என் மலர்
செய்திகள்

X
தமிழிசையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்: 50 பேர் கைது
By
மாலை மலர்24 Oct 2017 3:16 PM IST (Updated: 24 Oct 2017 3:16 PM IST)

பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் மூலக்கடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்:
‘மெர்சல்’ படம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர்களை வளைத்து தமிழகத்தில் கால் ஊன்ற பா.ஜனதா முயற்சிப்பதாக கூறினார்.
இதற்கு பதில் அளித்த பா.ஜனதா தலைவர் தமிழிசை, திருமாவளவன் நிலங்களை அபகரிப்பதாக கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து பெரம்பூர் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கல்தூண் ரவி தலைமையில் மூலக்கடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது தமிழிசையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.

Next Story
×
X