என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![பல்லடம் தொகுதி பல்லடம் தொகுதி](https://img.maalaimalar.com/Articles/2021/Mar/202103281132403474_Tamil_News_Palladam-constituency-Overview_SECVPF.gif)
X
பல்லடம் தொகுதி
2001-ல் இருந்து அதிமுக கைவசம் இருக்கும் பல்லடம் தொகுதி கண்ணோட்டம்
By
மாலை மலர்28 March 2021 11:32 AM IST (Updated: 28 March 2021 11:32 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று பல்லடம் தொகுதி. 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அதிமுக சார்பில் எம்.எஸ்.எம். ஆனந்தன், மதிமுக சார்பில் க. முத்துரத்தினம், மக்கள் நீதி மய்யம் சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் சுப்பிரமணியம், அமமுக சார்பில் ஆர். ஜோதிமணி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் ஆனந்தன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 6,60,000
2. அசையும் சொத்து- ரூ, 14,07,703
3. அசையா சொத்து- ரூ. 1,09,40,000
மதிமுக வேட்பாளர் முத்துரத்தினம் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 25,000
2. அசையும் சொத்து- ரூ, 15,29,050
3. அசையா சொத்து- ரூ. 1,10,00,000
பல்லடத்தின் பிரதான தொழில்களாக கறிக்கோழி பண்ணை, விசைத்தறிகூடங்கள், நூற்பாலைகள் மற்றும் விவசாயம் தொகுதி மக்களின் பிரதானத் தொழில்களாகும். பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.தொகுதியில் கொங்குவேளாளர், தலித் மற்றும் நாயக்கர் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஊராட்சி பகுதிகளில் சாலைகள், நிழற்குடைகள், நியாய விலைக்கடை கட்டிடங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பல்லடம் பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். பல்லடம் அரசுமருத்துமனையை தரம் உயர்த்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்விதமாக, சாலைவசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுச்சாலை அமைத்து, போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும். மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக பூங்கா அமைக்க வேண்டும். கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதனை தீர்க்க தேவையான பார்க்கிங் செய்து கொடுக்க வேண்டும். பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும் அல்லது இடம் மாற்றம் செய்ய வேண்டும்.
பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காடாத்துணிகளை விற்பதற்கு, தனிச்சந்தை உருவாக்க வேண்டும். பண்ணைகளில் கறிக்கோழிகளை வளர்க்க இலவச மின்சாரம் வழங்க வேண்டும். வெயில்காலங்களில், கறிக்கோழி பண்ணைகளின் தேவைகளை நிறைவேற்றித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு, மானியத்தில் தீவனங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் இங்குள்ள விசைத்தறி மற்றும் கறிக்கோழி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்.
தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக பிரஜா சோசியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளாக அ.தி.மு.க. வேட்பாளரே தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதி இது. பிரஜா சோசியலிஸ்ட் கட்சி 3 முறையும், தி.மு.க.,2 முறையும், அ.தி.மு.க. 7 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது, பல்லடத்தின் 13-வது சட்டப்பேரவை உறுப்பினராக அ.தி.மு.க. கே. பரமசிவம் உள்ளார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
திருப்பூர் வட்டம் (பகுதி) முதலிபாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, முத்தணம்பாளையம், இடுவாய், உகயனூர், தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அழகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், பொங்கலூர், மடப்பூர், காட்டூர், வி.கள்ளிபாளையம், எலவந்தி, கேத்தனூர், வாவிபாளையம் மற்றும் வி.வடமலைபாளையம் கிராமங்கள், ஆண்டிபாளையம் (சென்சஸ் டவுன்), மங்கலம்(சென்சஸ் டவுன்), முருகன்பாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வீரபாண்டி (சென்சஸ் டவுன்),
பல்லடம் தாலுக்கா (பகுதி) பூமலூர், வேலம்பாளையம், நாரணபுரம், கரைபுதூர், கணபதிபாளையம், பல்லடம், கக்கம்பாளையம், இச்சிப்பட்டி, கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி, வடுகபாளையம், சிட்டம்பலம், அனுப்பட்டி,கஸ்பா, அய்யம்பாளையம், கரடிபாவி, பருவை, மல்லேகவுண்டன்பாளையம், புளியம்பட்டி மற்றும் கே.கிருஷ்ணபுரம் கிராமங்கள்,
![பல்லடம் தொகுதி பல்லடம் தொகுதி](https://img.maalaimalar.com/InlineImage/202103281132403474_1_Palladam001._L_styvpf.jpg)
ஆனந்தன் , முத்துரத்தினம்
செம்மிபாலையம் (சென்சஸ் டவுன்) மற்றும் பல்லடம் (நகராட்சி).பல்லடம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. பல்லடம் தொகுதியில் மொத்தம் 407 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.
மொத்த வாக்காளர்கள்
ஆண்- 1,93,139
பெண்கள்-1,93,904,
திருநங்கைகள்- 68,
மொத்தம்- 38,7111.
தேர்தல் வெற்றி
1957- பி.எஸ்.சின்னதுரை- பிரஜா சோசலிச கட்சி
1962- செங்காளியப்பன்- காங்கிரஸ்
1967- கே.என்.கவுண்டர்- பிரஜா சோசலிச கட்சி
1971- கே.என்.குமாரசாமி- பிரஜா சோசலிச கட்சி
1977- பி.ஜி.கிட்டு- அ.தி.மு.க.,
1980- பரமசிவ கவுண்டர்- அ.தி.மு.க.,
1984- பரமசிவ கவுண்டர்- அ.தி.மு.க.,
1989- மு.கண்ணப்பன்- தி.மு.க.,
1991- கே.எஸ்.துரைமுருகன்- அ.தி.மு.க.,
1996- எஸ்.எஸ்.பொன்முடி- தி.மு.க.,
2001- எஸ்.எம். வேலுசாமி- அ.தி.மு.க.,
2006- எஸ்.எம்.வேலுசாமி- அ.தி.மு.க.,
2011- பரமசிவம்- அ.தி.மு.க.,
2016- நடராஜன்- அ.தி.மு.க.,
2016 தேர்தல்
நடராஜன் (அ.தி.மு.க. வெற்றி)- 1,11,866
கிருஷ்ணமூர்த்தி(தி.மு.க.)- 79,692
முத்துரத்தினம் (ம.தி.மு.க.)- 14,841
தங்கராஜ் (பா.ஜ.க.)- 13,127
ராஜேந்திரன் (கொ.ம.தே.க.)- 6,572
நோட்டா- 3,904.
Next Story
×
X