என் மலர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் மாயம்
- சம்பவதன்று வீட்டில் இருந்த சிறுமி வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
- ஆனால், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல்லை அடுத்த ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவதன்று வீட்டில் இருந்த சிறுமி வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். ஆனால், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் இண்டூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை இண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.