என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நேபாளம்
- மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேபாள நாட்டிற்கு சென்றார்.
- நேபாள அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
புதுடெல்லி:
இரண்டு நாள் பயணமாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேபாள நாட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், நேபாள நாட்டின் அதிபர் ராம் சந்திர பவுடெல் மற்றும் பிரதமர் புஷ்ப கலம் தாஹல் ஆகியோரை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/04/1999543-jai.webp)
இரு நாடுகளிடையே நீர் மின்சக்தி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் முறைகள் குறித்த ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா 2020ல் இந்த செயலியை தடை செய்து விட்டது
- வெறுப்பு உணர்ச்சியை தூண்ட பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்
சீனாவின் "பைட்டேன்ஸ்" (ByteDance) எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது "டிக்டாக்" (TikTok) எனும் மென்பொருள் செயலி. 3 நொடிகளில் இருந்து 10 நிமிடங்கள் வரை ஓடக் கூடிய வீடியோக்ளை பயனர்கள் பதிவேற்றம் செய்யவும், கண்டு ரசிக்கவும் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், இச்செயலியின் செயல்பாடுகள் வெறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாக உள்ளதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். கடந்த 4 வருடங்களில் இதன் காரணமாக 1647 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதை குறித்து ஆலோசிக்க நேபாள காவல்துறையின் சைபர் குற்ற பிரிவு, உள்துறை மற்றும் சீன செயலி நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று நேபாளம், சமூக கட்டமைப்பை குலைக்கும் ஆபத்து உள்ளதால் டிக்டாக் செயலியை தடை செய்வதாக அறிவித்தது.
தொழில்நுட்ப வழிமுறைகள் நிறைவடைந்ததும் தடை முழுவதுமாக செயலாக்கப்படும் என்றும் எந்த தேதியிலிருந்து தடை அமலுக்கு வரும் எனும் செய்தி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நேபாள தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரேகா ஷர்மா அறிவித்தார்.
இந்நிலையில், டிக்டாக் செயலியை தடை செய்வது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் இதற்கு பதிலாக ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை விதித்து அதனை செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் நேபாள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ககன் தாபா கூறியுள்ளார்.
இந்தியா, டிக்டாக் செயலியை 2020-ஆம் ஆண்டே தடை செய்து விட்டது. அப்போது அச்செயலிக்கு 10 கோடிக்கும் மேல் பயனர்கள் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மேலை நாட்டு நிறுவனங்கள் நேபாளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு உள்ளாக கட்டாயம் அலுவலகங்கள் அமைத்தாக வேண்டும் என நேபாள அரசு உத்தரவிட்டிருந்தது.
- அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று மூத்த அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
காத்மாண்டு:
நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் கடந்த 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதுவரை 157 பேர் உயிரிழந்து உள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.
நிலநடுக்கம் நேரிட்ட பகுதிகளில் இதுவரை 159 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து திறந்த வெளியில் பரிதவிக்கின்றனர். நேபாளத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. கடும் குளிரை பொருட்படுத்தாமல் கடந்த சனிக்கிழமை ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்ட மக்கள் திறந்தவெளியில் தூங்கினர்.
வீடுகளை இழந்த மக்களுக்காக நேபாள அரசு சார்பில் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இவை போதுமானதாக இல்லை. இதுதொடர்பாக ஜாஜர்கோட் மாவட்டம் பெரி பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா ராவத் கூறும் போது, "நிலநடுக்கத்தால் எங்களது குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு, உடைமைகளை முழுமையாக இழந்து விட்டேன். இப்போது ஆதரவின்றி தெருவில் நிற்கிறேன். தூங்குவதற்குகூட இடமில்லை" என்றார்.
