என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தருமபுரி நகராட்சி 19-வது வார்டில் நல்ல நிலையில் உள்ள கால்வாயை இடித்துவிட்டு புதிதாக கட்டுவது ஏன்?- பொதுமக்கள் கண்டனம் தருமபுரி நகராட்சி 19-வது வார்டில் நல்ல நிலையில் உள்ள கால்வாயை இடித்துவிட்டு புதிதாக கட்டுவது ஏன்?- பொதுமக்கள் கண்டனம்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/06/1724691-002.jpg)
இடிக்கப்பட்டுள்ள நல்ல நிலையில் இருந்த கால்வாய்.
தருமபுரி நகராட்சி 19-வது வார்டில் நல்ல நிலையில் உள்ள கால்வாயை இடித்துவிட்டு புதிதாக கட்டுவது ஏன்?- பொதுமக்கள் கண்டனம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அனைத்து வீடுகளிலும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு உள்ளது.
- நன்றாக உள்ள சாக்கடை கால்வாயை யாருடைய சுய லாபத்திற்காக செய்கின்றனர்?
தருமபுரி,
தருமபுரி நகராட்சி 19-வது வார்டு கீழ் மசூதி தெருவில் ஏற்கனவே சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முழுவதுமாக இடித்து விட்டு புதுப்பிக்கும் பணியை தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் தருமபுரி நகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இங்கு ஏற்கனவே அனைத்து வீடுகளிலும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு உள்ளது. கால்வாய் அகற்றப்படுவதால் வீடுகளின் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
இதனை பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சொல்கின்றனர். குறைந்தபட்சம் ஒரு வீட்டிற்கு பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு பிடிக்கும்.
ஏற்கனவே பள்ளி கல்லூரி கட்டணங்களை கட்ட முடியாமல் தவித்து வரும் தங்களால் இந்த செலவை எப்படி சமாளிப்பது என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
நன்றாக உள்ள சாக்கடை கால்வாயை யாருடைய சுய லாபத்திற்காக செய்கின்றனர்? என பொதுமக்கள் வினா எழுப்புகின்றனர்.