search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்-இளங்கோவன் பங்கேற்பு
    X

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்-இளங்கோவன் பங்கேற்பு

    புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின், இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இன்று மதியம் நடந்த நாராயணசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியம், கு.க.செல்வம் பங்கேற்றார்.

    காங்கிரஸ் மேலிட தலைவர் முகுல்வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செய்தி தொடர்பாளர் கோபண்ணா, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார், பிரெஞ்சு தூதர் பிலிப் ஜான்வியர் காமியமா மற்றும் புதுவை காங்கிரஸ் - தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொண்டர்கள் கூட்டத்தால் விழா பந்தல் நிரம்பி வழிந்தது. பந்தலுக்கு வெளியே கடற்கரை பகுதியிலும் பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அங்கு புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் அகன்ற திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    பதவி ஏற்பு விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்த அனைவரும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
    Next Story
    ×