search icon
என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பான் வீரர் கண்டா சுனேயமா உடன் மோதினார்.

    இதில் ஜார்ஜ் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.

    • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றிலேயே இந்தியாவின் அஷ்மிதா, மால்விகா தோல்வி அடைந்தனர்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீன தைபேயின் தாய் சு யிங் மோதினார். இதில் அஷ்மிதா 16-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை அகார்ஷி காஷ்யப் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் கான் யுன்னிடம் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை மால்விகா பன்சோட் 21-23, 19-21 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை பொலினா புரோவாவிடம் தோற்றார்.

    • ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை.

    ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி இருக்கிறது.

    நிலநடுக்கம் காரணமாக ஜப்பானியை தீவுகளான குய்ஷூ மற்றும் ஷிகோகு ஆகிய பகுதிகளை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நிலநடுக்கம் மியாசகியில் இருந்து 20 மைல் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்துள்ளது. 

    • அப்படி என்ன இந்த குடிநீரில் விசேஷம்?
    • சுத்தமான குடிநீரைப் பெறுவதே கோடிக்கணக்கான மக்களுக்கு கனவாக உள்ளது.

    மனிதர்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவை களில் ஒன்று குடிநீர். ஆனால், ஆடம்பர பாட்டில் குடிநீர் பயன்பாடு என்பது தற்போது பெருவசதி படைத்தவர்களிடையே உருவாகியுள்ளது.

    அந்த வகையில், உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் குடிநீராக, ஜப்பானில் தயாரிக்கப்படும் 'பிலிகோ ஜூவல்லரி வாட்டர்' உள்ளது.

    இதன் ஒரு லிட்டர் விலை, ஆயிரத்து 390 டாலர்கள்.

    இந்திய மதிப்பில் உத்தேசமாக ரூ.1 லட்சத்து 16 ஆயிரம்!


    அப்படி என்ன இந்த குடிநீரில் விசேஷம்?

    இது மிக மிகத் தூய்மையானது என்பதுடன், ரொம்ப ஆடம்பரமான பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு வருகிறது.

    இந்த பாட்டில்கள், விலை உயர்ந்த ஸ்வரோவ்ஸ்கி கற்களால் ஆபரணம் போல வடிவமைக்கப்படுகின்றன.

    தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட, உன்னிப்பாக கவனத்துடன் செய்யப்பட்ட கைவினைப்பொருளாக இந்த பாட்டில் உருவாக்கப்படுகிறது.

    இதில் நிரப்பப்படும் நீர், ஜப்பானின் கோபேயில் உள்ள இயற்கை நீரூற்றில் இருந்து பெறப்படுகிறது. இந்த தண்ணீர், மிக உயர்தரமானதாக கருப்படுகிறது.


    ஆடம்பரத்தை விரும்புவோர், அதற்காக தயங்காமல் பணத்தை அள்ளிவிடத் தயாராக இருப்போரை இந்த தண்ணீருடன், இதன் ஆடம்பர பாட்டில் அலங்காரமும் கவர்கிறது.

    இந்த பூமியில், சுத்தமான குடிநீரைப் பெறுவதே கோடிக்கணக்கான மக்களுக்கு கனவாக உள்ளது. ஆனால் சிலருக்கோ. குடிக்கும் நீருக்கு, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பணம் செலவழிக்க முடிகிறது. அதையும் கூட தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகிறார்கள்.

    முரண்பாடுகளின் மொத்த உருவமாய் நம் உலகமே உள்ளது!

    • சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
    • ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.

    தற்போதைய நவீன, அவசர உலகத்தில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் குறைப்பது மிகவும் அவசியமானது. அப்போதுதான் நாம் ஆரோக்கியமன மனநிலையில் வாழ முடியும். சிரிப்பதால் நமது ரத்தத்தில் உள்ள மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து புத்துணர்ச்சியை உண்டாக்கும் எண்டோர்பின் கெமிக்கல் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சிரிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

    சமீபத்தில் ஜப்பானின் யமகட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் மேற்கொண்டு அறிவியல் ஆய்வில் தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயங்கள் குறைவதாக தெரிய வந்துள்ளது. மேலும் சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து யமகட்டா மாகாணத்தில் தினசரி அனைவரும் ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதத்தில் எட்டாவது நாளையும் சிரிப்பு தினமாக கடைபிடித்து அன்றைய தினம் சிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டாய சட்டத்தை ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. சிரிப்பது என்பது தனிநபர் உரிமை சார்ந்தது என்றும், அதை கட்டாயப்படுத்தி செய்ய சொல்ல முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

    • கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
    • ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் இரங்கல் தெரிவித்தார்.

