search icon
என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஓட்டல் நிர்வாகத்தின் புதிய முயற்சியை பாராட்டி வருகின்றனர்.
    • ஒரு பயனர் இந்த இடம் எனக்கு எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    நவீனமயமாகி வரும் இன்றைய உலகில் ஓட்டல்களிலும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பெரிய நகரங்களில் சில ஓட்டல்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ரோபோக்களை சப்ளை பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

    இந்நிலையில் கொல்கத்தாவில் ஒரு ஓட்டலில் டிரோன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு காபி வழங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கு சால்ட்லேக் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த வசதியை செய்துள்ளனர்.

    இந்த ஓட்டலில் காபியை ஆர்டர் செய்துவிட்டு அருகில் உள்ள இடங்களில் சென்று அமர்ந்துவிடலாம். அவர்களுக்கு டிரோன் மூலம் காபி வினியோகிக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஓட்டல் நிர்வாகத்தின் புதிய முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

    அதில் ஒரு பயனர் இந்த இடம் எனக்கு எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், எனக்கு டிரோன் மூலம் இப்படி ஒரு காபி கிடைக்குமா? ஆம் என்றால் நான் வருகிறேன் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல"
    • இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது”

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    அன்பினால் பெண் சிங்கத்திற்கு சீதா பெயரிட்டிருப்பார்கள். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது" என நீதிபதி இதற்கு பதில் அளித்தார்.

    இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது" என விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    ரிட் மனுவான இதனை பொதுநல வழக்காக மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவு. மேலும் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்குப் அக்பர், சீதா என பெயர் சூட்டப்பட்டதா இல்லையா என்பது தொடர்பான அறிவுறுத்தல்களைப் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள்.
    • என்னை மத ரீதியாக தாக்கி பேசுகிறார்கள், டர்பன் அணிந்திருந்ததால் என்னை காலிஸ்தானியர் என கூறுவதாக பேசியுள்ளார்.

    பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள். சீக்கியர்களை மோசமாகச் சித்தரிக்கும் பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க காவல்துறை அதிகாரி ஒருவரின் வீடியோவை தனது X பக்கத்தில் மம்தா பானர்ஜி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசும் காவல்துறை அதிகாரி, என்னை மத ரீதியாக தாக்கி பேசுகிறார்கள், டர்பன் அணிந்திருந்ததால் என்னை காலிஸ்தானியர் என கூறுவதாக பேசியுள்ளார்.

    அந்த வீடியோ பதிவில்,"பாஜகவின் பிரிவினைவாத அரசியல் அரசியலமைப்பு சட்டத்தையே மீறும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள். மேற்கு வங்கத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன். அதைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

    • பொது விநியோகத் திட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.
    • விவசாயிகளின் போராட்டத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன், பாஜக தலைமையிலான மத்திய அரசு, தனது அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பலன்களை பொது மக்கள் பெறாத வகையில், மாநிலத்தில் உள்ள மக்களின் ஆதார் அட்டையை முடக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    பிர்பூம் மாவட்டத்தில் நடைபெற்ற பொது விநியோகத் திட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கவனமாக இருங்கள், அவர்கள் (பாஜக தலைமையிலான மையம்) ஆதார் அட்டைகளை செயலிழக்கச் செய்கிறார்கள்.

    வங்காளத்தின் பல மாவட்டங்களில் பல ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் (பாஜக தலைமையிலான மையம்) தேர்தலுக்கு முன் மக்கள் பலன்களைப் பெறக்கூடாது என்பதற்காக ஆதார் அட்டைகளை நீக்குகிறார்கள்.

    ஆனால், ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், திட்டங்களின் பயனாளிகளுக்கு நாங்கள் தொடர்ந்து பணம் செலுத்துவோம். ஒரு பயனாளி கூட பாதிக்கப்பட மாட்டார்கள்.

    அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு உத்தரவாதம் அளிக்கக் கோரி நடத்திய போராட்டத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் மீதான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
    • 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    சிலிகுரி உயிரியல் பூங்காவில் 'சீதா' என்ற பெண் சிங்கம் மற்றும் 'அக்பர்' என்ற ஆண் சிங்கத்தை ஒரே பகுதிக்குள் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் அம்மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு வருகின்ற 20 தேதி விசாரணைக்கு வருகிறது. 

    • பா.ஜ.க. தனது அரசியல் நலன்களை முன்னெடுக்க மத்திய விசாரணை அமைப்புகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
    • எதிர்க்கட்சி இல்லாமல் நாடு ஜனநாயக நாடாக இருக்காது.

