என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தேனி அருகே 2 பெண்கள் மாயம்
Byமாலை மலர்23 Nov 2022 11:10 AM IST
- தேனி அருகே மூதாட்டி மற்றும் இளம்பெண் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மனைவி லட்சுமியம்மாள்(80). சம்பவத்தன்று கடைக்கு சென்றுவருவதாக கூறிச்சென்ற லட்சுமியம்மாள் மாயமானார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் தாமஸ்காலனியை சேர்ந்தவர் அந்தோணி மகள் பாஸ்டினா(21). இவர் பி.ஏ.பி.எட் படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தார். சம்பவத்தன்று செல்போனுக்கு ரீஜார்ஜ் செய்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.
நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாஸ்டினாவை தேடி வருகின்றனர்.
Next Story
×
X