search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டை வெளிநாட்டில் இருந்தே கண்டுபிடித்த சம்பவம்- வீட்டில் திருட முயன்ற 2 கொள்ளையர்கள் கைது
    X

    திருட்டை வெளிநாட்டில் இருந்தே கண்டுபிடித்த சம்பவம்- வீட்டில் திருட முயன்ற 2 கொள்ளையர்கள் கைது

    • சலீம் வீட்டிலிருந்து வெளியே சென்று இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்து திருடமுயன்றோம்.
    • தலைமறைவாகியுள்ள சேர்மதுரையை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் ரஹ்மத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 58). இவரது மகன் மஸ்கட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மகனை பார்ப்பதற்காக கடந்த வாரம் சலீம் தனது குடும்பத்தினருடன் மஸ்கட்டுக்கு சென்றார்.

    சலீம் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வைத்திருந்தார். கடந்த 31-ந்தேதி நள்ளிரவு வெளிநாட்டில் இருந்தபடியே தனது செல்போனில் உள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை சலீம் ஆய்வு செய்தார்.

    அப்போது மர்மநபர்கள் 2 பேர் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று திருடி கொண்டிருந்தனர். இதை பார்த்த சலீம் இது குறித்து பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திருடன்... திருடன்... என கூச்சலிடவே அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் 2 பேரின் உருவங்கள் தெளிவாக பதிவாகி இருந்தது.

    அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதில் இருந்த ஒருவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் சேர்மத்துரை என்பது தெரியவந்தது. இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஜெயலில் இருந்து வெளியே வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. மற்றொருவர் பணகுடியை சேர்ந்த முத்து (37) என்பது தெரியவந்தது.

    இவர் மீது 5 திருட்டு வழக்குகள் உள்ளது. மேலும் கொள்ளை நடந்த வீட்டிலும் வெளியே ஒருவரும் நின்று கொண்டிருந்தது சி.சி.டி.வி.யில் தெரியவந்ததையடுத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் பணகுடியை சேர்ந்த வெட்டும் பெருமாள் (45) என்பதும் தெரியவந்தது. இவர் மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.

    போலீசார் 3 பேரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் முத்து, வெட்டும் பெருமாள் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாங்கள் ஜெயிலில் இருந்தபோது பாவூர்சத்திரத்தை சேர்ந்த சேர்மதுரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    சேர்மதுரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார். 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் திட்டி நாகர்கோவிலுக்கு வந்தோம். நாகர்கோவிலில் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்க முடிவு செய்தோம். சலீம் வீட்டிலிருந்து வெளியே சென்று இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்து திருடமுயன்றோம்.

    இதேபோல் பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் திருட முயன்றோம் என்று கூறினார்கள். கைது செய்யப்பட்ட முத்து, வெட்டும் பெருமாள் இருவரையும் ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள சேர்மதுரையை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×