search icon
என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தொழில் நுட்பங்களின் வளர்ச்சி வரை புதிய மதிப்பை உருவாக்கி வருகிறது.
    • மனஅழுத்தம் இல்லாத விமான பயணத்தை மேற்கொள்வதற்கான நடை முறை வழிமுறைகள் குறித்து மைய உயர் அலுவலர்கள் விளக்கினார்கள்.

    டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான நிப்பான் பியூச்சர் கிரியேசன் ஹப் மையம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் தொழில்நுட்பமும் வணிகமும் ஒன்றிணையும் இடமாகும்.

    சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தொழில் நுட்பங்களின் வளர்ச்சி வரை புதிய மதிப்பை உருவாக்கி வருகிறது.

    இந்த மையத்திற்கு சென்று பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விமான நிலையங்களில் மின்னணு சுங்க அறிவிப்பு வாயில் மூலமாக முக அங்கீகார தொழில்நுட்பம், வேகமான சுங்க அனுமதி, நெரிசலற்ற சுங்க ஆய்வு தளங்கள், காத்திருப்பு நேரத்தை குறைத்தல் ஆகிய மனஅழுத்தம் இல்லாத விமான பயணத்தை மேற்கொள்வதற்கான நடை முறை வழிமுறைகள் குறித்து மைய உயர் அலுவலர்கள் விளக்கினார்கள்.

    இந்த அதிநவீன விமான பயண முறை உலகின் பரபரப்பான விமான நிலையமான அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

    இந்த நிறுவனம், துறைமுக கண்காணிப்பு, தொழிற்சாலை மேலாண்மை, ரயில் போக்குவரத்து மேலாண்மை தொடர்பு, சாலை போக்கு வரத்து மேலாண்மை, தீயணைப்பு அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, வங்கி ஏடிஎம்கள், டிஜிட்டல் தொலைக்காட்சி பரிமாற்றம், மின்னணு அரசாங்கம், நீர் மேலாண்மை, செயற்கை க்கோள் தகவல் தொடர்பு போன்ற கடல் முதல் விண்வெளி வரை அனைத்து நிர்வாகத்திலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு கண்டு வருவதைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கப்பட்டது.

    இந்த மையத்தை பார்வையிட்ட நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மைய உயர் அலுவலர்களுடன், தமிழ்நாட்டிற்கான முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் நோக்கம், தமிழ்நாடு அரசின் நிர்வாகத்திலும், பொது பயன்பாட்டு வசதிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

    • டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
    • ஜப்பானிய மொழிக்கும், தமிழுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது என்றார்.

    டோக்கியோ:

    டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜப்பான் என்றால் உழைப்பு, சுறுசுறுப்பு. வீழ்ந்த நேரத்தில் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான்.

    2000 ஆண்டுகளுக்கு முன் வணிகத்திற்காக தமிழர்கள் ஜப்பான் வந்துள்ளனர்.

    ஜப்பானிய மொழிக்கும், தமிழுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. ஜப்பானியர்கள் தமிழைக் கற்க முயற்சிக்கின்றனர்.

    ஜப்பானும் தமிழ்நாடும் ஒரே இலக்கிய கட்டமைப்பு கொண்டது.

    ஜப்பான் தந்த உற்சாக வரவேற்பில் என்னையே நான் மறந்து போயிருக்கிறேன்.

    என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருப்பேன்.

    அயலக தமிழர்களுக்காக பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தற்போது ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    டோக்கியோ:

    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.

    இந்நிலையில், ஜப்பான் நாட்டின் உலகப் புகழ்பெற்ற ஒசாகா கோட்டையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

    ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜியின் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

    • டோக்கியோவில் இன்று மதியம் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது.

    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

    • அந்த நபர் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிந்துள்ளார்.
    • ஜப்பானில் துப்பாக்கி சூடு போன்ற குற்றங்கள் மிகவும் அரிதானவை.

    டோக்கியோ:

    மத்திய ஜப்பானில் உள்ள நாகானோ மாகாணத்தில் மர்ம நபர் ஒரு பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது, அந்த நபர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதல்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு போலீசார் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் அருகில் உள்ள கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பள்ளியிலேயே தங்க வைக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஜப்பானில் துப்பாக்கி சூடு போன்ற குற்றங்கள் மிகவும் அரிது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. துப்பாக்கி வைத்திருக்க விரும்புவோருக்கு உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பு கடுமையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷைலி சிங் 6.65 மீட்டர் நீளம் தாண்டி 3வது இடத்தை பெற்றார்.
    • ஷைலிக்கு ஆலோசகரும், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனையுமான அஞ்சு ஜார்ஜ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    செய்கோ கோல்டன் கிராண்ட்பிரி தடகள போட்டி ஜப்பானின் யோகோஹாமா நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய இளம் வீராங்கனை ஷைலி சிங் 6.65 மீட்டர் நீளம் தாண்டி 3வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    முதல் 3 ரவுண்ட் வரை முன்னிலையில் இருந்த ஷைலி அதன் பிறகு பின்தங்கி விட்டார். ஜெர்மனியின் மேரிஸ் லுஜோலா தங்கப்பதக்கமும் (6.79 மீ), ஆஸ்திரேலியாவின் புரூக் புஸ்குல் வெள்ளிப்பதக்கமும் (6.77 மீ) பெற்றனர்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷைலி உலக அளவில் சீனியர் பிரிவில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். அவருக்கு ஆலோசகரும், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனையுமான அஞ்சு ஜார்ஜ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், "ஷைலிக்கு இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு வயது வெறும் 19 தான். இந்த போட்டியில் குறைந்த வயது வீராங்கனையும் இவர் தான். தங்கம், வெள்ளி வென்றவர்களின் வயது கிட்டத்தட்ட 30. ஷைலிக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை" என்றார்.

    • ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிற்கு இடையே குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது.
    • அப்போது பேசிய அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம், நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்றார்.

    ஹிரோஷிமா:

    ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிற்கு இடையே, குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், நரேந்திர மோடி, ஜோ பைடன், அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது, பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலியா பிரதமர் அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடியிடம் அதிபர் ஜோ பைடன் கூறுகையில், நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். வாஷிங்டன்னில் அடுத்த மாதம் உங்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகின்றனர். நான் நகைச்சுவை செய்கிறேன் என நினைத்தால், என்னுடைய குழுவினரை கேட்டுப் பாருங்கள். நீங்கள் மிகவும் பிரபலமாகி விட்டீர்கள். குவாட்டில் நாம் ஆற்றும் பணி உள்ளிட்ட அனைத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.

    • உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை.
    • உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை.

    ஹிரோஷிமா :

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த போர் விரைவில் முடிந்து விடும் என்றுதான் உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ஓராண்டை கடந்தும் அந்த போர் நீடித்து வருகிறது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய், உரங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவை விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன.

    உக்ரைன் போரை ரஷியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனாலும் ரஷியா தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், இரண்டாம் உலக போரின்போது, உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு, உருக்குலைந்துபோய், இப்போது பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதுபோல, மீண்டெழுந்துள்ள ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், 'ஜி-7' நாடுகளின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.

    இந்த உச்சி மாநாட்டில், உலக தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. எதிர்பார்த்தபடியே இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அங்கு வந்து சேர்ந்தார். அவர் அங்கு வருமுன்னரே அவருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகின.

    அதன்படி 'ஜி-7' உச்சி மாநாட்டின் மத்தியில் பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியதாவது:-

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பல முறை பேசி இருக்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பை இப்போது பெற்றிருக்கிறோம்.

    உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை. இதை நான் மனிதநேய பிரச்சினையாகவும், மனித விழுமியங்களின் பிரச்சினையாகவும் தான் பார்க்கிறேன்.

    எங்கள் எல்லோரையும் விட இந்த போரினால் ஏற்படுகிற பாதிப்புகளை நீங்கள் அதிகமாக அறிவீர்கள். எங்கள் மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் இருந்து கடந்த ஆண்டு நாடு திரும்பியபோது அவர்கள் அங்குள்ள சூழ்நிலையை எடுத்துக்கூறினார்கள். நீங்களும், உக்ரைன் மக்களும் அடைந்துள்ள வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    எனவே இந்தியாவும், நானும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தலைவர்கள் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அதில், "பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்" என கூறப்பட்டுள்ளது.

    • அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை உறுதி செய்வதற்கான முக்கிய தளமாக குவாட் உருவெடுத்துள்ளது.
    • நமது நோக்கத்திற்காக ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் செயலாற்றி வருகிறோம்.

    ஹிரோஷிமா:

    வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை உறுதி செய்வதற்கான முக்கிய தளமாக குவாட் உருவெடுத்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் வெற்றி மற்றும் பாதுகாப்பு என்பது, ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது. ஆக்கப்பூர்வமான கொள்கை மற்றும் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் முன்னேறி வருகிறோம்.

    சுதந்திர மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த நமது நோக்கத்திற்காக ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் செயலாற்றி வருகிறோம். உலகளாவிய நன்மை, மக்கள் நலன், அமைதி மற்றும் வளத்திற்காக குவாட் அமைப்பு தொடர்ந்து பணியாற்றும்.

    2024ல் இந்தியாவில் குவாட் உச்சி மாநாட்டை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வருகிறது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார்.

    ஹிரோஷிமா:

    ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். அங்கு குழுமியிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார்.

    இதற்கிடையே, மாநாட்டின் இடையே ஜி7 நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பானின் ஹிரோஷிமா சென்றார் பிரதமர் மோடி.
    • மாநாட்டின் இடையே ஜி7 நாடுகள் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து ஆலோசித்தார்.

    ஹிரோஷிமா:

    வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு நேற்று சென்றார். அங்கு குழுமியிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார்.

    இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ், தென்கொரிய அதிபர் யூன் சிக் இயோல், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு.
    • மாரடைப்பு சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்துள்ளது.

    ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை மற்றவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து கவனத்தை ஈர்த்தது.

    அங்கிருந்தவர்கள் நாயின் அருகில் சரிந்து கிடந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபர் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி உயிரை காப்பாற்றப்பட்டார்.

    இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்தது. இந்நிலையில், மாரடைப்பால் சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

    ×