்லை. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக்கும்.

    ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம், இலவச மின்சாரம் முதல் மலிவான சமையல் எரிவாயு வரையிலான சமூக நலத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, வறுமையை அகற்றுவோம் என்று காங்கிரஸ் உத்தரவாதம் அளித்தது. ஆனால் அது ஏழைகளுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாக மாறியது. ஏழைகளை தவறாக வழிநடத்துவதும், அவர்களைப் பின்வாங்குவதும் காங்கிரஸின் கொள்கையாக உள்ளது.

    இதனால் ராஜஸ்தான் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றனர்.

    கடந்த திங்களன்று பல முயற்சிகளுக்கு பிறகு ஒற்றுமையை வெளிப்படுத்திய போதிலும் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.

    நாட்டின் ரத்தத்தை உறிஞ்சி, வளர்ச்சியைத் தடுக்கும் ஊழல் அமைப்பை காங்கிரஸ் உருவாக்கியது.

    இப்போது, உலகம் இந்தியாவைப் பற்றி பேசுகிறது. மேலும் இந்தியா தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிக அருகில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    நாட்டின் நாயர்களான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது.

    ஆனால், பாஜக அரசு ஒரே தரம், ஒரே ஓய்வூதியம் திட்டத்தினை நாட்டில் அமல்படுத்தியதுடன், அவர்களுக்கு அரியர்ஸ் தொகையையும் வழங்கியது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருந்தது. பிரதமருக்கு மேல் உச்சபட்ச அதிகாரம் ஒருவரிடம் இருந்தது. இளைஞர்களின் கண்முன்னே இருள் சூழ்ந்திருந்தது. இன்று இந்தியா உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜஸ்தானில் 9 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
    • நிறைவு விழாவில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் விரைந்தார்.

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாஜக அரசின் நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் விரைந்தார்.

    நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி அம்மாநிலத்தில் உள்ள பிரம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    கோவில் கருவறையில் உள்ள பிரம்மா சிலை முன்பு பிரதமர் மோடி ஆரத்தி காண்பித்து வழிபட்டார்.

    பின்னர் பிரதமர் மோடிக்கு அச்சகர் பிரசாதம் வழங்கினார்.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனவும் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.

    வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே கோஷ்டி மோதல் நீடித்து வந்தது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரின் தலைமையில் இருவரையும் தனித்தனியே சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அசோக் கெலாட், சச்சின் பைலட் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இருவரும் ஒருமனதாக இந்த முன்மொழிவை ஒப்புக்கொண்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "பாஜகவுக்கு எதிரான கூட்டுப் போராட்டமாக இது இருக்கும். வரும் சட்டசபை தேர்தலில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஒன்றாக போட்டியிடுவார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்" என கூறியுள்ளார்.

    • ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர்.
    • பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் மழை சார்ந்த விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேரும், ஆல்வார், ஜெய்ப்பூர் மற்றும் பிகானீரில் தலா ஒருவர் பலியாகினர்.

    மேலும் பலர் காயமடைந்தனர்.

    டோங்க் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பயங்கரமான கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    இதுதொடர்பாக பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில், புயல் காரணமாக கடந்த இரு தினங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.

    • பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.
    • பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு அரசுதுறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அலுவலக அறையில் பணம் மற்றும் தங்ககட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அங்கு அலமாரியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த பையினை திறந்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில் கட்டுக்கட்டாக 2 கோடியே 31 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், அந்த பணம் மற்றும் தங்ககட்டிகளை பறி முதல் செய்தனர். அந்த பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.

    அது லஞ்சப்பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தர விடப்பட்டு உள்ளது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக 7 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டார்.
    • எனது போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.

    ஜெய்ப்பூர் :

    காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    முந்தைய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கடந்த மாதம் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் சச்சின் பைலட்.

    அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டார். ராஜஸ்தானின் அஜ்மீரில் கடந்த 11-ந் தேதி நடைபயணத்தை தொடங்கிய அவர், தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நிறைவு செய்தார்.

    ராஜஸ்தான் அரசு தேர்வாணையத்தை மறுசீரமைக்க வேண்டும், அரசு பணி தேர்வு தாள் கசிவு வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், முந்தைய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணத்தை மேற்கொண்டார்.

    நடைபயணத்தின் இறுதி நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், "எனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால், மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    நான் எந்த பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது கடைசி மூச்சு வரை ராஜஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். யாரும் என்னை அச்சுறுத்த முடியாது.

    எனது போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. ஊழலுக்கு எதிராகவும், இளைஞர்களின் நலனுக்காகவும் நடத்தப்படுகிறது" என்றார்.

    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.
    • நிலையான, விரைவான வளர்ச்சியைத்தான் வரலாறு காண்கிறது.

    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.

