என் மலர்
மேற்கு வங்காளம்
- தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.
- 18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார்.
கொல்கத்தா:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு பிரச்சனையால் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகியவை தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ்குமாரும் அங்கிருந்து வெளியேறி உள்ளார். இதனால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி பலமாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் பாக்டோக்ராவில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக கூறியதாவது:-
இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. ஆங்காங்கே சில தடைகள் உள்ளன. ஆனால் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவோம். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.
18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார். 2-வது கூட்டம் பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18-ந் தேதிகளிலும், 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி மும்பையிலும் நடந்தது.
இந்த 3 கூட்டங்களிலும் அவர் முக்கிய பங்கு வகித்ததால் பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தை கடைசி வரை எதிர்த்து போராட நிதிஷ்குமாரை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
- இரண்டு நாட்கள் ஓய்வுக்காக டெல்லி புறப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையை இரண்டு நாட்களுக்கு பிறகு, ராகுல் காந்தி நாளை (ஜனவரி 28) மேற்கு வங்காளம் மாநிலத்தில் துவங்குகிறார். நாளைய யாத்திரை மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் துவங்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை ஜனவரி 14-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து துவங்கியது. அங்கிருந்து அசாம் வழியாக மேற்கு வங்க மாநிலத்தின் கூச்பெஹர் மாவட்டத்தை அடைந்தது. கடந்த வியாழன் கிழமை (ஜனவரி 25) கூச்பெஹரில் ரோட் ஷோ நடத்திய ராகுல் காந்தி அதன் பிறகு இரண்டு நாட்கள் ஓய்வுக்காக டெல்லி புறப்பட்டு சென்றார்.
"சிறு இடைவெளியை தொடர்ந்து ராகுல் காந்தி நாளை காலை 11.30 மணிக்கு பாக்தோரா விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் ஜல்பாய்குரிக்கு சென்று யாத்திரையில் மீண்டும் கலந்து கொள்கிறார். இந்த முறை யாத்திரை நடைபயணம் மற்றும் பேருந்து என இருவிதங்களிலும் நடைபெறும். நாளை இரவு சிலிகுரி பகுதியில் உறக்கத்திற்காக யாத்திரை நிறுத்தப்படும்," என மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் சுவங்கர் சங்கர் தெரிவித்து இருக்கிறார்.
- பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.
- கடந்த டிசம்பர் மாதம் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள மாநிலத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கான நிதியை ஒதுக்காமல் நிலுவை வைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி மம்தா பானர்ஜி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால் ஒருமாதமாகியும் மத்திய அரசு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி ஏழு நாள் கெடுவிதித்துள்ளார்.
நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் "நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்றால், நாங்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. திட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட நிதியையும், மாநில அரசு ஒரு குறிப்பிட்ட நிதியையும் ஒதுக்கும்.
அந்த வகையில் மத்திய அரசு சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மேற்கு வங்காளத்திற்கு ஒதுக்கீடு செய்யாமல் நிலுவையில் வைத்திருப்பதாக மேற்கு வங்காள அரசு தெரிவித்துள்ளார்.
- காங்கிரசுடன் உறவை முறிக்க காரணமானவர் குறித்து திரிணமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறினார்.
- அவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை நிருபர்கள் சந்திப்பில் மூன்று முறை குறிப்பிட்டார்.
கொல்கத்தா:
மத்தியில் 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியது.
சுமார் 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜியும், பஞ்சாப்பில் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என முதல் மந்திரி பகவந்த் மானும் அறிவித்தனர்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணிக்கு 2 முக்கிய எதிரிகள் உள்ளனர். ஆதிர் ரஞ்சன் பா.ஜ.க.வின் மொழியில் பேசுகிறார். காங்கிரசுடன் உறவை முறிக்க இவரே காரணம் என தெரிவித்தார்.
மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை 3 முறை குறிப்பிட்டு தனது கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
- ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மேற்கு வங்காளத்தை வந்தடைந்தது.
- இந்தியா கூட்டணி அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் என்றார் ராகுல் காந்தி.
கொல்கத்தா:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 2வது கட்டமாக மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மேற்கு வங்காளத்தின் கூச் பெஹாரை வந்தடைந்தது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:
மேற்கு வங்காளத்துக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் வெறுக்கத்தக்க பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. எனவே, இந்தியா கூட்டணி அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டி என தெரிவித்துள்ள நிலையில், ராகுலின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- மோசமான வானிலையால் ஹெலிகாப்டரில் செல்லவில்லை.
