என் மலர்
உள்ளூர் செய்திகள்
வட மாநில பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் சிறையில் அடைப்பு
- அதிக பணம் தருவதாக கூறி பாலியல் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.
- தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் பாலியல் தொழில் நடைப்பெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கோகுல் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அண்ணா நகர் பகுதியில் சந்தேக படும்படியாக நின்று கொண்டி ருந்த வட மாநில பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் தான் கொல்கத்தா மாநிலம் மணிக்கபூரை சேர்ந்தவர் என்றும், கூலி வேலை தேடி வந்த தன்னை குப்பு என்பவரின் மகள் ராஜாமணி (வயது 65) கோவையை சேர்ந்த வீராசாமி (43) மற்றும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த செல்வகுமார் (56) ஆகியோர் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணை தொப்பூர் பெண்கள் காப்பகத்திற்க்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வீராசாமி, செல்வகுமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனர்.