என் மலர்
செய்திகள்
X
திமுகவினருக்கு நல்ல எண்ணம் கிடையாது -விழுப்புரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
Byமாலை மலர்20 March 2021 6:03 PM IST (Updated: 20 March 2021 6:03 PM IST)
சட்டப்பேரவையில் கலாட்டா செய்த திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? என எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:-
வரும் தேர்தல்தான் திமுகவுக்கு இறுதி தேர்தல் ஆகும். திமுகவினருக்கு நல்ல எண்ணம் கிடையாது, தீய எண்ணம் படைத்தவர்கள். ஆட்சியில் அதிமுக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் மனு வாங்கி என்ன செய்யப்போகிறார்?
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. தேர்தலில் வாரிசுகள் போட்டியிடுவதில் தவறில்லை. ஆனால் கட்சிக்கே தலைவராவது தவறு. தோல்வி பயத்தில் மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார். சட்டப்பேரவையில் கலாட்டா செய்த திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா?
அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் வீடற்றவர்கள் என்ற நிலை மாறும். வீடில்லா மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
X