    கொல்கத்தா:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கொல்கத்தாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து என்னால் எதையும் கூற இயலாது. ஏனெனில் அந்தக் கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவிலோ அக்கூட்டணியின் கூட்டங்களிலோ நான் இடம்பெறவில்லை. ஆனால், பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் மீண்டும் ஆட்சிக்கு வருவது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்து கொண்டுள்ளதாக நான் நம்புகிறேன்.

    பா.ஜ.க. மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய ஜனநாயகத்தை அவர்கள் சீர்குலைத்து விடுவார்கள். ஜனநாயக அமைப்புகளை அக்கட்சியினர் படிப்படியாக சிதைத்து விடுவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியை தாங்களாகவே அறிவித்துக் கொள்ளும் ஆளுங்கட்சியைக் கொண்ட பல்வேறு நாடுகளைப் போன்று இந்தியாவும் மாறிவிடும்.

    நிலையான, ஆழமாக வேரூன்றிய கட்சிகளைக் கொண்டு இந்தியா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ஆனால், பல்வேறு கட்சிகளை உடைத்து அதன் மூலம் பா.ஜ.க. தனது கூட்டணியை உருவாக்கிக் கொள்கிறது. அதன் முக்கிய கூட்டணிக்கட்சிகளாக தேசியவாத காங்கிரஸின் ஒரு பிரிவு, சிவசேனாவின் ஒரு பிரிவு ஆகியவை உள்ளன. அ.தி.மு.க.வின் ஒரு பிரிவும் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக இடம்பெற வாய்ப்புள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக கடத்திச் சென்று விட்டது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் நிதீஷ்குமாரை விட்டு விலகலாம். நிலையான அரசியல் கட்சிகளுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பதில்லை.

    பா.ஜ.க. துப்பாக்கி முனையில் கூட்டணிக் கட்சிகளை வைத்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியோ பரஸ்பரம் மதித்து நடந்து கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதாதளம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதுவே இரண்டு அணிகளுக்கும் இடையிலான வேறுபாடாகும்.

    பா.ஜ.க. தனது அரசியல் நலன்களை முன்னெடுக்க மத்திய விசாரணை அமைப்புகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உடைப்பதில் பா.ஜ.க. எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்பட்டது என்பதை நாம் கண்டோம்.

    வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா முடிவெடுத்தது குறித்துக் கேட்கிறீர்கள். அது பற்றி எனக்குத் தெரியாது. திரிணாமூல் காங்கிரசுடனான கூட்டணி முறியவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியா கூட்டணியில் திரிணாமூல் காங்கிரசும் இருக்காது என்ற முடிவுக்கு நான் ஏன் வர வேண்டும்?

    "ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கொள்கையானது முற்றிலும் அரசியல் சட்ட விரோதமானதும், கூட்டாட்சிக்கு எதிரானதுமான சிந்தனையாகும். அதை அமல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் ஐந்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்தத் திருத்தங்களைச் செய்வதற்கான பெரும்பான்மை பலத்தை அவர்களால் (பா.ஜ.க.) திரட்ட முடியுமா என்பது சந்தேகமே.

    எதிர்க்கட்சி இல்லாமல் நாடு ஜனநாயக நாடாக இருக்காது. "ஒரே நாடு-ஒரே தேர்தல்' முறையில் மக்களவைக்கும், 29 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு மாநில அரசு சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுவிட்டால் அப்போது என்ன செய்வது? ஒரு மாநில அரசு ஆறு மாதங்களில் கவிழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு அந்த மாநிலத்தில் தேர்தலையே நடத்த மாட்டீர்களா?

    என்னைப் பொறுத்தவரை தேர்தல் பத்திரங்கள் என்பவை சட்டபூர்வமான லஞ்சமாகும் என்றார்.

    • ராஜினாமா கடிதத்தை, மேற்குவங்க முதல்வரிடம் வழங்கியுள்ளார்.
    • தனது தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைமை மீது அதிருப்தி.

    மேற்குவங்க எம்.பியும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மிமி சக்ரபோர்த்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    தனது ராஜினாமா கடிதத்தை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

    தனது தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    ஆனால் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலிடம் இன்னும் ஏற்கவில்லை எனவும் மிமி சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.

    தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி மக்களவை சபாநாயகரிடம் வழங்காமல், மம்தாவிடம் வழங்கியதற்கான காரணம் குறித்து மிமி சக்ரபோர்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த மிமி, " கட்சி மேலிடத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்ததும், ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பேன்" என்றார்.

    • பஞ்சாப் செல்லும் அவர் பொற்கோவில் சென்று பிரார்த்தனை செய்கிறார்.
    • விவசாயிகள் போராட்டம் நடத்தும் நேரத்தில் மம்தா பயணம் மேற்கொள்கிறார்.