நேபாள பிரதமர் பிரசண்டா தலைமையில் நேற்று அமைச்சரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கட்டிட இடிபாடுகளில் இருந்து கடைசி நபர் மீட்கப்படும் வரை மீட்புப் பணி தொடரும் என்று பிரதமர் பிரசண்டா உறுதிபடத் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும். அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று மூத்த அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
காத்மாண்டுவில் இருந்து ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களுக்கு இலவச பஸ் சேவைகள் இயக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு இலவசமாக தொலைத்தொடர்பு சேவையும் வழங்கப்படுகிறது. நேபாள துணைப் பிரதமர் நாராயண் நேற்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தார்பாலின், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.
நேபாள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரேகா சர்மா, காத்மண்டுவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. நட்பு நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளின் நிவாரண உதவிகளை ஏற்றுக்கொள்ள நேபாள அரசு முடிவு செய்துள்ளது'' என்றார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பிரதமரின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் கீழ் முதல் நபராக இந்தியா அனுப்பி யது' எனக் குறிப்பிட்டாா்.
நிவாரணப் பொருட்களை நேபாள அதிகாரிகளிடம் நேபாளத்துக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா வழங்கினாா்.
- பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்க முடியவில்லை என்று அதிகாரிகள் தகவல்.
- மின்சாரம் இல்லாததால் மீட்புப்பணியில தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் மையம், நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதன்பின் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம், நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் உள்ள ஜாஜர்கோட், நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
ருகும் மாவட்டத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. காயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜாகர்கோட் மாவட்டத்தில் 34 பேர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்னர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்புப்பணியில தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேபாளத்தில் 89 பெண்கள் உள்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 190 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- காத்மாண்டில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம்
- 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தகவல்
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் மையம், நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதன்பின் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம், நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் உள்ள ஜாஜர்கோட், நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
ருகும் மாவட்டத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. காயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜாகர்கோட் மாவட்டத்தில் 34 பேர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்னர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்புப்பணியில தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய தலைநகர் டெல்லியில இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால், டெல்லிவாசிகள் லோசான அதிர்வை உணர்ந்தனர்.
இந்த நிலையில் நேபாளத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
- நேபாளத்தின் காத்மண்டுவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.
காத்மண்டு:
நேபாளத்தின் காத்மண்டுவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 4.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
- கடந்த 16-ந்தேதி 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
- 2015-ல் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்
நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பள்ளத்தாக்கில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடித் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
அக்டோபர் 16-ந்தேதி நேபாளத்தின் சுதுர்பாசிம் மாகாணத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 2015-ல் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளால் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11-வது நாடாக நேபாளம் உள்ளது. நேபாளம் திபெத்- இந்திய டெக்டோனிக் பிளேட் சந்திக்கும் முகட்டில் அமைந்துள்ளது. இந்த பிளேட்டுகள் நூற்றாண்டிற்கு ஒருமுறை இரண்டு மீட்டர்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக நகருகின்றன. இந்த அழுத்தம் காரணமாக நிலநடுக்கம் ஏற்படுகிறது.
- மூன்றாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகி இருக்கிறது.
- நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
நேபாளத்தின் மேற்கு பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இவை ரிக்டர் அளவுகோலில் 5.3 மற்றும் 6.3 என்று பதிவாகி உள்ளன. இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மூன்றாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகி இருக்கிறது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐந்து பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நிலநடுக்கத்தால், கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன.
இந்த நிலநடுக்கம் காரணமாக அருகாமையில் உள்ள இந்தியாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. தொடர்ச்சியான நிலநடுக்கம் குறித்து பேசிய உத்தரகண்ட் மாநிலத்தின் ஹெச்.என்.பி. மத்திய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் மகாவீர் நெகி, "இந்த சிறிய நிலநடுக்கங்கள் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட இருப்பதை உணர்த்துகின்றன," என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் பேசிய அவர், "பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு, பூமியில் உள்ள ஆற்றல் மட்டுமே வெளியேற்றப்படும். இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதோடு நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான கட்டிடங்களை கட்டமைக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
- நேபாளத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப் பெற்றது பசுபதிநாதர் கோவில்.
- அங்கு புகைப்படம் எடுத்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்தது.
