search icon
என் மலர்tooltip icon

    நியூசிலாந்து

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பியான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில் கிழித்த சம்பவம் உலகத்தின் கவனத்தை பெற்றுள்ளது..

    ஹனா-ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் எனும் 22 வயதான இளம் எம்பி, தனது கன்னி உரையின் போதே மாவோரி மொழியில் பேசியது நியூசிலாந்து மட்டுமல்லாது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூசிலாந்து ஆளும் கூட்டணியில் ஏசிடி கட்சி முன்மொழிவை கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தது.

    அதன்படி, நேற்று நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பி, ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




    • இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

    அன்பானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவர்களை ஆரத்தழுவி வழியனுப்பி பிரியாவிடை கொடுப்பது வழக்கம். அப்போது மனித உணர்ச்சிகள் தவழும் இடமாக விமான நிலையங்கள் இருக்கும்.

    இந்தநிலையில் நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. அங்குள்ள அறிவிப்பு போஸ்டரில் 'கட்டி தழுவுவதற்கான நேரம்-அதிகப்பட்சம் 3 நிமிடங்கள். நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்' என அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

    காலதாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் பயணிகளின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.

    • ஆசியான் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
    • நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஆசியா அமைப்பின் 19-வது உச்சி உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

    அங்கு நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். இந்திய நாட்டை நான் நேசிக்கிறேன், மிகவும் மதிக்கிறேன். நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் திறமையாக செயலாற்றி வருகிறார்கள். அவர்கள் மிகுந்த உத்வேகம் அளிப்பவர்கள், கடின உழைப்பாளிகள்.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது. என்னை இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அதற்கான சரியான நேரத்தை நாங்கள் விரைவில் முடிவு செய்வோம். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உறவை மேலும் பலப்படுத்த தொடர்ந்து உழைப்போம்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நியூசிலாந்து நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
    • நியூசிலாந்தில் இருந்து பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

    நியூசிலாந்து நாட்டில் இருந்து எண்ணற்ற மக்கள் வெளியேறி வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர்.

    அந்நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வால் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

    கடந்த 1 வருடத்தில் மட்டும் நியூசிலாந்து நாட்டில் இருந்து ௧,31,200 மக்கள் வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமானதாகும்.

    நாட்டை விட்டு வெளியேறிய மக்களின் மூன்றில் ஒருபங்கினர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். 

    • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 1 முதல் 29 வரை நடக்க உள்ளது
    • இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்க உள்ளது. லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் மே 1- ந் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.




    இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக மீண்டும் நியமன செய்யப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ,

    டேரல் மிட்சல், ஜேம்ஸ் நீஷம், மார்க் சேப்மேன், பிரேஸ்வெல், ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் நட்சத்திர வீரர் கிளென் பிலிப்ஸ் பேக் அப் விக்கெட் கீப்பர், ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக சான்ட்னர், இஷ் சோதி ஆகியோர் இதில் இடம் பிடித்துள்ளனர்.



    மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக போல்ட், சவுதி, ஹென்ரி, ஃபெர்குசன் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.4வது முறையாக டி20 உலகக்கோப்பையில் கேன் வில்லியன்சன் கேப்டனாக நியூசிலாந்து அணியை வழி நடத்த உள்ளார்.

    இதற்கு முன் அவரது தலைமையில் நியூசிலாந்து அணி 2016 -ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கும், 2021- ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இறுதி சுற்றுக்கும், 2022 -ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 164 ரன்னில் சுருண்டது.
    • நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் வெலிங்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீனின் பொறுப்பான சதத்தால் 383 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 179 ரன்களில் ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் 71 ரன்னும், மேட் ஹென்றி 42 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 2வது இன்னிங்சில் 164 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நாதன் லயன் 41 ரன்னில் வெளியேறினார்.

    நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி வெற்றிபெற 369 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது இன்னிங்சில களமிறங்கிய நியூசிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 56 ரன்னுடனும், டேரில் மிட்செல் 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் நியூசிலாந்து வெற்றிபெற 258 ரன்கள் தேவை என்பதால் உள்ளூர் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    • எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
    • இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.

    ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழை காரணமாக டி20 போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 118 ரன்கள் எடுத்தபோது மழையால் தடைபட்டது.

    ஆக்லாந்து:

    ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 10.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹெட் 33 ரன்னும், ஷாட் 27 ரன்னும், மெக்ஸ்வெல் 20 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவரில் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என நியூசிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


    தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் நியூசிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டி20 தொடரை நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

    ஆட்ட நாயகனாக மேத்யூ ஷாட்டும், தொடர் நாயகனாக மிட்செல் மார்ஷும் தேர்வாகினர்.

    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
    • டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரை கைப் பற்றியது.

    இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 1 சிக்சர் அடித்தார். இது அவரது 126-வது சிக்சர் ஆகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதற்கு முன் ஆரோன் பிஞ்ச் 125 சிக்சர்கள் அடித்ததே சாதனையாகும். அவரை தற்போது மேக்ஸ்வெல் முந்தியுள்ளார். மற்ற ஆஸ்திரேலிய வீரரர்களில் டேவிட் வார்னர், 113 சிக்சர்களும், வாட்சன் 83 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

    சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தில் இருக்கிறார்.

    ரோகித் சர்மா 190 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், குப்தில் (நியூசிலாந்து) 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து 215 ரன்கள் குவித்தது.

    வெல்லிங்டன்:

    ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து முதலில் ஆடியது. பின் ஆலன் 32 ரன்னில் அவுட்டானார். டேவன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக ஆடினார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர்.

    ரச்சின் 35 பந்தில் 68 ரன்னும், கான்வே 46 பந்தில் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்னும், 2வது இன்னிங்சில் 235 ரன்னும் எடுத்தது.
    • நியூசிலாந்து வெற்றி பெற 267 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹாமில்டன்:

    தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்கள் அடித்தது.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பிட் 5 விக்கெட்டும், டேன் பேட்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 31 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அந்த அணியின் பெடிங்காம் 110 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து, 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து வெற்றி பெற 227 ரன்கள் தேவைப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 9 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பதால் இப்போட்டி பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.

    • முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
    • வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    மவுண்ட் மாங்கனு:

    தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து முதலில் களமிறங்கியது. டேவன் கான்வெ ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டாம் லாதம் 20 ரன்னில் வெளியேறினார். 39 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது.


    அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடியை தென் ஆப்பிரிக்கா வீரர்களால் பிரிக்க முடியவில்லை

    இறுதியில், முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 112 ரன்னும், ரவீந்திரா 118 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 219 ரன்கள் சேர்த்துள்ளது.

    ×