என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டரிடம் மனுஅளித்து விட்டு வெளியே வந்த போது எடுத்தபடம்.
2 ஆயிரம் பட்டியல் இன மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

- பட்டியல் இன மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இலவச நிலம் வழங்கப்பட்டது.
- ஆனால் பயனாளிகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், அமைப்பு செயலாளர் கோவேந்தன், மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில் கூறியுள்ளதாவது, தருமபுரி மாவட்டம் ஏ.ரெட்டிஅள்ளியில் பட்டியல் இன மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இலவச நிலம் வழங்கப்பட்டது.
ஆனால் பயனாளிகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அதன் தற்போதைய நிலையை கண்டறிய வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தினர்.
தருமபுரியில் கோல்டன் தெரு, அம்பேத்கர் காலனி, நியூகாலனி, பிடமனேரியில் உள்ள பட்டியல் இன ஏழை எளிய மக்களுக்காக வாங்கப்பட்ட இடத்தில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தினர்.
இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், தருமபுரி தொகுதி செயலாளர் சக்தி, ஒன்றிய செயலாளர் ஆட்டோ கிருஷ்ணன், ராமதுரை, வசந்தன், மாதேஷ், உதயசந்திரன், பார்த்திபன், கிருஷ்ணன், பாரதி, முருகன், சுதாகர், கணேசன், பிரபு, செடிமுருகன், தனபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.