என் மலர்
உள்ளூர் செய்திகள்
கம்பம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் குழந்தைகளுடன் இளம்பெண்கள் மாயம்
- குடும்ப பிரச்சினையால் குழந்தைகளுடன் இளம்பெண்கள் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் டி.டி.வி தினகரன் நகரை சேர்ந்தவர் ராஜா(31). இவர் கம்பம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி(25), மகள் ஷாக்சிகா(3). சம்பவத்தன்று ராஜா வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அங்கு மனைவி மற்றும் மகளை காணவில்லை.
அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் வினோத்குமார்(28). இவரது சகோதரி ஜெயபாரதி(32). இவருக்கும் முத்து என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஓவியா என்ற மகளும், கோபிநாத் பாண்டியன் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று ஜெயபாரதி தனது மகன் கோபிநாத் பாண்டியனுடன் அல்லிநகரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றனர்.
ஆனால் அதன்பின்னர் அவர்கள் வீடுதிரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் பல்வேறு இடங்களில் ேதடிபார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயபாரதி மற்றும் கோபிநாத் பாண்டியனை தேடி வருகின்றனர்.