என் மலர்
செய்திகள்
X
டெல்லி மேல்-சபை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்களின் சொத்து விவரம்
Byமாலை மலர்28 May 2016 8:22 AM IST (Updated: 28 May 2016 8:22 AM IST)
டெல்லி மேல்-சபை உறுப்பினர் தேர்தலுக்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை:
டெல்லி மேல்-சபை உறுப்பினர் தேர்தலுக்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ஆர்.வைத்திலிங்கம்:- எனது கையிருப்பில் ரொக்கமாக ரூ.45 ஆயிரம், மனைவி கையிருப்பில் ரூ.10 ஆயிரமும் உள்ளது. நகைகள், வைப்புத் தொகை போன்ற அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.42.43 லட்சம். மனைவியிடம் இருக்கும் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.10.60 லட்சம். அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1.91 கோடி.
ஏ.நவநீதகிருஷ்ணன்:- எனது கையிருப்பில் ரூ.20 ஆயிரம், மனைவியின் கையிருப்பில் ரூ.15 ஆயிரம் உள்ளது. என்னிடமுள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1.10 கோடி, மனைவியிடம் ரூ.28.56 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகள் உள்ளன. எங்களிடம் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.60 லட்சம், எங்களின் வாரிசிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் உள்ளன.
ஏ.விஜயகுமார்:- எனது கையிருப்பில் ரூ.50 ஆயிரம், மனைவியிடம் ரூ.30 ஆயிரம் தொகை உள்ளது. நகைகள், வங்கி வைப்புத் தொகை போன்ற அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.73 லட்சம். மனைவியிடம் உள்ள சொத்தின் மதிப்பு ரூ.35.31 லட்சம். அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.12 கோடியே 10 லட்சம்.
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்:- எனது கையிருப்பில் ரூ.27 ஆயிரம், மனைவியிடம் ரூ.14 ஆயிரம் பணம் உள்ளது. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1.45 கோடி. மனைவியிடம் ரூ.19.19 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.4.21 கோடி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×
X