search icon
என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 1200 புள்ளிகள் வரை சரிந்து, 843.16 உயர்வுடன் முடிவு

    • மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது.
    • குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80, 082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

    30 நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று மதியம் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 81,289.96 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இன்று காலை வர்த்தகம் 9.15 மணிக்கு சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது. சுமார் 10.30 மணியளவில் சென்செக்ஸ் புள்ளிகள் சரியத் தொடங்கின. காலை 10.45 மணிக்கு சுமார் 1,200 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 80,082.82 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. அப்போது பாரதி ஏர்டெல் நிறுவன பங்கைத் தவிர மற்ற அனைத்து நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. குறிப்பாக வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.

    சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிந்த சிறிது நேரத்த்தில் வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. மெல்லமெல்ல சரிவில் இருந்து மீண்ட வர்த்தகம், பின்னர் உயர்வை நோக்கி சென்றது. அதன்பின் மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கவில்லை. இறுதியாக 3.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 843.6 புள்ளிகள் உயர்ந்து 82,133.12 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80, 082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

    ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா ஸ்டீல், இந்தூஸ்இன்ட் பேங்க் (Indusind Bank) ஆகிய நிறுவன பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன.

    பாரதி ஏர்டெல் பங்கு 4.42 சதவீதம், ஐ.டி.சி. பங்கு 2.04 சதவீதம், இந்துஸ்தான் யுனிலிவர் பங்கு 19.3 சதவீதம் ஏற்றம் கண்டன.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50 இன்று 219.60 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிஃப்டி 24,768.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 24548.70 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 24498.35 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.

    இன்று குறைந்த பட்சமாக 24180.80 புள்ளிகளிலும், அதிகபட்சமாசக 24,792.30 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    Next Story
    ×