search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 16 குழந்தைகள் படுகாயம்
    X

    தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 16 குழந்தைகள் படுகாயம்

    • வீட்டின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
    • 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். மாணவ, மாணவிகளை தினமும் பள்ளிக்கு சொந்தமான வேன், பஸ் மூலம் அழைத்து வந்து செல்கிறார்கள்.

    இன்று காலையும் வழக்கம் போல் பள்ளி வேன் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள களரம்பட்டி பகுதிக்கு சென்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்தது. அப்போது அந்த வேனில் 16 குழந்தைகள் இருந்தனர்.

    வேனை டிரைவர் சிவபெருமாள் என்பவர் ஓட்டி வந்தார். வேன் களரம்பட்டி சாலையில் வந்து கொண்டு இருந்தது.


    அப்போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் ரோட்டோரம் இருந்த ஒரு வீட்டின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் வேனில் இருந்த 16 மாணவ, மாணவிகளும் படுகாயம் அடைந்து அலறினர்.

    இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு மல்லியகரை போலீசார் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். பின்னர் போலீசார் ஜே.சி.பி. வாகனம் மூலம் விபத்தில் சிக்கிய பள்ளி வேனை மீட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை ந்டத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×