என் மலர்
மேற்கு வங்காளம்
- கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்.
- மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து, மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படும்போது, சிபிஐ/இடி விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்டனையின்றி தங்கள் முறைகேடுகளைத் தொடர அனுமதிக்கப்படுவது மூர்க்கத்தனமானது. குறிப்பாக பாஜகவுடன் இணைந்த பிறகு.
இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார்.
- எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் பாராளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்காக நான் பணியாற்றுகிறேன். எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
2007-ம் ஆண்டு உலக கோப்பைக்கு உற்சாகமாக இருந்ததைப் போல தற்போதும் உற்சாகமாக இருக்கிறேன்.
குஜராத் எனது ஜென்ம பூமி மற்றும் மேற்கு வங்காளம் எனது கர்ம பூமி.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். ஆனால் காலம் மாறுகிறது, மாற்றம் நல்லதுக்காகவே நடக்கும் என தெரிவித்தார்.
#WATCH | West Bengal: Former cricketer and Trinamool Congress (TMC) candidate from Berhampore Yusuf Pathan says, "The field is very different but the expectations of the people remain the same- that I work for them, and carry forward the work done by my team (TMC)... I am as… pic.twitter.com/1XGmyrKhTW
— ANI (@ANI) March 21, 2024
- மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?.
- மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் தேர்தலையொட்டி மாற்றப்படுவார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆறு மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் "பா.ஜனதாவின் இழிவான யுக்திகள் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிக்கின்றன. மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?. தேர்தல் ஆணையமா?. அல்லது எச்.எம்.வி.யா? (ECI or HMV?)
மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள். நாங்கள் 2024 தேர்தல் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.
- சிஏஏ மூலம் குடியுரிமை பெற விண்ணப்பிக்க முடியும் என மத்திய மந்திரி பேச்சு.
- சிஏஏ மூலம் விண்ணப்பித்தால் மந்திரி பதவி பறிபோகிவிடும் என்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான இணைய தளம் மற்றும் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சிஏஏ-வை செயல்படுத்தமாட்டோம் என மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய இணை மந்திரி ஷாந்தனு தாகூர், சிஏஏ மூலமாக குடியுரிமை பெற விண்ணப்பம் செய்வேன் எனக் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவரது மந்திரி பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக ஷாந்தனு தாகூர் கூறுகையில் "ரிஜிஸ்டர் செய்யப்பட்ட சமூக அமைப்புகள் மூலம் பெறப்பட்ட சான்றிதழ் மூலம் கூட குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு நாங்கள் குடியுரிமை வழங்குவோம். நான் கூட குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பேன். இருந்த போதிலும் என்னுடைய பாட்டியின் அம்மா குடிபெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் குடியுரிமை பெற்றுள்ளனர். இதனால் நான் விண்ணப்பிக்க தேவையில்லை" என்றார்.
மேலும், எதிர்க்கட்சிகளால் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. மம்தா பானர்ஜி என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும். குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதால், எனக்கு வசதிகள் இல்லாமல் போய் விடுமா? என்று பார்க்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், மத்திய இணை மந்திரி ஷாந்தனு தாகூரின் மத்திய மந்திரி பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பிரத்யா பாசு "ஷாந்தனு தாகூர் இந்திய குடிமகனாக இருந்து, ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், மீண்டும் குடியுரிமை கேட்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது" என்றார்.
மற்றொரு தலைவர் சந்திரமா பட்டச்சார்யா "சாந்தனு தாகூர் எப்போது விண்ணப்பிப்பார் என்று நாங்கள் காத்திருக்கிறோம், ஏனெனில் அவர் விண்ணப்பித்தவுடன், அவர் இனி இந்திய குடிமகன் இல்லை என்பதால் அவரது அமைச்சர் பதவி போய்விடும்" என்றார்.
ஷாந்தனு தாகூரின் மூதாதையர்கள் வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தன்னால் சிசிஏ-யின் கீழ் விண்ணப்பிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது.
- வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன்.
மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் "வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன். தேர்தலில் இந்த இரண்டிற்கும் முடிவு கட்ட வேண்டும். நான் மக்களுக்கான இருக்கிறேன். மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது" என்றார்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு விவகாரங்களில் அம்மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ்க்கும், மாநில அரசுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. துணைவேந்தர் நியமனம் விவகாரத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
சந்தேஷ்காளி விவகாரித்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார்.
- தலையில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில், மம்தா பானர்ஜி மருத்துவமனையில் நெற்றியில் காயத்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பெண்களுக்கு எதிராக நில அபகரிப்பு, கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷேக் ஷாஜகான் மீது குற்றச்சாட்டு.
- சோதனையின்போது அமாலாக்கத்துறை அதிகாரிகளை ஆதரவாளர்கள் தாக்கிய வழக்கில் ஷேக் ஷாஜகான் கைது.
