search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. நாளேடு
    X

    தினகரனின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. நாளேடு

    ஆட்சி எடப்பாடி பழனிசாமி கையில் இருந்தாலும் கட்சியின் நாளேடான நமது எம்.ஜி.ஆர் தினகரன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி செய்திகள் புறக்கணிக்கப்படுகிறது.
    சென்னை:

    ஆளும் கட்சி அ.தி.மு.க. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அந்த கட்சியின் நாளேடான நமது எம்.ஜி.ஆரில் முதல்-அமைச்சர் சம்பந்தப்பட்ட செய்திகள் எதுவும் இடம்பெறுவதில்லை.

    ஆட்சி எடப்பாடி பழனிசாமி கையில் இருந்தாலும் கட்சி பத்திரிகை தினகரன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி செய்திகள் புறக்கணிக்கப்படுகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து, கட்சி நிர்வாகி ஒருவரது மரணத்துக்கு இரங்கல் ஆகிய செய்திகள் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், டி.டி.வி.தினகரன் பெயரிலும் வெளியிடப்பட்டது. அதில் தினகரன் வெளியிட்ட அறிக்கைகள் மட்டுமே நமது எம்.ஜி.ஆரில் வெளியாகி இருக்கிறது.



    கட்சியினரிடையே ஒற்றுமையை வலியுறுத்தி சசிகலா வெளியிட்டதாக ஒரு அறிக்கை நேற்று நமது எம்.ஜி.ஆரில் வெளியிடப்பட்டது. பெங்களூரில் ஜெயிலில் இருக்கும் சசிகலா எப்படி அறிக்கை வெளியிட்டார் என்ற சந்தேகம் எழுந்தது.

    ஆனால் இந்த அறிக்கை கடந்த ஜனவரி 16-ந்தேதி சசிகலா வெளியிட்டு ஏற்கனவே வெளிவந்தது என்று அந்த பத்திரிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடி வரும் நிலையில் தினகரன் அணி சார்பில் மதுரை மேலூரில் இன்று பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக சசிகலா அறிக்கையை மீண்டும் பிரசுரித்ததாக கூறினார்கள்.

    Next Story
    ×