காத்மண்டு:
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்திப் பெற்ற பசுபதிநாத் கோவில், பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தக் கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வமிகுதியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் இனிமேல் ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல டீஜ் பண்டிகை இன்று தொடங்கியுள்ள சூழ்நிலையில், பசுபதிநாத் கோவில் நிர்வாகம் இதுபோன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கையெழுத்தை பார்த்தால் கம்ப்யூட்டரே வெட்கப்படும் அளவிற்கு மிக அழகாக இருந்ததை கண்ட மக்கள் மாணவியை பாராட்டினர்.
- கடிதம் டுவிட்டரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
மாணவ-மாணவிகளின் கையெழுத்து அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்ணை பெற்றுத் தரும் என்பார்கள். அந்த வகையில் நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் கையெழுத்து உலகிலேயே மிகவும் அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்று கொடுத்துள்ளது.
பிரகிருதி மல்லா என்ற அந்த மாணவி தனது 14-ம் வயதில் 8-ம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கடிதத்தை பார்த்து பலரும் வியந்து போனார்கள். அந்த கையெழுத்தை பார்த்தால் கம்ப்யூட்டரே வெட்கப்படும் அளவிற்கு மிக அழகாக இருந்ததை கண்ட மக்கள் மாணவியை பாராட்டினர்.
இந்நிலையில் மாணவி பிரகிருதி மல்லா ஐக்கிய அரபு எமிரேட்சில் 51-வது ஆண்டு ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாழ்த்து கடிதம் எழுதினார். அவரது கடிதம் டுவிட்டரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதைப்பார்த்த பயனர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டு மாணவியை பாராட்டி வருகின்றனர்.
- 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
- 19 பேர் காயம் அடைந்துள்ளனர்
நேபாளத்தில் உள்ள பாரா மாவட்டத்தில் காத்மாண்டில் இருந்து ஜனக்பூருக்கு இந்தியாவைச் சேர்ந்த யாத்ரீகர்கள், டிரைவர், உதவியாளர் உள்பட 27 பேருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சூரியாமாய் கோவில் அருகே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 இந்தியர்கள் உள்பட 7 பேர் பரிதாபாக உயிரிழந்தனர். 19 பேர் காயத்துடன் உயிர்தப்பினர். உயிரிழந்த 6 இந்தியர்களும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
- நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் 5 பேர் பலி
- திடீரென ஏற்படும் மேகமூட்டத்தால் விபத்து ஏற்படுகிறது
இமயமலை சார்ந்த தேசமான நேபாளத்தில் விமான விபத்துக்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. மேகங்களால் பெரிதும் சூழப்பட்டு உயர்ந்த சிகரங்களுக்கு அருகில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கு பல விமான நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் அடிக்கடி பறக்கின்றன. சுற்றுலா பயணிகளுக்காக இவை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இரு தினங்களுக்கு முன் நேபாளத்தில் தனியார் விமான நிறுவனமான மனாங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றில் 5 மெக்சிகோ நாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்றனர். எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலை சிகரங்களை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பும்போது, அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 5 பேருடன், நேபாள விமானியும் உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய நேபாள அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது நேபாள விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஹெலிகாப்டர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு தடைவிதித்துள்ளது.
அத்தியாவசியமற்ற வான் பயணங்களாக கருதப்படும் மலை விமான பயணங்கள், ஸ்லிங் விமானங்கள் எனப்படும் வெளிப்புற சுமை செயல்பாட்டு விமான பயணங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் பொழிவது போன்ற அனைத்து செயல்களும் செப்டம்பர் வரை தடைவிதிக்கப்படுகிறது" என்று நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAN) தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம், சுற்றுலா நகரமான பொக்காரா அருகே ஒரு விமானம் விழுந்து நொறுங்கியதில் 71 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துக்களிலேயே, இது மோசமான விமான விபத்தாக பார்க்கப்பட்டது.
பருவமழை காலமான இந்த நேரத்தில் இத்தடை வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.