- காரில் கொல்கத்தா செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தாவுக்கு சென்றுகொண்டிருக்கும் போது மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதாக செய்திகள் வெளியாகின.
பர்த்வானில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை வழியாக சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டரில் செல்லவில்லை என கூறப்படுகிறது.
- மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு.
- திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் "முக்கிய தூண்".
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இல்லாமல் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி இருப்பதை யாராலும் கற்பனைக் கூட செய்யது பார்க்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இதுதொடர்பாக, கட்சியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா'வின் ஒரு பகுதியாக அசாமில் உள்ள வடக்கு சல்மாராவில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் "முக்கிய தூண்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியின் தூண் போன்றவர் மம்தா பானர்ஜி. அவர் இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி விவாதித்து வருவதாகவும், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையிலான தொகுதிப்பங்கீடு விரைவில் நிறைவடையும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மட்டும் ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு செய்திருந்தார்.
- காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தனியாக போட்டியிட தயார் என அறிவித்திருந்தது.
மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை உருவாகியுள்ளது.
முக்கியமாக மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் தொடக்கத்தில் இருந்தே மோதல் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம். மேற்கு வங்காளத்தில் அந்த கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்படும் என மம்தா பானர்ஜி ஏற்கனவே அதிரடியாக அறிவித்திருந்தார்.
2 இடங்களை ஏற்க காங்கிரஸ் மறுத்து வந்தது. தனியாக போட்டியிட தயார் என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் நாங்கள் பா.ஜனதாவை தனித்து நின்று எதிர்கொள்வோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-
நான் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்தவில்லை. மேற்கு வங்காளத்தில் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை.
ஆனால், நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்காளத்தில் தனித்து நின்று பா.ஜனதாவை தோற்கடிப்போம். நான் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளேன். மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி நடைபயணம் செல்ல இருக்கிறார். ஆனால், எங்களுக்கு அதுபற்றி தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி 22 இடங்களிலும், பா.ஜனதா 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
- மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார்.
- நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயது டைல்ஸ் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். அவரது 2-வது மகளும் மனைவியுடன் சென்றுவிட்டார். இதனால் டைல்ஸ் வியாபாரி தனது மூத்த மகளுடன் வசித்து வந்தார்.
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த டைல்ஸ் வியாபாரி தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று தனது மூத்த மகளை பைக்கில் அழைத்துக் கொண்டு கொல்கத்தா சயின்ஸ் சிட்டிக்கு சென்றார்.
அங்குள்ள மேம்பாலத்தில் பைக்கை நிறுத்தினார். மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார். அதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கூச்சலிட்டு அவரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவர் மேம்பாலத்தில் இருந்து இறங்கவில்லை.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் நுனியில் நின்று கொண்டிருந்த வியாபாரியிடம் தயவு செய்து கீழே இறங்குங்கள்.
உங்கள் மகளின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள் என பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை. தொடர்ந்து பாலத்தில் நின்று கொண்டே இருந்தார்.
மேலும் அங்கிருந்த பொதுமக்களும் சத்தம் போட்டபடி அவரை தயவு செய்து குதிக்க வேண்டாம் என தெரிவித்தனர் .
அந்நேரத்தில் தான் போலீசாருக்கு ஒரு யோசனை வந்தது. கொல்கத்தா சயின்ஸ் சிட்டி நகரில் பிரபல ஓட்டல் ஒன்றில் ருசியான பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.
அது பற்றி டைல்ஸ் வியாபாரியிடம் கூறினர். தற்கொலை முடிவை கைவிட்டால் பிரபல ஓட்டலில் இருந்து பிரியாணி வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர்.
இதனை கேட்டதும் வியாபாரி தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு கீழே இறங்கினார். உடனடியாக அவருக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தனர்.
அதனை சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றார். இதனால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவத்தால் சயின்ஸ்சிட்டி மேம்பாலத்தில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
STORY | Kolkata man climbs down bridge after police lure him with job, biryani
— Press Trust of India (@PTI_News) January 23, 2024
READ: https://t.co/H6STQs1Qw3
VIDEO:
(Source: Third Party) pic.twitter.com/R7w4zslvvc
- காங்கிரஸ்க்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திரிணாமுல் காங்கிரஸ் பிடிவாதம்.