    மேற்கு வங்காள முதல் மந்திரியாக இருக்கும் மம்தா பானர்ஜி வருகிற 21-ந்தேதி பஞ்சாப் மாநிலம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் செல்லும் அவர் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அத்துடன் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி டெல்லி மற்றும் பஞ்சாபில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மம்தா பானர்ஜி அங்கே செல்கிறார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்தேஸ்காலி பகுதியில் வன்முறை வெடித்ததால் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது
    • ஊடகங்களுக்கும் காவல்துறை தடையிட்டு பகுதி முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது

    மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) சார்பில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மேற்கு வங்கத்தில் கவர்னராக சிவி ஆனந்த போஸ் பதவி வகித்து வருகிறார்.

    மம்தாவின் அரசுக்கும் கவர்னருக்கும் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்து வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன் அம்மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட சந்தேஸ்காலி (Sandeskhali) பகுதியில், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை ஷேக் ஷாஜகான் (Sheikh Shajahan) எனும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் ரெய்டு நடத்த சென்றது. அங்கு அவரது ஆதரவாளர்களால் அமலாக்க துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.

    ஷேக் அமலாக்க துறையிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை அமலாக்க துறை தேடி வருகிறது.

    இது தொடர்பாக பா.ஜ.க. ஆதரவாளர்களுக்கும், ஷேக்கின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை வெடித்தது.

    இதனையடுத்து அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, அங்கு மனித உரிமைகள் பறி போவதாகவும், நிலைமையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தார்.

    இந்நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து அறிய இன்று மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் அப்பகுதிக்கு விரைந்தார்.

    ஆனால், செல்லும் வழியிலேயே அவரது பாதுகாப்பு வாகனங்களை ஷேக்கின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

    அவரது காரின் அருகே பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினார்.

    பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ள காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    • இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும்.

    மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது.

    இது குறித்த அறிவிப்பில், "வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் (ராஜ்யசபா) தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்ட 4 பேர் போட்டியிடுகிறார்கள்."


     

    "பத்திரிக்கையாளர் சகாரிகாகோஸ், கட்சியின் தலைவர் சுஷ்மிதா தேவ், எம்.டி. நதிமுல்ஹக் மற்றும் மம்தா பாலா தாக்கூர் ஆகியோர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை தெரிவித்துக் கொள்கிறோம்."

    "வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நமது கட்சியின் சார்பில் ஒவ்வொரு இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும்," இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்திலும் கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 196 குழந்தைகள் சிறையில் பிறந்துள்ளன.
    • சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுவரை 196 குழந்தைகள் பிறந்து உள்ளதாகவும் கொல்கத்தா ஐகோர்ட்டில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    'இதுகுறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி' கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    மேற்கு வங்காள மாநில சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த இல்லங்களில் ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.


    சமீபகாலமாக சிறைகளில், பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாகிறார்கள். இதுவரை 196 குழந்தைகள் சிறையில் பிறந்துள்ளன. எனவே பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம், நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மேற்கு வங்காளத்தில் பட்ஜெட் தாக்கலின்போது பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
    • அப்போது பேசிய மம்தா பானர்ஜி, அரசியல் செய்ய இது இடமில்லை பட்ஜெட் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:

    எதிர்க்கட்சிக்கு ஏதேனும் கருத்து இருந்தால் பட்ஜெட் முடிந்த பிறகு விவாதிக்கலாம். கருத்து தெரிவிக்க இங்கு சுதந்திரம் உள்ளது.

    எதிர்க்கட்சிக்கு அரசியல் செய்ய இது இடமில்லை. நாங்கள் என்ன வேலை செய்தோம் என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. பா.ஜ.க.வின் இந்த கேவலமான அரசியலை கண்டிக்கிறோம். அவர்கள் மாநிலத்திற்கு எதிரானவர்கள், நல்லதை விரும்பவில்லை.

    பட்ஜெட் தாக்கல் செய்யவிடாமல் இருப்பதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் கருத்தை பேச்சில் சொல்லலாம். இது ஒன்றும் உங்கள் பா.ஜ.க. கட்சி அலுவலகம் அல்ல. இது சட்டசபை.

    பா.ஜ.க. 147 எம்.பி.,க்களை பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தாலும், நாங்கள் அந்த வழியில் செல்ல விரும்பவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

    நீங்கள் பலவீனமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் அப்படி இல்லை. அதை எதிர்த்துப் போராடுவோம். தைரியம் இருந்தால், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பேசுங்கள், அதற்கு முன் பேசவேண்டாம் என தெரிவித்தார்.

    ×