என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திரிபுரா சட்டசபை தேர்தல் - 11,13ம் தேதிகளில் நடக்கும் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
- திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
- திரிபுராவில் வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
அகர்தலா:
திரிபுராவில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல் மந்திரியாக மாணிக் சஹா செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்தின்போது இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி மாணிக் சஹா, சூழ்நிலையை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் தாமரை சின்ன பட்டனை அழுத்துவார்கள். தேர்தல் முடிவு என்ன வரப்போகிறது என்று அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் என அம்மாநில பா.ஜ.க. தெரிவித்துள்ளது.