என் மலர்
ஜப்பான்
- வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்தது.
- வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்தார்.
டோக்கியோ:
கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தி, பேசியபோது, அவர்கள் வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதற்கு பதிலடி தருகிற வகையில், நேற்று காலை வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரத்தியேக பொருளாதார மண்டலம் பகுதியில் அந்த ஏவுகணை பறந்தது போய் விழுந்தது என்று கடலோர காவல்படை கூறியது. இது ஜப்பானுக்கு அருகே, அதாவது வடக்கு ஹொக்கைடோவில் உள்ள ஒரு தீவில் இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்நிலையில், வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். இதுபோன்ற செயல்களை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்
- சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் உள்ளது.
- ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தோபாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது
டோக்கியோ:
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை நிலைகுலையச் செய்கின்றன. சில நேரங்களில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.
இந்நிலையில், ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தோபாவில் இன்று மதியம் 1.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தோபாவில் இருந்து 84 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவாகியிருந்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
- மகளிர் ஒற்றையர் பிரிவில் திருவள்ளூரைச் சேர்ந்த மனீஷா தங்கப் பதக்கம் வென்றார்.
- கலப்பு இரட்டையர் பிரிவில் ஈரோட்டைச் சேர்ந்த ருத்திக் ரகுபதி வெண்கலம் வென்றார்.
டோக்கியோ:
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.
இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை மனீஷா ராமதாஸ் உடன் ஜப்பான் வீராங்கனை மாமிகோ டொயோட்டா மோதினார். இதில் ஜப்பான் வீராங்கனையை 21-15, 21-15 என வீழ்த்தி மனீஷா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இதேபோல், கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ருத்திக் ரகுபதி 2 வெண்கல பதக்கங்களை வென்றார்.
மேலும் ஓசூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளிலும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
- வடகொரியா ஏவுகணை வீச்சு குறித்து கண்காணித்து வருவதாக தென் கொரியா தகவல்
- அமெரிக்காவுடனான ஒருங்கிணைப்பில் தயார் நிலையில் தென் கொரிய ராணுவம்.
டோக்கியோ:
அமெரிக்கா, தென்கொரியா கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் வட கொரியா மீண்டும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதன் கிழக்குக் கடல் பகுதியில் ஏவியது. அந்த ஏவுகணைகள் ஜப்பான் கரையோர பகுதியில் கீழே விழுந்ததாக அந்நாட்டு கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. இதையடுத்து விமானங்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவுறுத்தி உள்ளார்.
சந்தேகத்திற்கிடமான ஏவுகணைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யவும், எந்தவொரு தகவலையும் மக்களுக்கு விரைவாகத் தெரிவிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா ஏவுகணை வீச்சு தொடர்வதால் ஜப்பானில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகொரியா ஏவுகணை வீச்சு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தயார் நிலையில் இருப்பதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அச்சுறுத்தலால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது.
- ஜப்பான் நாட்டின் மீது பறந்த ஏவுகணையால் ஜப்பான் அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
- வடகொரியா இன்று ஏவியது பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட இந்த ஆண்டு நாட்டின் 23 வது ஏவுகணை சோதனை ஆகும்.
வாஷிங்டன் வட கொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியது, இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. இதை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது.
2017ம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும். அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவப் பயிற்சிக்கு மத்தியில், 10 நாட்களில் தென்கொரியாவின் ஏவுகணை வீசப்பட்டு உள்ளது.
தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் கூறியதகவல்படி, ஏவுகணை வட கொரியாவின் சீனாவுடனான மத்திய எல்லைக்கு அருகிலுள்ள முப்யோங்- ரியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 7:23 மணியளவில் ஏவப்பட்டது. இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் அதிகபட்சமாக 1,000 கிலோமீட்டர் (621 மைல்) உயரத்தில் 20 நிமிடங்களுக்கு சுமார் 4,600 கிலோமீட்டர்கள் (2,858 மைல்கள்) பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்த ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்ததோடு, வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை "மோசமானது" என கூறினார்.
ஏவுகணையை சுட்டு வீழ்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜப்பான் கூறியது. வடகொரியாவில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவுகணை ஏவப்படுவதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்பை பலப்படுத்த விரும்புவதால், எதிர் தாக்குதல் திறன் உள்ளிட்ட எந்த விருப்பங்களையும் நிராகரிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா கூறினார்.
