என் மலர்
உள்ளூர் செய்திகள்
6 லட்சம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து கார் வாங்கிய அரூர் வாலிபர்
- சரக்கு வாகனத்தில் காசைக் கொண்டு வந்து கொடுத்து காரினைபெற்று சென்றார்.
- இன்றைய காலகட்டத்தில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணய குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் வெற்றிவேல். இவர் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் நாட்டு வைத்தியம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தங்கள் பகுதியில் 10 ரூபாய் காசை அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாட்டு பொருளாக பயன்படுத்தி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிகழ்வு வெற்றிச்செல்வனின் மனதில் ஒரு தாக்கம் ஏற்பட்டது. அரசு வழங்கும் பத்து ரூபாய் நாணயத்தை செல்லாது என பரவலாக பேசப் பட்டு வருகிறது.
இதனால் அனைவரும் பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ண த்தின் அடிப்படையில் 10 ரூபாய் நாணயங்களை சிறிது சிறிதாக சேர்த்து தான் ஒரு சொகுசு காரை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டார்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கோவிலில் வணிக வளாகங்கள் கடைகள் சாலையோர கடைகள் என பல பகுதிகளிலும் இந்த நாணயத்தை சேகரித்துள்ளார். பத்து ரூபாயை சேகரித்து மூட்டை மூட்டையாக கட்டி கார் வாங்குவதற்காக நேற்று சேலம் வந்தார்.
சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபல கார் நிறுவனத்திற்கு வந்த அவர் தான் சேர்த்து வைத்த 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து கார் வாங்க விரும்புவதாக தெரிவித்தார்.
கார் நிறுவன அதிகாரிகள் வங்கி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பிறகு கார் வழங்க முன்வந்தனர். பின்னர் சரக்கு வாகனத்தில் மூட்டை மூட்டையாக கொண்டுவந்த 10 ரூபாய் நாணயத்தை தனது உறவினருடன் எடுத்துச் சென்று கார் நிறுவன வளாகத்தில் கொட்டினார். அதை பிரித்துக் காண்பித்து 6 லட்ச ரூபாயை பத்து ரூபாய் நாணயமாக வழங்கினார்.
இதனையடுத்து தெரிவு செய்யப்பட்ட காருக்கான சாவியை கார் நிறுவன அதிகாரிகள் வெற்றிவேலுக்கு வழங்கினர். இன்றைய காலகட்டத்தில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணய குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசு சார்பில் அச்சடிக்கப்பட்ட இந்த காசு செல்லாது அல்ல என்பதை பொதுமக்கள் உணரும் வகையில் இது போன்ற விழிப்பு நிகழ்ச்சியில் ஈடுபடவே கார் வாங்கியதாகவும் இதற்காக பல மாதங்கள் போராடி 10 ரூபாய் நாணயங்களை சேர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுக சிறுக சேமித்த பத்து ரூபாய் நாணயங்களை பெருக கொடுத்து குடும்பத்துடன் வந்து கார் வாங்கி இந்த காரில் தன் குடும்பத்தினரை அமரவைத்து வெற்றிவேல் ஊருக்கு புறப்பட்டார். இந்த சம்பவம் சிறிது சேர்த்தால் பெருக வாழலாம் என்ற பழமொழியை உணர்த்துவதோடு பொது மக்களுக்கும் பத்து ரூபாய் நாணயத்தில் அவசியம் குறித்து அரிய ஒரு வாய்ப்பு கிடைத்தாகவே உணர்த்துகிறது.