search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2020 முதல் எலெக்ட்ரிக் பைக்: பஜாஜ் ஆட்டோ அதிரடி திட்டம்
    X

    2020 முதல் எலெக்ட்ரிக் பைக்: பஜாஜ் ஆட்டோ அதிரடி திட்டம்

    இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ 2020-ம் ஆண்டு வாக்கில் எலெக்ட்ரிக் மாடல்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ எலெக்ட்ரிக் சந்தையில் 2020-ம் ஆண்டு வாக்கில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன தலைவர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும் பஜாஜ் நிறுவனம் தற்சமயம் அர்பனைட் எனும் பிரான்டு உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் இது இருசக்கர வாகனங்கள் பிரிவில் டெஸ்லா போன்றே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் வெளியாகும் மற்ற விலை குறைந்த எலெக்ட்ரிக் மாடல்களை போன்று இருக்காது.

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் மாடல்கள் குறைந்த செயல்திறன் கொண்டிருப்பதால் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்காது. பஜாஜ் ஆட்டோ மட்டுமின்றி ஹீரோ எலெக்ட்ரிக் இந்திய சந்தையில் பத்து ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறது. இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக் 300 விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை கொண்டிருக்கிறது.



    இதேபோல் டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. எனினும் ஒரே நிறுவனத்தில் பிரத்தியேக EV பிரிவை நிறுவ இருக்கும் முதல் நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ இருக்கும்.

    பஜாஜ் அர்பனைட் பிரான்டு பிரீமியம் இருசக்கர வாகனங்கள் மீது அதிக கவனம் செலுத்தும் என்றும் இந்த பிரான்டு பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அல்லது பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் என கூறப்படுகிறது.

    பஜாஜ் பிரீமியம் வாகனங்கள் டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் T6X எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. புதிய ஸ்கூட்டர் S340 ஸ்மார்ட் எலெக்ட்ர்க் ஸ்கூட்டர் நிறுவனத்துடன் இணையலாம் ன எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×