தென் கொரியா தனது இராணுவத்தை மேம்படுத்துவதாகவும் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் கூறி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் ஒரு அறிக்கையில் கூறியதாவது;- ஜப்பான் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை செலுத்தும் வடகொரியாவின் "ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற" முடிவை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த நடவடிக்கை ஸ்திரமின்மை மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை வடகொரியா அப்பட்டமாக புறக்கணிப்பதை காட்டுகிறது என கூறி உள்ளார். வடகொரியா இன்று ஏவியது பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட இந்த ஆண்டு நாட்டின் 23 வது ஏவுகணை சோதனை ஆகும்.
- அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.
- வடகொரியா இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
டோக்கியோ:
தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.
இந்நிலையில், வட கொரியா மேலும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது என ஜப்பான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவை விட்டு நேற்று வெளியேறிய சில மணி நேரங்களுக்குள் வடகொரியா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது குறிப்பிடத்தக்கது.
- டோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார்.
- முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே (63), ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. ஷின்சோ அபேயுடன் பிரதமர் மோடி நட்புணர்வை பேணி வந்தார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில் பாசமிகு நண்பர் என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையே, ஜப்பான் அரசு ஏற்பாடு செய்திருந்த ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். அதன்பின், இருநாட்டு தலைவர்களும் பேசினார்கள்.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து அவர் ஜப்பான் பிரதமரை சந்தித்தார்.
இந்நிலையில், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். அவரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
- டோக்கியோ விமானநிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார்.
- ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை நினைவுகூர்கிறது இந்தியா.
ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது63). கடந்த ஜூலை மாதம் இவர் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. அபேயுடன் பிரதமர் மோடி நட்புணர்வை பேணி வந்தார். பிரதமர் மோடி வெளியிட்டு இருந்த இரங்கல் செய்தியில் பாச மிகு நண்பர் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்தநிலையில் ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு இன்று ஜப்பான் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதை ஏற்று பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். பின்னர் இருநாட்டு தலை வர்களும் பேசினார்கள்,
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-
துயரம் நிறைந்த இந்த நேரத்தில் எங்களது இந்த சந்திப்பு நடந்தது. கடந்த முறை ஜப்பான் வந்த போது நீண்ட நேரம் அபேயுடன் உரையாடினேன். இந்தியா அவரை இழந்து தவிக்கிறது. அவர் இல்லாதததை இந்தியா உணர்கிறது.
இவ்வாறு அவர் தெரி வித்து உள்ளார்.
- ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
- டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டோக்கியோ :
ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமைக்குரியவரான முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி தேர்தல் பிரசாரம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஜப்பான் மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் ஷின்ஜோ அபேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜப்பானில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் ஷின்ஜோ அபேவுக்கு அரசு நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நினைவு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று தலைநகர் டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஷின்ஜோ அபேவுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். ஷின்ஜோ அபேயும், அவரது அரசும் குறிப்பிட்ட ஒரு மத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டி மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷின்ஜோ அபேவுக்கு நினைவு நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து 70 வயது முதியவர் ஒருவர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்தது நினைவுகூரத்தக்கது.
- முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- அவரது அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அலுவலகம் தலைநகர் டோக்கியோவில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வாலிபர் திடீரென்று தன் உடலில் தீ வைத்து கொண்டார். உடலில் தீ எரிந்தபடி ஓடிய அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர். பின்னர் சுய நினைவை இழந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நபர் பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்துள்ளார்.
இது தொடர்பாக டி.வி. சேனல் ஒன்று கூறும்போது, "முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கை நடத்தும் திட்டத்தை எதிர்ப்பதாக போலீசாரிடம் கூறிய பின்னர் அந்த நபர் தனக்கு தானே தீ வைத்து கொண்டார்" என்று தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார்.
ஷின்சோ அபேவுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை வருகிற 27-ந்தேதி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாதி பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
- இந்தப் புயலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
டோக்கியோ:
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நான்மடோல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.
சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது. கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
புயல், மழையைத் தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல், மழை மற்றும் வெள்ளத்தால் கியாஷூ தீவில் உள்ள பல்வேறு நகரங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.
இந்நிலையில், இந்தப் புயலில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். புயலால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து, புல்லட் ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.
- உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக், சிராக் ஜோடி வெண்கலம் வென்றது.
- உலக பேட்மிண்டன் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தது.
டோக்கியோ:
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் ஜோடியைச் சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் 22-20 என முதல் செட்டில் முன்னிலை பெற்ற சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி அடுத்த இரண்டு செட்களில் 18 - 21,16 - 21 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோல்வியுற்றனர். இதன்மூலம் அவர்களுக்கு வெண்கலம் கிடைத்தது. இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.