என் மலர்
வணிகம் & தங்கம் விலை
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிரொலி: 1076 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை
- கடந்த வாரம் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் சுமார் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு.
- இன்று காலை சென்செக்ஸ் 1076 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
தீபாவளி பண்டிகை, அமெரிக்க அதிபர் தேர்தல், அதானி மீது அமெரிக்க குற்றச்சாட்டு ஆகியவற்றின் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை வரை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது.
கடந்த 21-ந்தேதி (வியாழக்கிழமை) 0.54 சதவீதம் குறைந்த மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 77,155 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சுமார் 1,961 சென்செக்ஸ் புள்ளிகள் (2.54 சதவீதம்) உயர்ந்து மும்பை பங்குச்சந்தை 79117.11 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,076 புள்ளிகள் உயர்ந்து 80193.47 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இன்று காலை அதிகபட்சமாக செக்செக்ஸ் 80452.94 புள்ளிகளில் வர்த்தகமானது. தற்போது 10 மணியளவில் சென்செக்ஸ் 80248 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையிலும், மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் இரண்டு நாட்களாக பங்கு சந்தை உயர்ந்து காணப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களில் சுமார் சென்செக்ஸ் சுமார் 3,200 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லார்சன், எம் அண்டு எம், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளது.