என் மலர்tooltip icon

    திரிபுரா

    • பா.ஜ.க. 55 இடங்களிலும், கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 5 இடங்களிலும் வேட்பாளரை நிறுத்தின.
    • சமீப காலமாக செல்வாக்கு பெற்று வரும் திப்ரா மோத்தா என்ற கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    அகர்தலா:

    இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் 3-வது சிறிய மாநிலமாக இந்த மாநிலம் உள்ளது. 10 ஆயிரத்து 491 கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலம் 8 மாவட்டங்களை கொண்டது. இதில் 60 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன.

    திரிபுராவில் வங்காள மொழி பேசும் மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள். இதனால் மேற்கு வங்காளத்தின் தாக்கம் காரணமாக அந்த மாநிலத்தில் சுமார் 27 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆட்சியே நடந்து வந்தது. பா.ஜனதா கட்சி கடந்த 2018-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    மானிக் சாகா தலைமையில் அங்கு தற்போது பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் 5 ஆண்டு பதவிகாலம் அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    திரிபுரா தேர்தலில் பா.ஜனதா கட்சி மாநில கட்சியான ஐ.பி.எப்.டி. எனப்படும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க. 55 இடங்களிலும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 6 இடங்களிலும் வேட்பாளரை நிறுத்தின.  இரு கட்சிகளும் அம்பிநகர் தொகுதியில் மட்டும் சுமூகமாக மோதுகின்றன. ஒரு காலத்தில் பரம எதிரிகளாக இருந்த காங்கிரசும், கம்யூனிஸ்டும் இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்துள்ளன. கம்யூனிஸ்டு 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    திரிபுராவில் சமீப காலமாக செல்வாக்கு பெற்று வரும் திப்ரா மோத்தா என்ற கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பழங்குடியின மக்களிடம் தனி செல்வாக்குடன் திகழும் இந்த கட்சி மற்ற 2 கூட்டணிகளுக்கும் கடும் சவால் விடுத்துள்ளது. இதனால் திரிபுரா தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. 3 கூட்டணிகளிலும் மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    கடந்த ஒரு மாதமாக அந்த மாநிலத்தில் விறுவிறுப்பான பிரசாரம் நடைபெற்றது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு சவால் விடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

    நேற்று முன்தினம் மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து 60 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. மொத்தம் 3,328 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தலில் அதிகளவு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று இரவு டுவிட்டரில் அழைப்பு கொடுத்தார். அவர் வெளியிட்ட பதிவில், 'ஜனநாயக திருவிழாவை பலப்படுத்தும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அளவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களை வாக்களிக்க வருமாறு அழைக்கிறேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதை உறுதிபடுத்துவது போல இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் ஆர்வமுடன் வந்தனர். தொடக்கம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 

    திரிபுரா மாநிலத்தில் சுமார் 41 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் சுமார் 28 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். அவர்கள் அமைதியாக வாக்களிப்பதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுமார் 31 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திரிபுரா மாநிலத்தை சுற்றிலும் வங்கதேச நாடு, அசாம், மிசோரம் மாநிலங்களின் எல்லைகள் அமைந்துள்ளன. இந்த எல்லைப் பகுதிகள் அனைத்தும் ஓட்டுப்பதிவை முன்னிட்டு சீல் வைக்கப்பட்டு இருந்தன.

    பாதுகாப்பு கருதி பதட்டமான 1,100 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 97 வாக்குச் சாவடிகள் முழுக்க முழுக்க பெண் அதிகாரிகளால் கையாளப்பட்டன. மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி 81.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    திரிபுராவில் ஏற்பட்டுள்ள மும்முனை போட்டி காரணமாக பா.ஜனதா மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டணி அமைத்திருப்பதால் சுமார் 40 தொகுதிகளில் கடுமையான பலப்பரீட்சை ஏற்பட்டு இருக்கிறது.

    பா.ஜ.க. தலைவர்களில் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு கட்சிகளுக்கு தாவியது மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி, வங்க மொழி பேசும் மக்களின் வாக்குகளை பிரிப்பதும், பா.ஜனதாவுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.

    திரிபுராவின் 527 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களின் அமோக ஆதரவை திப்ரா மோத்தா கட்சி பெற்றிருக்கிறது. பழங்குடியின மக்களுக்காக உருவான இந்த கட்சியை திரிபுரா அரச பரம்பரையை சேர்ந்த பிரத்யோத் கிஷோர் வழி நடத்தி வருகிறார்.

    மன்னரான இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பழங்குடியின மக்கள் லட்சக்கணக்கில் திரண்டனர். பழங்குடியின மக்களுக்காக 'திப்ராலாந்து' என்ற மாநிலத்தை உருவாக்க இந்த கட்சி போராடி வருகிறது.

    இதன் காரணமாக பழங்குடியின மக்கள் வாக்குகள் இந்த கட்சிக்கு தான் கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் பழங்குடியின மக்கள் செல்வாக்கு மிகுந்த 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவை பா.ஜனதாவுக்கு அந்தளவுக்கு வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகமும் நிலவுகிறது.

    இத்தனை சவால்களையும் கடந்து திரிபுராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நாங்களே ஆட்சி அமைப்போம் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்கள்.

    • திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
    • தேர்தலில் 11 மணி நிலவரப்படி 32.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.

    முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது. 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.

    அதன்படி, திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 32.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.35 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.
    • தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது.

    60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கு தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    • 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
    • மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

    அகர்தலா:

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது.

    60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

    இங்கு தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    சர்வதேச எல்லைகள், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

    ஆட்சியை பிடிப்பது யார்? இன்று வாக்குப்பதிவு முடிந்தாலும், தேர்தல் முடிவுக்காக 2 வார காலம் காத்திருக்க வேண்டும். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை ஓய்ந்தது.

    அகர்தலா:

    வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்பட உள்ளன.

    60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல் மந்திரியாக மாணிக் சஹா செயல்பட்டு வருகிறார்.

    தேர்தல் நாள் நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. ஆளும் பாஜக மற்றும் திரிபுரா உள்ளூர் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கின்றன. முன்னாள் ஆளும் கட்சிகளான சிபிஎம்-மும், காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன.

    இவ்விரு கூட்டணிகளுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்பதால், தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

    வேட்பாளர்கள் அனைவரும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வந்தனர்.

    இந்நிலையில், திரிபுராவில் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அங்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவு வரும் 17-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திரிபுராவில் ஆளும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
    • கடந்த 5 ஆண்டில் பா.ஜ.க. திரிபுராவை வளர்ச்சி பாதையில் கொண்டு வந்துள்ளது என்றார் பிரதமர் மோடி.

    அகர்தலா:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தலாய் மாவட்டத்தின் அம்பாசாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும் ஏழைகளை எப்படி ஏமாற்றுவது என்பது மட்டுமே தெரியும். அவர்களை தங்கள் கவலைகளில் இருந்து ஒருபோதும் விடுவிக்கமாட்டார்கள். ஆனால் பா.ஜ.க.வோ உங்களின் கவலைகளைப் போக்குவதற்கு ஒரு வேலைக்காரன் போல, ஒரு உண்மையான பங்காளி போல இரவு, பகலாக பணியாற்றி வருகிறது.

    திரிபுராவில் கிராமங்கள் தோறும் ஆப்டிக்கல் பைபர் நிறுவப்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 3 மடங்கு ஆப்டிக்கல் பைபர் நிறுவப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் அரசு இந்த திசையில் செயல்படுவதால், தெற்கு ஆசியாவின் வாசலாக திரிபுரா மிக விரைவில் மாறப்போகிறது.

    புதிய இலக்குகளுடன் புதிய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தோம். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை பா.ஜனதா செய்கிறது என்பதையும், உங்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்கிறோம் என்பதையும் எங்கள் உறுதிப்பாடு நிரூபிக்கிறது. திரிபுராவை வெறும் 5 ஆண்டுகளில் வளர்ச்சியின் பாதையில் பா.ஜனதா கொண்டு வந்திருக்கிறது.

