search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுடன் இன்றும் சந்திப்பு
    X

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுடன் இன்றும் சந்திப்பு

    பேரறிவாளன் பரோல் விவகாரத்தை சட்டசபையில் எழுப்பி மு.க.ஸ்டாலின் பேசினார். இதனால் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மூவரும் இன்றும் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்கள்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

    கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது இவர்கள் மூவரும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    சட்டசபையில் அ.தி.மு.க. எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப இவர்கள் செயல்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அவர்களது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது.

    ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்கும் விவகாரத்தில் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

    இதையடுத்து இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்கள்.


    அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர். பேரறிவாளனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதை ஏற்று பேரறிவாளன் பரோல் விவகாரத்தை சட்டசபையில் எழுப்பி மு.க.ஸ்டாலின் பேசினார். இதனால் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மூவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சட்டசபைக்குள் அவர்கள் இன்றும் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்கள். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை ஏற்று பேசியதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
    Next Story
    ×