மேற்கு வங்காளம் சந்தேஷ்காளி பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்றச் செயலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த ஷேக் ஷாஜகான் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களின் சொத்துகளை அபகரித்தல், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரம், அரசு நலத்திட்ட நிதிகளை பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளை அங்குள்ள பெண்கள் இவர் மீது முன்வைத்தனர்.
மேலும், வீதிகள் இறங்கி ஆயுதங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர் திரணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது, அவர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஷேக் அகமது கைது செய்யப்பட்டார்.
அவரை மத்திய அமைப்பினர் ஒப்படைக்க மேற்கு வங்காள போலீசார் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஷேக் ஷாஜகானுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேஷ்காளியின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஷேக் ஷாஜகானால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என அம்மாநில ஆளுநர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.
- இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 இடங்களில் 2 இடங்களை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு செய்தார். ஆனால், காங்கிரஸ் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தியா கூட்டணியில் இரு கட்சிகளும் இருக்கின்றன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்து வந்தது. கடந்த மாதம் இறுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு கட்சிகளும் தயாராக இருக்கின்றன என தகவல் வெளியானது.
ஆனால், தனது முடிவில் மம்தா உறுதியாக உள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இந்த நிலையில்தான் நேற்று 42 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கூட்டணி இல்லை என முடிவானது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் "மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்ள விருப்பமாக உள்ளோம் என தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
ஜெய்ராம் ரமேஷ்
பேச்சுவார்த்தை மூலம் இறுதி கட்டத்தை எட்டி ஒப்பந்தம் மேற்கொள்ளும முறையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது. தனிப்பட்ட முறையில் ஒருதலைபட்சமாக அறிவிப்பு ஏதும் வெளியிடுவதில்லை. பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றாக போட்டியிடுவதைத்தான் காங்கிரஸ் கட்சி எப்போதும் விரும்புகிறது" என்றார்.
மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறுகையில் "இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார். இந்தியா கூட்டணியில் இருந்து அவர் பிரிந்து தனியாக போட்டியிடுவதன் மூலம், என்னுடைய மனவருத்தத்துடன் இருக்க வேண்டாம், நான் பா.ஜனதாவுக்கு எதராக போட்டியிடும் அணியில் இல்லை என்ன செய்தியை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்" என்றார்.
- 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
இதில், INDIA கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
42 வேட்பாளர்களையும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.
42 பேர் கொண்ட பட்டியலில், மஹூவா மொய்த்ரா, பெர்ஹாம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை எதிர்த்து யூசுப் பதான் போட்டியிடுகிறார்.
- மேற்கு வங்காள அரசு ராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
- ராம நவமிக்கு மேற்கு வங்காள அரசு பொது விடுமுறை அறிவிப்பது முதல் முறை ஆகும்.
கொல்கத்தா:
ராம நவமி பண்டிகை அடுத்த மாதம் 17-ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள அரசு ராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்காள ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராம நவமியான ஏப்ரல் 17-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ராமநாவமியின் போது ஹவுரா மற்றும் ஹுக்ளி மாவட்டங்களில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
மேற்கு வங்காள அரசு ராம நவமிக்கு பொது விடுமுறை அறிவிப்பது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் இன்று நான் நுழைந்துள்ளேன்.
- திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.
மேற்கு வங்காள பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்தார்
இதன் பின்னர் பேசிய அபிஜித், "பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் இன்று நான் நுழைந்துள்ளேன். கட்சி எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் என்னால் முடிந்தவரை அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்
மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசை அகற்றுவதற்கான அடித்தளத்தை இந்த மக்களவை தேர்தலில் உருவாக்குவதே எங்களின் பிரதான நோக்கம். மேற்கு வங்காளம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு பாஜக ஆட்சிக்கு வருவது அவசியம். திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.
கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்தார்.
இந்நிலையில் பாஜகவில் சேர்ந்த அபிஜித் வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார் என்றும், அவர் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து விரைவில் பாஜக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
- நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.
- பிரதமர் மோடி பராசத் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான், 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக சொத்துகளை பறித்தல், பணம் பறித்தல், கூட்டு பலாத்காரம் செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அங்குள்ள பெண்கள் குற்றம் சாட்டினர். தெருக்களில் ஆயுதங்களுடன் களமிறங்கி போராடியதால் ஷேக் ஷாஜகானுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கியது.
இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பாதையை திறந்துவைத்து, ரெயிலில் பயணம் செய்தார். தொடர்ந்து 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் என்ற இடத்தில் உள்ள கச்சாரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசினார்.
பாதிக்கப்பட்ட சந்தேஷ்காளியில் உள்ள பெண்கள் பராசத் பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், பராசத் பொதுக்கூட்டம் முடிந்ததும் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காளி பெண்கள் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். அவர்களது குறைகளைக் கேட்ட பிரதமர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என பாஜக தலைவர் அக்னிமித்ரா பவுல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.