search icon
என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலரை பைக்கில் வந்த இருவர் அவரை சுட முயன்றனர்.
    • இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றுள்ளனர்.

    மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சுஷாந்தா கோஷை துப்பாக்கியால் சுடமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நவம்பர் 15 அன்று இரவு 8 மணியளவில் சுஷாந்தா கோஷ் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் அவரை சுட முயன்றனர். ஆனால் அந்த சமயத்தில் துப்பாக்கி வேலை செய்யவில்லை.

    இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றுள்ளனர். உடனடியாக சுஷாந்தா கோஷும் உள்ளூர் மக்களும் சேர்ந்து துப்பாக்கியால் சுட முயன்ற நபரை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 2 செய்தித்தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முகமது இக்பால் என்ற நபர் தான் கோஷை கொலை செய்ய தன்னை அனுப்பியதாக ஒப்புக்கொண்டார்.

    இந்த சமபவத்தில் பைக்கில் வந்து தப்பியோடிய இரண்டாவது நபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    • பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் தொண்டர் ஒருவரின் உடல் நேற்றிரவு கிடந்துள்ளது.
    • இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உஸ்தி நகரில் பா.ஜ.க.வின் கட்சி அலுவலகம் உள்ளது. இதில், அக்கட்சி தொண்டர் ஒருவரின் உடல் நேற்றிரவு கிடந்துள்ளது. அவருடைய உடலின் சில பகுதிகளில் காயங்கள் காணப்படுகின்றன.

    தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலையான நபர் பிருத்விராஜ் நஸ்கார் என்பதும், கட்சியின் சமூக ஊடக பிரிவில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

    இந்தப் படுகொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்த மஜும்தார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சியினரை மிரட்டுவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

    இதற்கிடையே, இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மேற்கு வங்கம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்.
    • மூன்றில் இரண்டு பயணிகள் பெட்டிகள் ஆகும். பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா சாலிமார் செல்லும் செகந்திராபாத்- சாலிமார் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒன்று பார்சல் பெட்டியாகும். இரண்டு பயணிகள் பெட்டியாகும்.

    22850 எண் கொண்ட இந்த ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தென்கிழக்கு ரெயில் தெரிவித்துள்ளது.

    • பாலியல் பலாத்கார காட்சிகள் அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
    • பீகாரில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணின் கணவர் கொல்கத்தாவிற்கு வந்துள்ளார்.

    கொல்கத்தா:

    கொல்கத்தா வடக்கு பர்கானாஸில் உள்ள ஹஸ்னாபாத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவரின் கணவர் பீகாரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் மட்டும் தனியாக கொல்கத்தாவில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பருன்ஹாட்டில் டாக்டர் நூர்ஆலம் சர்தார் (வயது40) என்பவர் நடத்தி வரும் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக சென்றார்.

    டாக்டர் நூர்ஆலம் சர்தார் அந்த இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். அப்போது அவர் அந்த பெண்ணிற்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளார். இதனால் அவர் மயங்கி சரிந்தார். அந்த நேரத்தில் ஆஸ்பத்திரியில் வேறு நோயாளிகளோ மருத்துவ பணியாளர்களோ இல்லை.

    இதனை பயன்படுத்தி கொண்ட டாக்டர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் பாலியல் பலாத்கார காட்சிகள் அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

    மயக்கம் தெளிந்த அந்த பெண்ணிற்கு தான் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர் டாக்டரிடம் நடந்தை கேட்டு வாக்குவாதம் செய்தார். அவர் அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்தார்.

    இதற்கு பின்னர் அந்த பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்தநிலையில் தனக்கு ரூ.4 லட்சம் தரவேண்டும். இல்லையென்றால் பாலியல் பலாத்கார வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீடியோ வெளியே வந்தால் தனக்கு அவமானம் ஏற்படும் என்று பயந்து ரூ.4 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தும் டாக்டர் அந்த பெண்ணிடம் பணம் கேட்டும் பாலியல் பலாத்காரத்துக்கு அழைத்தும் அச்சுறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் பீகாரில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணின் கணவர் கொல்கத்தாவிற்கு வந்துள்ளார். அவரிடம் நடந்த சம்பவம் அனைத்தையும் அந்த பெண் கூறியுள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மனைவியுடன் சென்று ஹஸ்னாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததும், வீடியோ எடுத்து பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டாக்டர் நூர்ஆலம் சர்தாரை கைது செய்தனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2026- ல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மேற்கு வங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
    • மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோத குடியேற்றம் நிறுத்தப்படும் என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதியில் பெர்டாபோல் சோதனைச்சாவடியில் புதிய பயணிகள் மற்றும் சரக்கு முனையத்தை உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். அப்போது அமித்ஷா பேசியதாவது:

    இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தச் சோதனைச்சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

    எல்லைப் பகுதியில் சட்டரீதியாக உலவமுடியாதபோது சட்டவிரோத ஊடுருவல் அதிகமாகிறது. இது நாட்டின் அமைதியை பாதிக்கிறது.

