search icon
என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வென்றது.
    • வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி வங்காளம் முழுவதும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஐபிஎல் சீசனில் சாதனை படைத்த வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை தனிப்பட்ட முறையில் வாழ்த்த விரும்புகிறேன்.

    வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.
    • சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரம்.

    வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தது.

    அதன்படி, நேற்று இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக ரீமால் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110- 120 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.

    மேலும், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

    ரீமால் புயலின் தாக்கத்தால் மேற்குவங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.

    தொடர்ந்து, சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • இன்று மதியம் முதல் நாளை காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம்.

    வங்கக்கடலில் உருவான ரீமால் புயல், அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் இன்று இரவு மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயல் எதிரொலியாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச என 394 விமானங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று மதியம் முதல் நாளை காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

    • நாளை காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.
    • கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ரீமால் புயல், வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.

    இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மதியம் 12 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை 21 மணி நேரம் விமானச் சேவை நிறுத்தப்படுகிறது.

    கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    • பாஜக வேட்பாளர் மீது கற்கள் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்குதல்.
    • உள்ளூர் காவல்துறை எந்தவித பாதுகாப்பும் அளிக்கவில்லை என புகார்.

    மேற்கு வங்கத்தில் ஜார்கிரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பிரனாத் துடு மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்கம் மொங்லோபோத்ராவில் உள்ள வாக்குச்சாவடிக்கு பாஜக வேட்பாளர் ஆய்வு செய்ய சென்றபோது தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

    அங்கு, பாஜக வேட்பாளர் மீது கற்கள் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில், பாஜக வேட்பாளர் பிரனாத் துடு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    உள்ளூர் காவல்துறை எந்தவித பாதுகாப்பும் அளிக்கவில்லை என பாஜக வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

    பாஜக வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ய சென்றதாக பாஜக வேட்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    • பா.ஜனதா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வாக்குகளை சூறையாட முயற்சி செய்கிறது- திரிணாமுல் காங்கிரஸ்
    • வாக்கு இயந்திரத்தில் பா.ஜனதா டேக் தொங்கவிடப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலின் 6-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா உள்ளிட்ட 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கியது. பங்குராவில் தொகுதியில் உள்ள ரகுநாத்பூரில் ஐந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக எழுதப்பட்ட டேக் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் "பா.ஜனதா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வாக்குகளை சூறையாட முயற்சி செய்கிறது என்பதை தொடர்ந்து மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். இன்று ஐந்து வாக்கு இயந்திரத்தில் பா.ஜனதா டேக் தொங்கவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளத.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் "வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய பூத் ஏஜென்ட்கள் கையெழுத்திட்ட பொதுவான டேக் தொங்கவிடப்படும். வாக்கு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்படும்போது ஆய்வு மேற்கொண்டு ஏற்பாடு செய்யும்போது ஹாலில் பா.ஜனதா வேட்பாளருடைய பிரதிநிதிகள்தான அங்கு இருந்தார்கள். இதனால் அவர்களுடைய கையெழுத்து மட்டும் வாங்கப்பட்டது.

    எனினும், 56,58,60,61,62 ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்படும்போது அனைத்து ஏஜென்ட்களும் இருந்தனர். அவர்களுடைய கையெழுத்துகள் பெறப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிகளின் பின்பற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

    • கொல்கத்தாவிற்கு மே 12-ந்தேதி மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்தார்.
    • 14-ந்தேதி கடைசியாக தென்பட்ட இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம்.

    வங்காள தேசம் நாட்டின் ஆளும் கட்சி எம்.பி. அன்வாரூல் அஷீம் அனார் கொலை செய்யப்பட்ட விதம் பதைபதைக்க வைத்துள்ளது. போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    வங்காள தேசம் நாட்டின் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அன்வாரூல் அஷீம் அனார். இவர் அடிக்கடி கொல்கத்தா வருவதும், நண்பர்களை சந்திப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12-ந்தேதி கொல்கத்தா வந்திருந்தார். கொல்கத்தாவில் தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் உடன் தங்கியிருந்தார். பின்னர் மே 13-ந்தேதி முதல் காணாமல் போனார். அவர் கடைசியாக கொல்கத்தாவின் புறநகரில் உள்ள நியூ டவுனின் அடிக்குடிமாடி வளாகத்தில் தென்பட்டதாகவும், அதன்பின் கொலை செய்யப்பட்டு தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பக்கெட்டில் எடுத்துச் சென்று பல்வேறு இடங்களில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