    அங்கு தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாதத்வாரா நகரில் ராஜ்சமந்த்-உதய்பூர் இரு வழிப்பாதை மேம்பாடு திட்டம், உதய்பூர் ரெயில்நிலையம் மறுஉருவாக்கத்திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் என ரூ.5,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கான விழா நேற்று நடந்தது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு. முதல்-மந்திரி அசோக் கெலாட் முன்னிலையில் வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் சாடினார். அவர் கூறியதாவது:-

    நாட்டில் உள்ள சிலர் (காங்கிரசார்) சிதைக்கப்பட்ட சித்தாந்தத்துக்கு இரையாகி விட்டனர். அவர்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். அவர்கள் நாட்டில் நடக்கிற எந்த நல்லதையும் பார்க்க விரும்புவதில்லை. அவர்கள் சர்ச்சையை உருவாக்குவதைத்தான் விரும்புகிறார்கள்.

    எல்லாவற்றையும் ஓட்டு அடிப்படையில் பார்ப்பவர்களால், நாட்டை மனதில் கொண்டு திட்டங்களைத் தீட்ட முடியாது. இந்த சிந்தனை காரணமாக நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுககு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

    நிலையான, விரைவான வளர்ச்சியைத்தான் வரலாறு காண்கிறது. நவீன கட்டமைப்பு வசதிகளை அடிப்படை அமைப்புடன் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

    தேவையான அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளை ஏற்கனவே தொடங்கியாகி விட்டது என்றால், டாக்டர்களுக்கு பற்றாக்குறை இருக்கக்கூடாது. எல்லா வீடுகளிலும் ஏற்கனவே தண்ணீர் கிடைக்கத் தொடங்கி இருந்தால், ஜல்ஜீவன் திட்டம் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

    தொலைநோக்குத்திட்டத்துடன் ராஜஸ்தானிலும் போதுமான அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

    நவீன கட்டமைப்பு வசதிகள் நகரங்கள், கிராமங்களை இணைப்பதை அதிகரிக்கும். வசதிகளை ஏற்படுத்தும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். வளர்ச்சியை முடுக்கி விடும். வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை காண வேண்டும் என்று நாம் பேசுகிறபோது, இந்த நவீன கட்டமைப்பு வசதி, புதிய சக்தியாக உருவாகும்.

    நாட்டில் எல்லா வகையிலான உள்கட்டமைப்புகளிலும் இதுவரையில்லாத வகையில் பெரும் முதலீடுகள் செய்யப்படுகின்றன. அதிவேகமாக பணிகள் நடைபெறுகின்றன.

    உள்கட்டமைப்புகளுக்காக முதலீடுகள் செய்கிறபோது, அது வளர்ச்சியிலும், வேலை வாய்ப்புகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் நன்மைகள் மக்களுக்குப் போய்ச்சேருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயகத்தில் பகைமைக்கு இடம் இல்லை.
    • எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது.

    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தானில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசிய விழாவில், அந்த மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப்பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் பகைமைக்கு இடம் இல்லை. சித்தாந்த சண்டைகளுக்குத்தான் இடம் உண்டு. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. நாட்டில் எல்லா மதத்தினர், சாதியினர் இடையேயும் அன்பும், சகோதரத்துவமும் இருக்க வேண்டும்.

    எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும். இந்த திசையில் நீங்களும் (பிரதமர் மோடி) செல்வீர்கள் என்று நான் கருதுகிறேன். இது மட்டும் நடந்து விட்டால், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து நாட்டுக்கு இன்னும் அதிக வீரியத்துடன் பணியாற்ற முடியும்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக தனது இன்னுயிரை நீத்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் உருவாவதை அனுமதிக்கவில்லை.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்.

    நாம் அனைவரும் ஒற்றுமையாய் நடைபோட்டால், நாடு ஒன்றாக இருக்கும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

    பதற்றமும், வன்முறையும் வளர்ச்சியைத் தடுத்துவிடும். நீங்கள் (பிரதமர் மோடி) விடுக்கும் செய்தி, நாட்டை ஒன்றுபட்டிருக்கச்செய்யும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி முன்னிலையில் அசோக் கெலாட் பேசிய இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விழாவில் அசோக் கெலாட் பேச எழுந்தபோது, கூட்டத்தினர் எழுந்து "மோடி மோடி" என கோஷமிட்டனர். அப்போது பிரதமர் மோடி கூட்டத்தினரைப் பார்த்து " நீங்கள் உட்காருங்கள், அப்போதுதான் அசோக் கெலாட் இடையூறின்றி பேச முடியும்" என குறிப்பால் உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.
    • அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கும், மற்றொரு காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.

    இதற்கு சச்சின் பைலட் இன்று பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    முதல்-மந்திரி (அசோக் கெலாட்) பேச்சை கேட்டதும் அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல என்றும், வசுந்தரா ராஜே தான் தலைவர் என்றும் நினைக்கிறேன். அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.

    இவ்வாறு சச்சின் பைலட் கூறியுள்ளார்.

    ×