    2026- ல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மேற்கு வங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    அதன்பின் ஊடுருவல் நிறுத்தப்பட்டு அமைதி தானாக வரும். அண்டை நாட்டில் இருந்து ஊடுருவல் நிறுத்தப்பட்டால் மட்டுமே மேற்கு வங்கத்தில் அமைதி திரும்பும்.

    இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை, இணைப்பை மேம்படுத்துவதில் சோதனைச் சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துகின்றன என தெரிவித்தார்.

    • விமானங்களுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
    • மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை.

    கொல்கத்தா:

    நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை நடைபெற்ற நிலையில் அவை வெறும் புரளி என்பது உறுதியானது.

    சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள 23 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொல்கத்தாவில் 10 பெரிய ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. இதில் பெரும்பாலான ஓட்டல்கள் நட்சத்திர அந்தஸ்து கொண்டவை. இதைத்தொடர்ந்து அந்த ஓட்டல்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தினர். அதில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இ-மெயில் மூலம் புனை பெயரை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஓட்டல் வளாகத்தில் வெடிகுண்டுகளை கருப்பு பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் வெடிக்கும். உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என கூறப்பட்டிருந்தது.

    அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. எனினும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள 10 ஓட்டல்களுக்கு நேற்று மதியம் 12.45 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கான்டென் என்ற பெயரில் இ-மெயில் மூலம் அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

    அதில் 10 ஓட்டல்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகவும், அது சில மணி நேரத்தில் வெடித்து விடும். இன்று பல அப்பாவி உயிர்கள் பலியாகும். விரைந்து சென்று ஓட்டல்களை காலி செய்யுங்கள் என தெரிவித்து இருந்தார்.

    உடனடியாக வெடி குண்டு செயலிழக்கும் படையினர் மூலம் ஓட்டல் களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் சோதனை நீடித்த நிலையில் ஓட்டல்களில் சந்தேகத்திற் கிடமாக எதுவும் சிக்க வில்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதே போல திருப்பதியி லும் 3 ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் பெயரை தொடர்புபடுத்தி இந்த மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக சம்பந்தப் பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    ஓட்டல் அறைகளில் இருந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு அங்குள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தியதில் மிரட்டல் வீண் புரளி என தெரியவந்தது. மேலும் ஜாபர் சாதிக் பெயரில் போலியான இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.

    டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது. முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா விமான நிலையம், நாளை இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 120 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது.
    • மாநிலம் தழுவிய அளவிலான போராட்டங்களும் நடைபெற்று வந்தது.

    கொல்கத்தா:

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவ மாணவி பணியில் இருந்தபோது கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதை கண்டித்தும், நீதி கேட்டும் அந்த மருத்துவக் கல்லூரியின் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    மாநில சுகாதாரத் துறை செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும், போதுமான எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். பிரச்சனைக்குத் தீர்வு காண மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. மாநிலம் தழுவிய அளவிலான போராட்டங்களும் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி டாக்டர்கள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது இருதரப்பு இடையே சுமூக தீர்வு எட்டப்பட்டது. இதையடுத்து, கடந்த 15 நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக பயிற்சி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பொதுமக்களின் கவலையின் காரணமாக, நாங்கள் எங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டோம்.
    • வேலை நிறுத்தத்தின்போது நோயாளிகளுக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்டார்.

    அதற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து, 42 நாட்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு கடந்த மாதம் 21-ந் தேதி பயிற்சி டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால் மாநில அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    இதனையடுத்து, பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும், மாநில சுகாதார செயலாளரை மாற்ற வேண்டும், பணியிடங்களில் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி டாக்டர்களில் சிலர் கடந்த 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

    கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் மேடை அமைத்து 8 பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் நேற்று 15-வது நாளை எட்டியது.

    இதனிடையே உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் பயிற்சி டாக்டர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மேற்குவங்காள அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்துள்ளனர். தவறும்பட்சத்தில் வருகிற 22-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

    இதுபற்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவரும், மேற்கு வங்காள பயிற்சி டாக்டர்கள் முன்னணியின் செய்தித் தொடர்பாளருமான டாக்டர் தேபாஷிஷ் ஹல்தார் கூறியதாவது:-

    பொதுமக்களின் கவலையின் காரணமாக, நாங்கள் எங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டோம். அதற்கு பதிலாக, சுகாதார அமைப்பை மேம்படுத்த எங்கள் சொந்த உயிரை பணயம் வைத்துள்ளோம். ஆனால் கடந்த 14 நாட்களாக, அரசாங்கம் அசையாமல் உள்ளது.

    எனவே, விவாதத்தில் ஈடுபடவும், அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசுக்கு நாங்கள் 3 நாட்கள் கெடு விதிக்கிறோம்.

    அரசு அதை செய்ய தவறும் பட்சத்தில் 22-ந்தேதி மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட அனைத்து சுகாதார நிலையங்களில் பொது சுகாதார வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

    இந்த வேலை நிறுத்தத்தின்போது நோயாளிகளுக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் தேபாஷிஷ் ஹல்தார் கூறினார்.

    இந்த நிலையில் பயிற்சி டாக்டர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நாளை (திங்கட்கிழமை) அவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மாநில தலைமை செயலாளர் மனோஜ் பந்த், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்களை நேற்று மதியம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதல்-மந்திரி பானர்ஜி டாக்டர்களிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அது சுகாதார சேவைகளை பாதிக்கக் கூடாது. உங்கள் கோரிக்கைகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற எனக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் அவகாசம் கொடுங்கள். தயவு செய்து போராட்டத்தை வாபஸ் பெறுங்கள். சில கோரிக்கைகளுக்கு கொள்கை முடிவுகள் தேவை. நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்போம். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    • வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.
    • இந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக மெதுவாக ஒரு கார் திரும்பியுள்ளது. அப்போது அவ்வழியே வேகமாக ஒரு பைக் ஒன்று செல்கிறது. அதன் பின்னால் வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து பைக்கில் வந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் பைக்கில் பயணம் செய்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து அக்டோபர் 11 அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஹூக்ளியில் உள்ள போல்பார் ராஜ்காட் சந்திப்பில் நடந்துள்ளது.

    இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையிலான ரேஸ் போட்டியின் போது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தினால் காருக்குள் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

    • உண்ணாவிரதத்தின்போது ஜுனியர் டாக்டர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது
    • கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி .கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி பெண் டாகடர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். உச்சநீதிமன்ற தலையீட்டை அடுத்து மற்ற பகுதிகளில் போராட்டங்கள் படிப்படியாகக் குறைந்தாலும், கொல்கத்தாவில் இன்னும் தீவிரத்துடன் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

    மேற்கு வங்க மம்தா அரசுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைக்கும் அவர்கள் விரைந்த நீதி கிடைக்க வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த உண்ணாவிரதத்தின்போது ஜுனியர் டாக்டர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து சுமார் 50 மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.

     

    தொடர்ந்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். கூண்டோடு நடந்த இந்த ராஜினாமாக்களால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழலில் மருத்துவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மேற்கு வங்க அரசின் தலைமை ஆலோசகர் ஆல்பன் பந்தோபாத்யாய், மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்வது சட்டப்படி செல்லாது.

    பணியாளர் விதிகளின்படி ராஜினாமா என்பது பணியாளருக்கும் பணி வழங்குபவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். எனவே இந்த கூட்டு ராஜினாமா கடிதங்கள் செல்லாது. ஒவ்வொருவரும் தனித்தனியாக ராஜினாமா கடிதம் அளித்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் என்று தெரிவித்தார். 

    • மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளில் இருந்து ராஜினாமா.
    • கூட்டத்தை நடத்திய பின்னர் மொத்தமாக ராஜினாமா செய்தனர்.

    கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். முன்னதாக ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து சுமார் 50 மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.

    ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அரசு மருத்துவமனையின் பல்வேறு துறைத் தலைவர்களின் கூட்டத்தை நடத்திய பின்னர் மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு செய்தனர்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மருத்துவர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

    கொல்கத்தாவின் மையப்பகுதியில் ஏழு ஜூனியர் மருத்துவர்கள் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம், அவர்களது சகாக்கள் ஒற்றுமையுடன் நடத்திய 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து, இரண்டு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மூத்த மருத்துவர்கள் பெருமளவில் ராஜினாமா செய்தனர். 

    ×