என் மலர்
செய்திகள்
X
அ.தி.மு.க. இரு அணிகளுக்கு இடையே பிரமாண பத்திரம் தாக்கலுக்கு கடும் போட்டி
Byமாலை மலர்31 May 2017 10:42 AM IST (Updated: 31 May 2017 10:42 AM IST)
இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கு இடையே பிரமாண பத்திரம் தாக்கலுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
சென்னை:
ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவரது தோழி சசிகலா முதல்- அமைச்சராக முயற்சி செய்ததால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது.
சசிகலா தலைமையில் ஒரு பிரிவினரும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகிறார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிட்டதால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதோடு சசிகலா அணிக்கு அ.தி.மு.க. அம்மா அணி என்றும், ஓ.பி.எஸ். அணிக்கு அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி என்றும் பெயரிடப்பட்டது.
இதையடுத்து எந்த அணி உண்மையான அ.தி.மு.க. என்பதை நிருபிப்பதற்காக தலைமை தேர்தல் கமிஷன் வாய்ப்பு கொடுத்துள்ளது. அதன் பேரில் இரு அணிகளும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் இருந்து பிரமாண பத்திரங்களில் கையெழுத்து பெற்று அவற்றை தேர்தல் கமிஷனிடம் ஒப்படைத்து வருகின்றன.
அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 16 லட்சத்து 90 ஆயிரம் பேர் பல்வேறு பதவிகளில் பொறுப்புகளில் உள்ளனர். இவர்களில் அதிகம் பேர் எந்த அணிக்கு ஆதரவாக இருக்கிறார்களோ அந்த அணிக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் அமைப்பு ரீதியாக உள்ளவர்களிடமும், தொண்டர்களிடமும் அ.தி.மு.க. இரு அணியினரும் போட்டி போட்டு பத்திரங்களில் கையெழுத்து பெற்று வருகிறார்கள்.
இதுவரை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 1 லட்சத்து 68 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று தேர்தல் கமிஷனிடம் ஒப்படைத்துள்ளனர். சசிகலா அணியினர் 84 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று பிரமாண பத்திரங்களை தேர்தல் கமிஷனிடம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து சசிகலா அணியின் வக்கீல் செந்தில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
கட்சியில் அமைப்பு ரீதியாக பொறுப்பில் இருப்பவர்களிடமும், அந்த கட்சியின் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தும் மட்டுமே பிரமாண பத்திரங்களில் கையெழுத்து பெற்று தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளது.
அந்த அடிப்படையில் நாங்கள் மாவட்ட வாரியாக அமைப்பு பொறுப்புகளில் இருப்பவர்களிடம் கையெழுத்து பெற்று வருகிறோம். இதுவரை தேனி, விழுப்புரம் தெற்கு, விழுப்புரம் வடக்கு, மதுரை மாநகர், சேலம் மாநகர், காஞ்சீபுரம் மத்தி ஆகிய 6 மாவட்டங்களில் கையெழுத்து பெற்று முடித்து விட்டோம்.
மீதமுள்ள மாவட்டங்களில் இன்னும் 15 நாட்களுக்குள் கையெழுத்து பெற்று தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தமிழ் நாட்டில் அ.தி.மு.க.வுக்கு சுமார் 1½ கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருப்பவர் 1½ கோடி தொண்டர்களால்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கட்சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நாங்கள் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர், மக்கள் பிரதிநிதிகளிடம் கையெழுத்து பெற்று வழங்கி வருகிறோம்.
இதுவரை சுமார் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இன்னும் 10 லட்சம் தொண்டர்களிடம் கையெழுத்து பெற உள்ளோம்.
ஒவ்வொரு கட்சிக்கும் விதிகள் மாறுபடும். ஏதோ ஒரு கட்சியின் விதிப்படி முன்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அந்த தீர்ப்பு தற்போதைய அ.தி.மு.க. விவகாரத்துக்கு பொருந்தாது.
அ.தி.மு.க. விதியின் அடிப்படையில் உறுப்பினர்கள் தான் எதையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். எனவே நாங்கள் அ.தி.மு.க. வின் அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து பெற்று வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு ஜூன் 17-ந்தேதி தலைமை தேர்தல் கமிஷன் கால அவசாகம் வழங்கி உள்ளது. அதற்குள் இரு அணிகளும் இன்னும் லாரி லாரியாக பிரமாண பத்திரங்களை அள்ளிக்கொண்டு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17-ந்தேதிக்கு பிறகு அந்த பிரமாண பத்திரங்களை தலைமை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும். அதன் அடிப்படையிலேயே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும்.

Next Story
×
X