என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இஸ்ரேல்
- படைகளை இஸ்ரேல் உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.
- இந்த நாளை எதிர்பார்த்து நாங்கள் கூடுதல் படைகளுடன் தயாராக இருக்கிறோம்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இஸ்ரேல் தனது படைகளை உஷார்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஒருபக்கம் தாக்குதல் மறுப்பக்கம் தனது படைகளை இஸ்ரேல் உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.
நாளை (திங்கள் கிழமையின்) தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி பேசும் போது "இந்த நாளை எதிர்பார்த்து நாங்கள் கூடுதல் படைகளுடன் தயாராக இருக்கிறோம். எல்லையில் தாக்குதல்கள் இருக்கலாம்," என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய குழு சார்பில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,205 பேர் கொல்லப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், சிறைபிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அடங்குவர்.
கொடூர தாக்குதல் நடந்த ஒரு வருடம் கழித்து, காசாவில் போர் குறைந்த வேகத்தில் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது கவனத்தை வடக்கு லெபனான் பக்கம் திருப்பியுள்ளது. அங்கு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நடைபெற்று வருகிறது.
- இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தி உள்ளது.
- மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்தவேண்டும் என்றார்.
டெல் அவிவ்:
பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நோயல் பாரட் 4 நாள் அரசுமுறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். நாளை அவர் இஸ்ரேல் சென்று தனது பயணத்தை முடிக்க உள்ளார்.
இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேல் காசாமீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம். போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அதிபர் மேக்ரானும், மற்ற மேற்கத்திய தலைவர்களும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஈரான் அதன் பினாமிகள் மீது ஆயுதத் தடையை விதிக்கிறதா? நிச்சயமாக இல்லை.
பயங்கரவாதத்தின் இந்த அச்சு ஒன்றாக நிற்கிறது. ஆனால் இந்த பயங்கரவாத அச்சை எதிர்க்கும் நாடுகள் இஸ்ரேல்மீது ஆயுதத் தடை விதிக்கவேண்டும். என்ன அவமானம்? அவர்களின் ஆதரவு இருந்தாலும் சரி, அல்லது இல்லாவிட்டாலும் சரி, இஸ்ரேல் வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கியது.
- 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
டெல் அவிவ்:
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
மொத்தம் 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் வடக்கு லெபனான் நகரமான திரிபோலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான சயீத் அட்டால்லா கொல்லப்பட்டார். அவருடன் குடும்பத்தினர் 3 பேரும் உயிரி ழந்தனர்.
மேலும் பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தளபதி ஜாஹி யாசர் ஓபி உள்பட 8 பேர் பலியானார்கள்.
- மாணவர்கள் சிலர் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
- 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
டெல் அவிவ்:
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் முன்தினம் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
மொத்தம் 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் பலர் வசிக்கிறார்கள். மாணவர்கள் சிலர் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
அங்கு வசிப்பவர்களில் பலர் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவருமே இந்த ஏவுகணை தாக்குதலை கண்டு அச்சம் அடைந்துள்ளனர். ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை வெளியிட்டு தங்களின் உறவினர்களுடன் அவர்கள் உருக்கமாக பேசியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலால் நாளுக்கு நாள் எங்களிடையே பயம் அதிகரித்து வருகிறது. இங்கு நிலைமை மோசமாக உள்ளது. இதுபோன்ற தாக்குதலை நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. டெல் அவிவ் நகருக்குள் ஏவுகணைகள் வந்து விழும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இஸ்ரேலில் வசிக்கும் தெலுங்கானாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், 'இங்கு நல்ல சம்பளம் என்பதால் வேலைக்கு வந்தேன். இங்கு 5 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறேன். எனது குழந்தைகளின் கல்விச்செலவுக்காக இங்கு வந்து சம்பாதிக்கிறேன். ஆனால் இங்கு இப்போது இருக்கும் நிலைமையை நினைத்தால் கவலையாக இருக்கிறது' என்றார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சுமார் 700 பேர் டெல் அவிவ் நகரில் வசிக்கிறார்கள். ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று பயந்து தெலுங்கானாவை சேர்ந்த சிலர் கடந்த மாதமே இந்தியாவுக்கு திரும்பினர். ஆனால் பலர் இன்னும் அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தற்போது தினம் தினம் அச்சத்துடன் இருக்கிறார்கள்.
- இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது.
- இதில் 7 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.
டெல் அவிவ்:
இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் உள்ள யாபா பகுதியில் இரு மர்ம நபர்கள் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரு மர்ம நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். அவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில். இஸ்ரேலில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
- இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன.
- இதைச் செய்யாமல் மவுனம் காப்பவருக்கு இஸ்ரேலில் கால் வைக்க தகுதி இல்லை.
ஜெருசலேம்:
இஸ்ரேல், காசா இடையிலான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் முக்கியத் தளபதி கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியது. ஹைபர்சோனிக் வகை ஏவுகணை மூலம் இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாகஅவர் கூறியதாவது:
இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர். இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனை செய்யாமல் மவுனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது. ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார் என தெரிவித்தார்.
- கடுமையான போரின் மத்தியில் நாங்கள் இருக்கிறோம்.
- இஸ்ரேலின் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்போம்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு முதல் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.
அவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்து வரும் சூழலில் மக்கள் பாதுகாப்பு பங்கர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், "ஈரான் போர்க்குணமிக்க நாடு அல்ல, ஆனால் அது எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கிறது என்பதை நேதன்யாகுவுக்கு தெரியப்படுத்துங்கள். இது எங்களது சக்தியின் ஒரு பகுதி மட்டும்தான். ஈரானுடன் மோதலில் ஈடுபட வேண்டாம்," என்று கூறி இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது எக்ஸ் தள பதிவில், "இன்று லெபனானில் வீழ்ந்த எமது மாவீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து என் இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடவுள் அவர்களின் இரத்தத்தை ஆசீர்வதிக்கட்டும். நம்மை அழிக்க முயற்சிக்கும், ஈரானின் தீய நிலைக்கோட்டிற்கு எதிராக கடுமையான போரின் மத்தியில் நாங்கள் இருக்கிறோம்."
"இது நடக்காது - ஏனென்றால் நாம் ஒன்றாக நிற்போம், கடவுளின் உதவியால் - நாங்கள் ஒன்றாக வெல்வோம். நாங்கள் தெற்கில் கடத்தப்பட்டவர்களையும், வடக்கில் உள்ள எங்கள் குடியிருப்பாளர்களையும் திருப்பித் தருவோம். இஸ்ரேலின் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- லெபனானில் போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
நியூயார்க்:
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஈரானில் இருந்து 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இதனால் ஏவுகணை தாக்குதலை குறிக்கும் வகையில் இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் இந்த பதிலடி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடையும் மோதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்த பிறகு விரிவடைவதை நான் கண்டிக்கிறேன். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எங்களுக்கு முற்றிலும் போர் நிறுத்தம் தேவை" என்று அதில் அன்டோனியோ குட்டரெஸ் பதிவிட்டுள்ளார்.
தனது மற்றொரு பதிவில், "லெபனானில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதைப் பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன். உடனடி போர் நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
லெபனானில் போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" என்று அதில் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
- தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
- இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
டெல் அவிவ்:
இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய பிரஜைகளும் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றமாறு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உள்ளூர் அதிகாரிகளால் (https://www.oref.org.il/eng) அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தயவு செய்து எச்சரிக்கையுடன் இருங்கள், தேவையற்ற பயணங்களை நாட்டிற்குள் தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு அருகில் இருக்கவும். தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் எங்கள் நாட்டவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.
ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24 x7 ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளவும்:
தொலைபேசி எண்கள்:
A. +972-547520711
B. +972-543278392
மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in
இந்தியப் பிரஜைகள் யாராவது தூதரகத்தில் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், தயவுசெய்து இதற்கான இணைப்பில் (https://forms.gle/ftp3DEXgJwH8XVRdA) பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது.
இஸ்ரேல்:
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது.
இதையடுத்து ஈரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலில் விழாத வகையில் வானிலேயே அயன் டோம் இடைமறித்து அழிக்கிறது.
மழையாக பொழியும் ஏவுகணைகளை தடுத்து இஸ்ரேல் இரும்பு கோட்டையாக இருந்து காக்கிறது.
- ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
- மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.
இஸ்ரேல்:
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாகி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளை தகர்க்குமாறு அமெரிக்க படைகளுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்.
- மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேல்:
பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்டு ஆஸ்டின் கூறியதாவது:-
இஸ்ரேலை பாதுகாப்பதற்கான உரிமை அந்நாட்டுக்கு இருக்கிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று, இஸ்ரேலின் வடக்கு எல்லைகளில் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தாக்குதல்கள் நடத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதன் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கு, ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு இயக்கங்களிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் அமெரிக்கா வலுவாக உள்ளது.
அதேபோல, போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுப்பதிலும் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ராணுவ தாக்குதல்களை நிகழ்த்தினால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
#BREAKING || ?LIVE : இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும் ஈரான் https://t.co/oFlIt0MP9o
— Thanthi TV (@ThanthiTV) October 1, 2024
இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்