என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
நாமக்கல்லில் 19-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
By
SLMVairakannan17 May 2023 1:17 PM IST

- வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் மாதம் தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
- இம்மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19-ந் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் மாதம் தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
இம்மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19-ந் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
முகாமில் அனைத்து கல்வி தகுதி உடையவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் பணிவாய்ப்பு பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
X