என் மலர்tooltip icon

    எகிப்து

    • அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்திய வீரர்.
    • பாரீசில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

    எகிப்த் நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்ட 18 வயதான இந்திய வீரர் ருத்ராங்கஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் இத்தாலி வீரர் டானிலோ டென்னிஸ் சொலாஸ்ஸோவை 17-13 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.

    இதன் மூலம் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார்.

    • கெய்ரோவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

    கெய்ரோ:

    எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடமேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திடீரென இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

    மின்சார கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கி விடப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிபர் அப்துல் பதா அல்-சிசி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • எகிப்து ஹெர்ஹெடா மாகாணத்தில் செங்கடல் பகுதி அமைந்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கெய்ரோ:

    எகிப்து ஹெர்ஹெடா மாகாணத்தில் செங்கடல் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஷஹெல் ஹெஷ்ரிப் கடற்கரை சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது.

    இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது உண்டு. நேற்று விடுமுறையை கழிக்க பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக கடலில் இறங்கி குளித்தனர். சிலர் படகில் சென்று இயற்கை அழகை ரசித்தனர்.

    அப்போது கடலில் குளித்துக்கொண்டு இருந்தவர்களை சுறா திடீரென தாக்கியது. இதில் 2 பெண்கள் கடலுக்குள்ளே இறந்தனர். இதனால் அந்த பகுதி கடல் தண்ணீர் ரத்தமாக காட்சிஅளித்தது. மேலும் சிலர் சுறா தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் பயத்தால் அலறினார்கள். அவர்கள் அவசர, அவசரமாக நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சுற்றி உள்ள கடற்கரைகளை 3 நாட்கள் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ×