என் மலர்tooltip icon

    நேபாளம்

    • போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.
    • காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    நேபாளத்தில், 2007-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு குடியரசு உருவானது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

    இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.

    இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் ஞானேந்திராவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போராட்டங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஞானேந்திரா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

    வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் பாதுகாப்பை அரசாங்கம் குறைத்துள்ளது. அவரது வீட்டிற்கான பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டது.

    ஞானேந்திராவின் பாதுகாப்பு வீரர்களின் குழுவையும் அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாகவும், அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த வன்முறைகளுக்கு முன்னாள் மன்னர் ஞானேந்திரா பொறுப்பேற்கவேண்டும் என நேபாள காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மன்னராட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகள், இந்து ஆதரவு போராட்டக்காரர்களின் பின்னணியில் ஞானேந்திரா இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹால் குற்றம்சாட்டினார். 

    • நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.
    • இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காக, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதன்மூலம் 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாளம் மன்னராட்சியில் இருந்து மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

    இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

    • கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா உரையாற்றினார்.
    • நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

    நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரவும், இந்து ராஷ்டிரமாக அதை உருவாக்கவும் கோரி போராட்டம் வெடித்துள்ளது.

    இன்று நேபாள் தலைநகர் காதமாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) மற்றும் பிற குழுக்களும் போராட்டங்களை நடத்தின.

    காதமாண்டுவின் டிங்குனே பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் படங்களை ஏந்தியபடி, 'ராஜா வா, நாட்டைக் காப்பாற்று', 'ஊழல் அரசாங்கத்தை ஒழிக்க வா' மற்றும் 'முடியாட்சியை மீண்டும் விரும்புகிறோம்' போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

    பிரிகுதி மாண்டப் (Bhrikuti Mandap) என்ற பகுதியில் மன்னராட்சியை ஆதரிப்போரும், மக்களாட்சியை ஆதரிப்போரும் ஒரே நேரத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.

    போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து காவல்துறையினர் மீது கற்களை வீச முயன்றபோது நிலைமை மோசமடைந்தது. பதிலுக்கு, கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.

    மோதல்களின் போது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். மோதலுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் காயமடைந்தனர்.

    நிலைமை மோசமடைந்துள்ளதால் காத்மாண்டுவின் திங்குனே, சினமங்கல் மற்றும் கோட்டேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாள் அதிகாரபூர்வமாக அதுவரை மன்னராட்சியின் இந்து ராஷ்டிரமாக இருந்து வந்தது. ஆனால் பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக நேபாள் மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.


    தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதும் நேபாள மக்களுக்கு அதிருப்தி முன்னாள் மன்னர் மீது பெரிய அளவிலான ஆதரவு பெருகியது. இதன் உச்சமாக தற்போது அவரது ஆதரவு குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    வரலாற்றில் மன்னராட்சியை ஒழிக்க உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துள்ளன.ஆனால் மக்களாட்சியை ஒழித்து மன்னராட்சியை கொண்டு வர நேபாளத்தில் போராட்டம் நடப்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

    • ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
    • அந்நாடு அடிக்கடி பூகம்பங்களால் பாதிக்கப்படுகிறது.

    நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமுற்றனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    காத்மாண்டுவிலிருந்து 65 கி.மீ கிழக்கே உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள கோடாரி நெடுஞ்சாலையில் அதிகாலை 2.51 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மிகவும் சுறுசுறுப்பான டெக்டோனிக் மண்டலங்களில் ஒன்றில் அமைந்துள்ளது. இதனால் அந்நாடு அடிக்கடி பூகம்பங்களால் மிகவும் பாதிக்கப்படுகிறது.

    நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பத்து லட்சத்திற்கும் அதிகமான கட்டமைப்புகளை சேதப்படுத்தியது.

    • அமெரிக்க புவியியல் ஆய்வில் 7.1 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
    • இதில் 4,800 பேர் உயிரிழந்தனர்.

    திபெத்தில் நேற்று [செவ்வாயன்று] எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்  குறைந்தது 126 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    டிங்ரி கவுண்டியில் காலை 6:35 மணிக்கு இமயமலைக்கு சுமார் 80 கி.மீ. வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நேபாளம், பூடான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சீன அதிகாரிகளால் 6.8 ஆகவும், அமெரிக்க புவியியல் ஆய்வில் 7.1 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் லாசா தொகுதியில் [Lhasa block] ஏற்பட்ட உடைவால் தூண்டப்பட்டது. இது குறிப்பிடத்தக்க டெக்டோனிக் அழுத்தத்தின் கீழ் உள்ள பகுதியாகும்.

    கடந்த 60 மில்லியன் ஆண்டுகளாக இமயமலையின் வடிவத்தை தீர்மானித்து வரும் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் தொடர்ச்சியான மோதல் காரணமாக இந்த பகுதி அதிக நில அதிர்வு ஏற்படும் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில் திபெத் பல நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது. இங்கு 1950 இல் 8.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மற்றும் திபெத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய இதில் 4,800 பேர் உயிரிழந்தனர்.

    டெக்டானிக் தகடுகள் அல்லது நிலத் தட்டுகள் (tectonic plates) என்பன புவியின் மேலோட்டுப் பகுதியும் கடலின் அடிப்பகுதியும் பகுதியும் இணைந்த பாறைகளால் ஆனவை. புவியின் மேலோடு உடைந்த பாறைத் துண்டுகள் ஒன்று சேர்ந்தது போன்ற அமைப்பை கொண்டன. நிலத்தட்டுகள் ஏறக்குறைய 100கி.மீ அடர்த்தியினைக் கொண்டன. 

     

     

    • நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீதிகளுக்கு வந்தனர்.

    நேபாளத்தின் வடகிழக்கில் உள்ள லோபுச் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காலை 6.35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் காரணமாக மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 



    • நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது 4.8 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    காத்மண்டு:

    நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    கடந்த 2015-ல் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளால் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்.

    அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11-வது நாடாக நேபாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார்.
    • ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார்.

    காத்மண்டு:

    நேபாளத்தில் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடைபெறுகிறது.

    காத்மண்டுவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார். இறுதியில், போட்டி 1-1 என சமனில் இருந்தது.

    இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நேபாளம் 4-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது.

    • நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    காத்மண்டு:

    நேபாளத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

    தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 150-ஐ நெருங்கியது.

    பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

    இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரை காணவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாயமானோரை தேடும் பணியும் நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
    • நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    காத்மண்டு:

    நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல நகரங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ கடந்தது.

    அதிகபட்சமாக காத்மண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 64 பேரை காணவில்லை. தொடர் மழையால் காத்மண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.

    பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

    நேபாளம் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    • கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
    • வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    நேபாளத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மாண்டுவில் 226 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

    மேலும் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த நிலையில் நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.

    அதிகபட்சமாக காத்மாண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 64 பேரை காணவில்லை. இடைவிடாது மழை பெய்ததால் காத்மாண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. நேபாளம் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.

    • வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர்.
    • வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேபாளத்தின் சில பகுதிகள் நேற்று பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர்.

    இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் இறந்துள்ளனர். இதில், காத்மாண்டுவில் 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தபூரில் 5 பேரும், கவ்ரேபாலன்சௌக்கில் 3 பேரும், பஞ்ச்தார் மற்றும் தன்குடாவில் தலா இரண்டு பேரும், ஜாபா மற்றும் தாடிங்கில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    காத்மாண்டுவில் 226 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள காவல்துறையில் இருந்து சுமார் 3,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட மீட்புக் குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    ×