- தனித்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் யோசித்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. பா.ஜனதாவை எதிர்த்து களம் இறங்க இந்தியா கூட்டாணி உருவாகியுள்ளது. இதில் 26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ்க்கு இரண்டு இடங்கள்தான் தர முடியும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் விரக்தியடைந்துள்ளனர். தனியாக நிற்கவும் தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் குணால் கோஷ் கூறியதாவது:-
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் மீது காங்கிரஸ் மாநில அமைப்பு தாக்குதல் நடத்துகிறது. அதேவேளையில் பா.ஜனதாவுக்கு ஆக்சிஜன் கொடுத்து வருகிறது. இது வேலை செய்யாது. நாங்கள் அனைத்து இடங்களிலும், அதாவது 42 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம்.
தொகுதி பங்கீட்டின்போது காங்கிரஸ் கள நிலவரும் என்ன? என்பதை ஆராய்ந்து பேச வேண்டும். அவர்கள் அரசியல் நெருக்கடியை செய்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜி இறுதி முடிவு எடுப்பார்.
இவ்வாறு குணால் கோஷ் தெரிவித்தார்.
அதற்கு பதிலடியாக எம்.பி.யும், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-
எனக்கு யாரையும் பற்றி கவலையில்லை. எங்களுடைய தலைவர்கள் ஏற்கனவே பேசிவிட்டார்கள். நான் இங்கு போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக வந்துள்ளேன். போட்டியிட்டு வெற்றி பெற எங்களுக்குத் தெரியும்.
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
- மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான காளிகாட்டில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பேரணி தொடங்கும்.
- நான் உயிரோடு இருக்கும் வரை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே பாகுபாடு காட்டப்படுவதை அனுமதிக்க மாட்டேன்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள வரும் 22-ம் தேதி அன்று மேற்கு வங்கம் முழுவதும் மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், பண்டிகை என்பது அனைவருக்குமானது. ஜனவரி 22-ம் தேதி பேரணி நடைபெறும். மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான காளிகாட்டில் பூஜை செய்த பிறகு, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அங்கிருந்து பேரணி தொடங்கும்.
இந்தப் பேரணி அனைத்து மதங்களையும் இணைப்பதாக இருக்கும். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், கோயில்கள், தேவாலயங்கள், குருத்துவாராக்கள், மசூதிகள் ஆகியவற்றுக்குச் செல்வார்கள். இந்த பேரணி தெற்கு கொல்கத்தாவின் சர்க்கஸ் மைதானத்தில் நிறைவு பெறும். அதனை அடுத்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில், நேசத்தை வெளிப்படுத்தக்கூடிய பேரணிகள் நடத்தப்படும். அனைத்து மதங்களும் சமமானவையே. எனவே, இந்த பேரணியில் அனைத்து மதத்தினரும் கலந்துகொள்வார்கள்.
பண்டிகைகள்தான் மக்களை ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொருவரோடும் நாம் பேசக்கூடிய தருணம் அது. தேர்தலைக் கருத்தில் கொண்டு ராமர் கோயில் விவகாரத்தில் பாஜக என்னவெல்லாம் வித்தை காட்ட நினைக்கிறதோ காட்டட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பிற மதங்கள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே பாகுபாடு காட்டப்படுவதை அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
- நகராட்சி அமைப்புகளில் வேலைக்கு ஆட்களை சேர்த்ததில் முறைகேடு எனப் புகார்.
- ஏற்கனவே இது தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.
மேற்கு வங்காள மாநிலத்தில் நகராட்சி அமைப்புகளில் வேலைக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பான மோசடி வழக்கில் தீயணைப்புத்துறை மந்திரி சுஜித் போஸ்க்கு தொடர்புடைய இரண்டு இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தபாஸ் ராய்க்கு (முன்னாள் நகராட்சி சேர்மன்) தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை 6.40 மணியில் இருந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி அமைப்புகளில் முறைகேடாக வேலை வழங்கியது குறித்து விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ-க்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்காள அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்பிறகு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் நகராட்சிகளில் வேலை வாய்ப்பு வழங்கியதில் முறைகேடு நடந்தது குறித்து விசாரணை நடத்தி வந்தது.
#WATCH | ED raid underway at the premises of West Bengal minister and TMC leader Sujit Bose in Kolkata. Details awaited. pic.twitter.com/qQNCYuSIV5
— ANI (@ANI) January 12, 2024
இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 5-ந்தேதி உணவு மற்றும் வழங்கல் துறை மந்திரி ரதின் கோஷ்க்கு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ரேசன் ஊழல் வழக்கு தொடர்பாக பாங்கோன் நகராட்சியின் முன்னாள் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் 17 மணி நேர சோதனைக்குப்பின் சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டார்.