என் மலர்
செய்திகள்
X
இந்தியா-கொரியா கடற்படையினர் கூட்டு கடற்பயிற்சி நாளை வங்க கடலில் தொடங்குகிறது
Byமாலை மலர்7 Jun 2016 8:52 AM IST (Updated: 7 Jun 2016 8:55 AM IST)
இந்தியா-கொரியா கடற்படையினர் இணைந்து வங்க கடலில் நாளை (புதன்கிழமை) கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
சென்னை:
இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு சென்றனர்.
தற்போது இந்திய கடற்படையுடன் இணைந்து கொரியா நாட்டு கடலோர காவல் படையினர் 8-ந் தேதி (நாளை) முதல் 11-ந் தேதி வரை வங்க கடலில் ‘சகோஜ்- ஹையோபிளையோக்’ என்ற பெயரில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக கொரியா நாட்டில் இருந்து கொரியா கடற்படை கமிஷனர் ஜெனரல் ஹாங்கில்க்-டே தலைமையில், கொரியா கடற்படையினர் கொரியா கடலோர காவல் படை கப்பலில் சென்னை துறைமுகம் வருகின்றனர். அவர்களுக்கு இந்திய கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்திய கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல், ராஜேந்திர சிங் தலைமை தாங்குகிறார். இந்திய கடற்படை வீரர்கள் ‘ஐ.சி.சி. சமுத்திரா பேகேர்டார்’ போர்க்கப்பலில் சென்று பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இருநாட்டு கப்பல் படைகளின் வலிமையை அதிகரிக்கவும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த கடற்பயிற்சி நடத்தப்படுகிறது.
பயிற்சியின் போது இந்திய கடலோர காவல் படையின் செயல்பாடுகள், கடல் பகுதியில் அவர்களின் நடவடிக்கைகள், எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் விதம் உள்ளிட்டவை குறித்து கொரியா வீரர்களுக்கு நம் நாட்டு வீரர்கள் செய்முறை விளக்கம் அளிக்க உள்ளனர். அத்துடன் சரக்கு கப்பல் ஒன்றை கடத்தல்காரர்கள் கடத்தி செல்வதை, தடுத்து கப்பலை மீட்பது போன்று மாதிரி செயல்முறை விளக்கமும் அளிக்க உள்ளனர்.
சமூக விழிப்புணர்வுக்காக 9-ந் தேதி (வியாழக்கிழமை) கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. தொடர்ந்து இருநாட்டு வீரர்களும் 2 நாட்டு போர்க்கப்பல்களையும் பார்வையிட உள்ளனர். பின்னர் 11-ந் தேதி இரவு கொரியா நாட்டு கடற்படை வீரர்கள் நாடு திரும்புகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story
×
X