என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே கைக்குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயம்
- குடும்ப பிரச்சினை மற்றும் கைக்குழந்தையுடன் வீட்டைவிட்டு சென்ற பெண்களை காணவில்லை.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டி காளி யம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரி(27) என்ற மனைவியும், விஸ்வந்த்(1) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக ஈஸ்வரன் ஊருக்கு வந்திருந்தார்.
அப்ேபாது அவரது மனைவி முனீஸ்வரி குழந்தையுடன் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு மாயமானர். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
ஜெயமங்கலம் அருகில் உள்ள கீழகாமக்காபட்டிைய சேர்ந்த வைரமுத்து மனைவி நந்தினி(30). வைரமுத்து மீன்பிடித்து வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் ஜீவானந்தம்(8). கடன் பிரச்சினை இருந்துவந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் சம்பவத்தன்று நந்தினி தனது குழந்தையுடன் வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.