என் மலர்
செய்திகள்
தேனியில் ஒர்க்ஷாப்பில் துணிகர கொள்ளை
தேனி:
தேனி அல்லிநகரம் குறிஞ்சிநகரைச் சேர்ந்தவர் நாகலிங்கம். இவர் பெரியகுளம் சாலையில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து ஒர்க்ஷாப்பை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு சமயத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒர்க்ஷாப் கேட்டை உடைத்து உள்ளே சென்று இரும்பு கட்டிங் மிஷினை திருடிச் சென்று விட்டார். மறுநாள் காலை கடை திறக்க வந்த நாகலிங்கம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அல்லிநகரம் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் என்ற வாலிபர்தான் கட்டிங் மிஷினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
உத்தமபாளையம் கே.எம்.நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். நேற்று இவர் வீட்டை பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்து விட்டு மனைவியுடன் சந்தைக்கு சென்றார்.
வீடு திரும்பிய போது கதவு திறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.84 ஆயிரம் திருடு போயிருந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி உமா ராணி மீது சந்தேகப்பட்ட அவர்கள் அது குறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.