    ஒரு காலத்தில் திரிபுராவில் ஒரு கட்சி மட்டுமே கொடி ஏற்ற அனுமதிக்கப்பட்டது. போலீஸ் நிலையங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் இன்று பா.ஜ.க. அரசு திரிபுராவை அச்சம், மிரட்டல் மற்றும் வன்முறையில் இருந்து விடுவித்துள்ளது. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிறுவி இருக்கிறது.

    நாடு முழுவதும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக பா.ஜ.க. பாடுபட்டு வருகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வஞ்சகத்தில் ஈடுபட்டுள்ளனர். மோசமான ஆட்சியின் பழைய வீரர்கள் கைகோர்த்துள்ளனர். அவர்களின் பெயர் அல்லது கோஷம் எதுவாக இருந்தாலும், அவர்களுக்குப் போகும் ஒவ்வொரு வாக்கும் திரிபுராவை பின்னுக்குத் தள்ளும். எனவே வாக்குப்பதிவின் போது தாமரையின் பட்டனை அழுத்தினால் போதும் என தெரிவித்தார்.

    • திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • திரிபுராவில் வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    அகர்தலா:

    திரிபுராவில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல் மந்திரியாக மாணிக் சஹா செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்தின்போது இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி மாணிக் சஹா, சூழ்நிலையை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் தாமரை சின்ன பட்டனை அழுத்துவார்கள். தேர்தல் முடிவு என்ன வரப்போகிறது என்று அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் என அம்மாநில பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

    • திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ், பா.ஜ.க. வெளியிட்டன.

    அகர்தலா:

    வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இந்த 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    அதன்படி திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளன. முதற்கட்டமாக 48 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. அறிவித்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் முதற்கட்டமாக 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    • திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    அகர்தலா:

    வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என அம்மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை பொருட்படுத்தாமல் மக்களுக்காக பா.ஜ.க. உழைத்து வருகிறது. திரிபுராவில் கடந்த தேர்தலை விட எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    • மாநிலங்களுக்கான சிறப்பு உதவியின் கீழ், இரண்டு இணைய இணைப்பு திட்டங்களுக்காக, மத்திய அரசு ரூ.50 கோடியை திரிபுராவிற்கு அனுமதித்துள்ளது.
    • பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளது.

    திரிபுரா துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா நேற்று திரிபுராவில் உள்ள 108 பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைகளில் இணைய இணைப்பை தொடங்கி வைத்தார்.

    இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் 4ஜி செறிவூட்டல் திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை அனுபவிப்பார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம் 129 தொலைதூர கிராமங்களில் செல்போன் டவர்களை நிறுவ உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 583 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் தகுதியை ஆய்வு செய்வதற்காக மறு ஆய்வு செய்யப்படுகிறது.

    மாநிலங்களுக்கான சிறப்பு உதவியின் கீழ், இரண்டு இணைய இணைப்பு திட்டங்களுக்காக, மத்திய அரசு ரூ.50 கோடியை திரிபுராவிற்கு அனுமதித்துள்ளது.

    அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களுக்கு ஃபைபர் இணைப்புகளை வழங்குதல் மற்றும் பொது வைஃபை, ஹாட்ஸ்பாட் வழங்குதல் ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளது.

    • பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது.
    • திரிபுராவில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    அகர்தலா :

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

    பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

    காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ராமஜென்மபூமி வழக்கை நீண்ட காலமாக கோர்ட்டிலேயே வைத்து இழுத்தடித்தன.

    ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தவுடன் பிரதமர் மோடி பிரமாண்ட ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.

    நான் சொல்வதை ராகுல்காந்தி கேட்டுக் கொள்ளட்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும்.

    பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது. 2019-ம் ஆண்டு, காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 10 நாட்கள் கழித்து, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திரிபுராவில் கடும் பனி நிலவுதை தொடர்ந்து மோசமான வானிலை ஏற்பட்டது.
    • இதனால் உள்துறை மந்திரி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனி விமானத்தில் சென்றார்.

    இந்நிலையில், திரிபுராவில் கடும் பனி நிலவுதை தொடர்ந்து மோசமான வானிலை ஏற்பட்டது. இதையடுத்து உள்துறை மந்திரி அமித்ஷா சென்ற விமானம் அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    ×