    டோக்கியோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

    கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

    இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா அந்நாட்டு வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹத்ராஸ் சம்பவம் அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • H3 வகையைச் சேர்ந்த ராக்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
    • ஆனால் விண்ணில் பாய்ந்த 14 நிமிடத்தில் வெடித்து சிதறியது.

    ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்) இன்று புதிய H3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை (Daichi-4 (ALOS-4)) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

    இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பாய இருந்தது. ஆனால் சீதோஷ்ண நிலை காரணமாக (மோசமான வானிலை) தள்ளிவைப்பட்டது. இந்த நிலையில் டனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    சுமார் 15 நிமிடம் 34 வினாடிகளில் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து சென்றதாகவும், அதன்பின் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.

    H3 வகையைச் சேர்ந்த ராக்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் விண்ணில் பாய்ந்த 14 நிமிடத்தில் வெடித்து சிதறியது. 2-ம் வகை என்ஜின் செயல்படாமல் தோல்வியடைந்ததால் வெடித்து சிதறும் நிலை ஏற்பட்டது. அதன்பின் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செலுத்தியது.

    H3 இரண்டு நிலை திரவ எரிபொருள் ராக்கெட் ஆகும். H2A வகை ராக்கெட் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக H3 வகை ராக்கெட் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    H2A ராக்கெட்டை விட 1.3 மடங்கு அதிகமான சரக்குகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது H3 ராக்கெட். H2A ராக்கெட்டை விட பாதி அளவே செலவினம் கொண்டது H3 ராக்கெட் ஆகும்.

    1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 9 வருடங்களுக்கு முன்னதாக இந்த ராக்கெட் உருவாக்கும் பணி தொடங்கியது.

    • இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும்.
    • உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும்

    பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) எனப்படும் நச்சு அதிர்ச்சி நோய் பாதிப்பு நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் பரவச் செய்து உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.

    ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் இந்த சதையை உண்ணும் பாக்டீரியடா ஜூன் 2 நிலவரப்படி சுமார் 977 பேரை தாக்கியுள்ளது. கடந்த வருடம் இதனால் 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த பாக்டீரியா முதல் முதலில் கண்டறியப்பட்டது.

     

    இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும். பின் படிப்படியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயலிழப்பு ஏற்பட்டு இறுதியில் மரணத்துக்கு வழிவகுக்கும். இந்த உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும் என்று டோக்கியோ மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நோய்த்தொற்றுகள் பிரிவு மருத்துவர் கென் கிகுச்சி தெரிவிக்கிறார்.

    அதிகாலையில் முதலில் கால் வீக்கம் ஏற்பட்டு மதியத்துக்குள் மூட்டு வரை பரவும் அளவுக்கு பாதிப்பின் வீரியம் வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள பாக்டீரியா பரவல் வரும் நாட்களில் வேகம் எடுத்து பாதிப்பு எண்ணிக்கை 25,00 உயரும் என்று அஞ்சப்படுகிறது.

     

    பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏன்னெனில் இந்த பாக்டீரியா மலத்தின் மூலம் அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. 

    • பதிவு வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர்.
    • சில பயனர்கள் பெண்ணின் செயலை பாராட்டி பதிவிட்டனர்.

    நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு செல்வதால் கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இரவு உணவை தயாரித்ததாக எக்ஸ் தளத்தில் செய்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஜப்பானை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி ஒருவர் கடந்த 21-ந்தேதி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில், பிரசவத்திற்காக நான் பெற்றோர் வீட்டிற்கு செல்ல உள்ளேன். நான் இல்லாத நேரத்தில் எனது கணவர் சரியாக சாப்பிட மாட்டார் என்பதால் அவருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான இரவு உணவை சமைத்து வைத்துள்ளேன் என கூறியிருந்தார். அவரது இந்த பதிவு வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர்.

    திருமணத்திற்கு முன்பு உங்களது கணவர் எப்படி சாப்பிட்டார்? என ஒரு பயனரும், இந்த பெண் தனது கணவரின் பணிப்பெண்ணாக நடிக்கிறார் என ஒரு பயனரும் பதிவிட்டனர். சில பயனர்கள் உங்கள் கணவர் வீட்டில் எதுவும் செய்வதில்லையா? என கேள்வி எழுப்பி இருந்தனர். அதே நேரம் சில பயனர்கள் அந்த பெண்ணின் செயலை பாராட்டி பதிவிட்டனர்.

