என் மலர்
வணிகம் & தங்கம் விலை
பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி: சுமார் 4.92 லட்சம் கோடி ரூபாய் சரிவை சந்தித்த முதலீட்டாளர்கள்
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 1.30 சதவீதம் சரிவை சந்தித்தது.
- 30 நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 384.55 சரிந்து 81,748.57 புள்ளிகளில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,511.81 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. நேற்றைய புள்ளிகளை விட இன்று சுமார் 237 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் தொடர்ந்து குறைந்து கொண்டே வர்த்தகம் ஆனது. இன்று அதிகபட்சமாக 81,613.63 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,612.20 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 80,684.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் குறைந்தது. இது 1.30 சதவீதம் ஆகும்.
இதன்மூலம் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 4.92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் 30 நிறுவன பங்குகளில் இன்று சரிவை சந்தித்தன.
பாரதி ஏர்டெல், இந்துஸ்இந்த் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏசியன பெயின்ட்ஸ், லார்சன் அண்டு டூர்போ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று 332.25 புள்ளிகள் சரிந்து 24,336.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.