search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
    X

    இந்திய வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

    இந்திய வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, நாம் வசிக்கும் இந்த பூமிப்பந்தை பசுமையாகவும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கும் முயற்சிகளை துவங்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ‘‘வன விலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு, விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும்’’ என்பதே இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டு, இந்த ஆண்டிற்கான சுற்றுச்சூழல் தினத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.

    ஒவ்வொரு தனி மனிதரும் தம்மாலான சிறு சிறு பங்களிப்புகளை வழங்கி, வன விலங்குகளை வேட்டையாடாமல் பாதுகாக்கும் வகையில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, வன விலங்குகள் விற்பனை மற்றும் அவற்றில் இருந்து உருவாக்கப்படும் உற்பத்தி பொருட்களை புறக்கணிப்பது, வன விலங்குகளை பாதுகாப்பதில் விழிப்புடன் செயல்படுவது போன்ற பணிகளில் ஈடுபடுவதன் மூலம் அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க முடியும். இதுபோன்ற முயற்சிகளை ஒருங்கிணைத்து, நாம் அனைவரும் கூட்டாக இணைந்து செயல்படுவதன் மூலமாக நமது இந்திய வனப்பகுதிகள் புத்தெழுச்சி பெற்று, பறவைகள் மற்றும் வன விலங்குகளின் உற்சாகமான சப்தங்கள் என்றைக்கும் அங்கு எதிரொலிக்கும் நிலையை நம்மால் உருவாக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×