    போலீசார் விசாரணையில் அன்வாரூல் அஷீம் அனார் சில திட்டமிட்டு கொடூரமான வகையில் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில் மும்பை கசாப் கடையில் பணியாற்றிய ஜிகாத் ஹவல்தார் (24) என்பவரை கைது செய்தனர். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். சமீபத்தில் ஒரு சிலரால் கொல்கத்தா அழைத்து வரப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக கொல்கத்தா வந்து மும்பையில் உள்ள கறிக்கடைகயில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவர் அன்வாரூல் அஷீம் அனாரை கொாலை செய்து தோலை உரித்து, துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை பிளாஸ்டிக் பாக்கெட்டில் நிரப்பி நகரில் பல பகுதிகளில் வீசியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட அக்தர்ருஷ்மான் என்பரையும் போலீசார் தேடிவருகின்றனர். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேசத்தவர் ஆவார். கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

    இதற்கிடையில் கொலை செய்வதற்காக 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

    பெண் ஒருவர் மாய வலை வீசி அவரை சிக்கவைத்து அந்த அடிக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய உதவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு பெண்ணை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட இடத்திற்கு ஒரு பெண்ணுடன் எம்.பி. சென்றது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

    இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தால்தான் கொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

    • கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை கொல்கத்தா ஐகோர்ட் ரத்துசெய்தது.
    • ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்த தீர்ப்பை ஏற்கமாட்டேன் என்றார் மம்தா பானர்ஜி.

    கொல்கத்தா:

    மேற்குவங்காளத்தில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை ரத்துசெய்து உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட், 1993-ம் ஆண்டு சட்டத்தின்படி ஓ.பி.சி. புதிய பட்டியலை தயாரிக்குமாறு மேற்குவங்காள மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அம்மாநிலத்தில் 5 லட்சம் ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என கூறிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடரும். இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், நான் நீதித்துறையை மதிக்கிறேன். இந்த உத்தரவை பிறப்பித்தவரின் தீர்ப்பை நான் ஏற்கவில்லை; அதை ஏற்கமாட்டேன். ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடரும். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன். அவர்களுக்கு என்னை தெரியாது. நான் அவர்களின் விருப்பத்துக்கு தலைவணங்குபவள் அல்ல.

    சட்டப்படி ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். நாங்கள் ஆய்வுகளை நடத்தினோம். பல அறிக்கைகளை சமர்ப்பித்த குழுவின் தலைவராக உபென் பிஸ்வாஸ் இருந்தார். அப்போதும் கூட இந்த விஷயத்தில் கோர்ட்டில் வழக்குகள் இருந்தன. ஆனால் மேல்முறையீடு செய்தவர்கள் அந்த வழக்குகளில் தோல்வி அடைந்தனர் என தெரிவித்தார்.

    • புதிய சட்டம் 1993-ன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியல் தயாரிக்கப்படும்.
    • 2010-ம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் அப்படியே இருக்கும்.

    கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்காளத்தில் 2010-க்குப் பிறகு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய சட்டம் 1993-ன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் மேற்கு வங்காள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் தயாரிக்கும். 2010-ம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் அப்படியே இருக்கும்.

    2010-ம் ஆண்டுக்குப் பிந்தைய ஓபிசி பரிந்துரைகள் ரத்து செய்யப்படுகிறது. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஓபிசி சான்றிதழ் பெற்று ஓபிசி இடஒதுக்கீடு மூலம் வேலை பெற்றிருந்தால் அல்லது அதற்கான நடைமுறை சென்று கொண்டிருந்தால் அது ஒடதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்களுடைய வேலையை பாதிக்காது இவ்வாறு மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை தங்களால் ஏற்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன் ஆசிரியர்கள் நியமனம் செல்லாது என மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து மேற்கு வங்காள அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் மேற்கு வங்காள உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதித்தது.

    • கடந்த 12ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்திருந்தார்.
    • காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்தனர்.

    மேற்கு வங்கத்தில் மாயமான வங்கதேசம் எம்.பி அன்வருல் அசீம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    எம்.பி அன்வருல் அசீம், கடந்த 12ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்திருந்தார்.

    ஆனால், 14ம் தேதிக்கு பிறகு, அன்வருல் அசீமை தொடர்பு கொள்ள இயலாக நிலையில், செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

    காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    வங்கதேச எம்.பி., கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச தலைநகர் தாக்காவில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்?
    • மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது.

    2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

    கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர்ந்தார்.

    பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித், "மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்? உங்கள் விலை ₹10 லட்சம். ஏனென்றால் நீங்கள் மேக் அப் போடுகிறீர்கள். மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது" என்று இழிவாக பேசியுள்ளார்.

    இதன் அடிப்படையில், பாஜக வேட்பாளரான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

    • கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.
    • அபிஜித் பாஜக சார்பாக தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

    கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்து பாஜகவில் சேர்ந்தார்.

    பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அபிஜித் கீழ்த்தரமான விமர்சனம் செய்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதன் அடிப்படையில், பாஜக வேட்பாளரான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

    ×