search icon
என் மலர்tooltip icon

    நியூசிலாந்து

    • சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது
    • கதிரியக்க படங்களில் வித்தியாசமாக எதுவும் தென்படவில்லை

    தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு நியூசிலாந்து. இதன் தலைநகரம் வெலிங்டன்.

    இந்நாட்டிலுள்ள பெருநகரங்களில் ஒன்று ஆக்லாந்து. இங்குள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவம் [இயற்கையான] நடப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருக்கு சி-செக்ஷன் (C-section)எனப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது.

    பிரசவம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது. வழக்கமான மருந்து மற்றும் மாத்திரைகளால் வலி குறையாததால், அவருக்கு எக்ஸ்-ரே எனப்படும் கதிரியக்க படங்கள் எடுக்கப்பட்டன. பரிசோதனையிலும் எதுவும் வழக்கத்திற்கு மாறாக தென்படவில்லை. இதனையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிந்துரைக்கப்பட்டது.

    சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கும் மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவரது வயிற்றில், சாப்பிடும் தட்டின் அளவிற்கு ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அப்பெண்ணிற்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அப்பொருள் வெளியில் எடுக்கப்பட்டது. அது, மருத்துவர்களால் அறுவை சிகிச்சையின் போது உபயோகப்படுத்தப்படும் அலெக்ஸிஸ் ரிட்ராக்டர் (Alexis retractor) என்பது தெரிய வந்துள்ளது.

    அறுவை சிகிச்சையில், அறுத்த தசைகளை தற்காலிகமாக விலக்கியே வைத்திருந்தால்தான் மருத்துவர்கள் கைகளாலும், உபகரணங்களை கொண்டும் சிகிச்சையை தொடர முடியும். இதற்காக பயன்படுத்தப்படும் ரிட்ராக்டர் எனப்படும் உபகரணம்தான் அப்பெண்ணின் வயிற்றில் இருந்துள்ளது.

    அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்திய இதனை, மருத்துவர்கள் கவனக்குறைவாக அப்பெண்ணின் வயிற்றிலேயே வைத்து தையல் போட்டுள்ளனர்.

    கதிரியக்க ஊடுருவலை தடுக்கும் பொருளால் உருவாக்கப்பட்டதால், அந்த உபகரணம் எக்ஸ்-ரே பரிசோதனையில் கண்டறியப்படவில்லை.

    "இது குறித்து மருத்துவமனையிலிருந்து எந்தவொரு விளக்கமும் கிடைக்கவில்லை. ஆக்லேண்டு மருத்துவமனையின் சுகாதார பராமரிப்பு, அடிப்படை தரத்திற்கும் கீழ்நிலையில் இருந்திருக்கிறது" என அந்நாட்டின் மருத்துவ துறையின் ஆணையர் இது குறித்து கூறினார்.

    அயல் நாடுகளில் மருத்துவ பராமரிப்பும், சுகாதார முறைகளும் உலகத்தரத்தில் விளங்குவதாக கருதும் போது, இது போன்ற செயல்கள் அங்கு நடப்பது வியப்பளிப்பதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ஒரு கட்டிடத்தை நோக்கி மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் இருவர் உயிரிழப்பு
    • பிரபலமான ஓட்டல்கள், மால்கள் அந்த பகுதியில் இருந்ததால் பரபரப்பு

    நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    துப்பாக்கிச்சூடு முக்கியமான ரெயில்நிலையம் அருகே கட்டுமான வேலை நடந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பிரபலான ஓட்டல்கள், மால்கள் உள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இன்று தொடங்கும். நாங்கள் பிஃபா உடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்கள் திட்டங்களை வழங்கி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் தேசிய அளவிலான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை'' என்றார்.

    • மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார்.
    • ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    நியூசிலாந்தில் ஆக்லாந்து நகரில் மூன்று சீன உணவகங்கள் உள்ளனர். இங்கு நேற்று இரவு ஏராளமானோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு உணவகத்துக்குள் சென்று வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கினார். இதனால் ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய 24 வயது வாலிபரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மற்ற விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • வெள்ளத்தில் சிக்கியதால் விவசாயம் தொடர்பான பொருளாதாரம் பாதிப்பு
    • தற்போது உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணம்

    கொரோனா வைரஸ் தொற்று பரவிய 2020-ம் ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளை முன்னெச்சரிக்கை காரணமாக மூடியது. முக்கியமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் எல்லைகளை மூடுவதில் அதிதீவிரம் காட்டின.

    ஒரு பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலே, உடனடியாக அந்த இடத்தையே தனிமைப்படுத்தியது நியூசிலாந்து. இதனால் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. வெளிநாட்டு தொடர்பை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. இதனால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதன்பின் நிலை சீராக பொருளாதாரம் ஓரளவிற்கு நிமிரத்தொடங்கியது.

    இந்த நிலையில் தற்போது 2020-ல் இருந்து முதன்முறையாக பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த ஆண்டு முடிவில் பொருளாதார வீழ்ச்சி 0.7 சதவீதம் சரிந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 0.1 சதவீதம் குறைந்துள்ளது.

    பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உலகளாவிய பொருளாதார மந்தநிலை 2023-ல் சவாலாக இருக்கும். பணவீக்கம் அதிகரிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருக்கும். வானிலை தொடர்ந்து இடையூறாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் என நிதிமந்திரி கிரான்ட் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் ஆக்லாந்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பிப்ரவரி மாதம் கேப்ரியல் என்ற புயல் காரணமாக ஏற்பட்ட சேதம் ஆகியவை பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக மட்டும் நியூசிலாந்து 9 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சேதத்தை எதிர்கொண்டுள்ளது.

    பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து பணவீக்கம் 6.7 ஆக உள்ள நிலையில், அக்டோபர் மாதம் அங்கு தேசிய தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த விவகாரம் தலைதூக்கும் எனத் தெரிகிறது.

    நியூசிலாந்தில் விவசாயம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேவைகள் என அனைத்து துறையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    • கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார்.
    • சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். 2017-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார். கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார். இது நியூசிலாந்து மக்கள் மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2-வது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது, 'இந்த விருதை ஏற்றுக்கொள்வது பற்றி நான் இரண்டு மனதாக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனிநபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும். இது எனது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும்' என்றார்.

    • வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது.
    • இந்த ஹாஸ்டலில் இன்று திடீரென தீ பற்றியது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட ஹாஸ்டல் அமைந்துள்ளது. இந்த ஹாஸ்டலில் இன்று திடீரென தீ பற்றியது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    பிரதம மந்திரி கிறிஸ் ஹாப்கின்ஸ் தீ விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஹாஸ்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகட்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது.
    • நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கெர்மடெக்:

    நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • முதலில் ஆடிய இலங்கை 196 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்தும் 196 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது.

    ஆக்லாந்து:

    இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது நியூசிலாந்து.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. அசலங்கா 67 ரன்னில் அவுட்டானார். குசல் பெரேரா அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. மார்க் சாம்பன் 33 ரன்னும், டாம் லதாம் 27 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் அரை சதம் அடித்து அசத்து 66 ரன்கள் விளாசினார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 8 ரன் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து 6 பந்தில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 3 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் இலங்கை வெற்றி பெற்றது. அசலங்கா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காதல் தோல்வியில் சிக்கி அவதிப்படும் இளம் தலைமுறையினரை மீட்க நியூசிலாந்து அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.
    • காதல் தோல்வி அடைந்தவர்கள் தங்களின் உணர்வுகளை ஆரோக்கியமாக மாற்ற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காதலில் தோல்வி அடைபவர்கள் சோகம், மன வருத்தம், தாழ்வு மனப்பான்மை, தனிமை போன்றவற்றால் அவர்களின் மன வேதனை அதிகரித்து விடுகிறது.

    இதனால் சில நேரங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. ஏழை, நடுத்தர நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்த நாடுகளில் ஒன்றான நியூசிலாந்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் அதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, காதல் தோல்வியில் சிக்கி அவதிப்படும் இளம் தலைமுறையினரை மீட்க நியூசிலாந்து அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி 'லவ் பெட்டர்' என்ற பிரசாரத்தை அரசு தொடங்கி உள்ளது.

    இந்த முயற்சியானது காதல் தோல்வியால் குடும்பங்களில் ஏற்படும் வன்முறையை தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 3 ஆண்டுகளில் சுமார் 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

    இந்த பிரசாரத்தில் பலரும் தங்களது காதல் தோல்வியின் நிஜ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது காதல் தோல்வி அடைந்தவர்கள் தங்களின் உணர்வுகளை ஆரோக்கியமாக மாற்ற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரசாரத்தை தொடங்கி வைத்த நியூசிலாந்து நாட்டின் சமூக மேம்பாட்டு இணை அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் கூறுகையில், தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்காமல் ஒரு வழி இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ளவும், அவர்களின் காயங்களை சமாளிக்கவும் அரசு விரும்புகிறது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 3.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • கடந்த வியாழன் அன்று நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

    இந்த நிலையில், நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 3.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது.

    இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த வியாழக்கிழமை, நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.

    கெர்மடெக்:

    நியூசிலாந்து நாட்டில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

    இன்று அதிகாலை அந்த நாட்டில் உள்ள கெர்மடெக் தீவுகளில் திடீரென சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உலுக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளியாக பதிவானதாக நில நடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.

    நில நடுக்கம் ஏற்பட்ட கெர்மடெக் தீவுகளை சுற்றி 300 கிலோ மீட்டர் தூரத்தில் பொதுமக்கள் யாரும் வசிக்கவில்லை. இதனால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தான் நாட்டிலும் இன்று நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.

    • பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 2வதுமுறையாக சீறந்த வீராங்கனை விருது பெற்றார்.

    துபாய்:

    இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக0 தேர்வு செய்யப்பட்டார்.

    இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி ஆகியோரின் கடுமையான போட்டியை முறியடித்து, வளர்ந்து வரும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஹாரி புரூக் விருதுக்கான வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு செப்டம்பரில் டெஸ்டில் அறிமுகமான போதிலும், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஏற்கனவே இங்கிலாந்தின் புதிய ஆபத்தான மனிதராக உருவெடுத்து வருகிறார், மேலும் டிசம்பரில் ஐசிசி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பிறகு, அவரது வேகம் இன்னும் அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 24 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உள்பட ஒரு இன்னிங்ஸில் 186 ரன்களை விளாசியிருந்தார். மொத்தம் நடந்த இரண்டு டெஸ்டில் அவர் 329 ரன்கள் எடுத்தார்.

    இதேபோல், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 2வதுமுறையாக சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

    ×