    • நான் நாயில் இருந்து வேறு ஒரு விலங்காக மாற ஆசைப்படுகிறேன்.
    • பூனையும், நரியும் மிகவும் சிறியவை என்பதால் எதார்த்தத்தை உணரும் போது அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

    விலங்குகள் மீது சிலருக்கு அதீத அன்பு இருக்கும். அந்த வகையில் நாய்கள் மீது தீராத காதல் கொண்ட ஜப்பானை சேர்ந்த டோகோ என்ற வாலிபர் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

    இந்நிலையில் டோகோ தற்போது இன்னும் சில விலங்குகள் போல தன்னை மாற்றி கொள்ள ஆசைபடுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் டோகோ கூறியிருப்பதாவது:-

    நாய்களுக்கும், மனிதர்களுக்கும் வெவ்வேறு எலும்பு அமைப்புகள் இருக்கும். கால்கள், கைகளை வளைப்பது என மனிதர்களில் இருந்து நாய்கள் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன. எனவே நாய் போல நடப்பது மிகவும் கடினம். நான் தற்போது என் கை, கால்களை நாய்களை போன்று மாற்றுவதற்கு வழிகளை ஆராய்ந்து வருகிறேன். பொதுவாக நாய்கள் அசுத்தமாகும் போது அவற்றின் ரோமங்களில் அழுக்கு படிந்து வருகிறது. அதனை சுத்தம் செய்ய அதிக உழைப்பு செலுத்த வேண்டி உள்ளது.


    எனவே நான் நாயில் இருந்து வேறு ஒரு விலங்காக மாற ஆசைப்படுகிறேன். அது பாண்டா அல்லது கரடி, நரி, பூனை என வேறு ஏதேனும் ஒரு விலங்கு போல மாற ஆசை உள்ளது. பூனையும், நரியும் மிகவும் சிறியவை என்பதால் எதார்த்தத்தை உணரும் போது அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. நிச்சயம் ஏதாவது ஒரு நாள் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.

    • 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்தது.
    • இந்த தடகள போட்டியில் இந்தியா அதிக பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தது.

    கோபே:

    மாற்றுத் திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்றது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    ஆண்களுக்கான குண்டு எறிதலில் எப்46 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கம் வென்றார்.

    இறுதி நாளான இன்று இந்தியா ஒரு தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வென்றது. இத்துடன் இந்தியா 6 தங்கம் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி இதுவரை 17 பதக்கங்கள் (6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் 6-வது இடம் பிடித்துள்ளது.

    உலக பாரா தடகள போட்டி ஒன்றில் இந்தியா கைப்பற்றிய அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுவாகும். இதற்குமுன் கடந்த ஆண்டு பாரீசில் நடந்த போட்டியில் 10 பதக்கங்கள் (3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றதே அதிகபட்சமாக இருந்தது. அதனை முந்தி புதிய வரலாறு படைத்துள்ளது.

    சீனா 33 தங்கம் உள்பட 87 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. பிரேசில், உஸ்பெகிஸ்தான், கிரேட் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • நெட்டிசன்கள் கபோசுவின் இந்த புகைப்படங்களை மீம்களாக உருவாக்கியதன் மூலம் பிரபலமானது.
    • கபோசுவின் மறைவு சமூக வளைத்தளத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக ஊடகங்கள் மூலம் மீம் கிரியேட்டர்களால் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது கபோசு என்ற நாய்.

    இந்த நாய் கொடுக்கும் முக பாவனைகளைக் கொண்டு ஏராளமான மீம்கள் வெளிவந்தன. பிரபலமான கதாபாத்திரங்களை மீம்களில் குறிப்பிடுவது போன்று, கபோசுவை வைத்தும் மீம்கள் பிரபலமானது.

    ஜப்பானை சேர்ந்த ஒருவர் கடந்த 2008ம் ஆண்டு கபோசுவை தத்தெடுத்து வளர்த்து வந்தார். 2010ம் ஆண்டு அதன் உரிமையாளர் கபோசுவைக் கொண்டு ஒரு போட்டோஷூட் நடத்தினார்.

    அப்போது, கபோசு கொடுத்த அழகான போஸ்களும், ரியாக்ஷன்களும் இணையத்தில் பகிரப்பட்டன.

    இதையடுத்து, நெட்டிசன்கள் கபோசுவின் இந்த புகைப்படங்களை மீம்களாக உருவாக்கியதன் மூலம் பிரபலமானது.

    இதைதொடர்ந்து, 2013ம் ஆண்டில் கபோசுவின் படத்தை பயன்படுத்தி கிரிப்டோகரன்சியான Dogecoinஐ லோகோ உருவாக்க தூண்டியது.

    17 வயதான கபோசு கடந்த 2022ம் ஆண்டு முதல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு வந்தது. கபோசு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை தூக்கத்தில் அமைதியாக உயிரிழந்துள்ளது.

    இதுகுறித்து Dogecoin தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், கபோசுவின் மறைவு சமூக வளைத்தளத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×