என் மலர்
செய்திகள்
X
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலையில் அதிரடி திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்
Byமாலை மலர்7 Jun 2016 10:42 AM IST (Updated: 7 Jun 2016 10:42 AM IST)
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலையில் அதிரடி திருப்பமாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவருடைய மனைவியே கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலமாகி உள்ளது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு வக்கீலாக பணியாற்றியவர் முருகன் (வயது 44). இவர் நேற்று முன்தினம் மதியம் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக இருந்த வாடகை வீட்டை பார்ப்பதற்காக தனது காரில் சென்றார்.
அப்போது அவரை ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென்று முருகனை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே முருகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலையாளிகள் தப்பி சென்றனர்.
முருகனின் மைத்துனர் லோகேஸ் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திரையுலக பிரமுகர்கள் பலருக்கு முருகன் வக்கீலாக இருந்ததால், சினிமா பிரச்சினை சம்பந்தமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சொத்து பிரச்சினை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டனர். முருகன் கொலை செய்யப்பட்ட சற்று நேரத்தில், அவரது செல்போனுக்கு போன் ஒன்று வந்திருந்தது. அந்த எண்ணை துருப்பு சீட்டாக பயன்படுத்தி போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். போன் செய்தது முருகனின் மனைவி லோகேஸ்வரி(35) என்பது தெரியவந்தது.
எனவே, முருகனின் மனைவி லோகேஸ்வரியிடம் இருந்தே போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். அப்போது லோகேஸ்வரி முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம், கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முருகனை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி லோகேஸ்வரியே கொலை செய்தது அம்பலமானது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் முருகனை கொலை செய்ததாக அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசில் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நானும், முருகனும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டோம். ஆரம்பத்தில் எங்கள் இல்வாழ்க்கை இனிமையாக இருந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர்.
நாளடைவில் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்தது. இந்தநிலையில் பள்ளிப் படிப்பில் என்னுடன் சேர்ந்து படித்த சண்முகநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
எங்களுடைய கள்ளக்காதல் விவகாரம் முருகனுக்கு தெரிந்துவிட்டது. சண்முகநாதனுடனான பழக்கத்தை கைவிட வேண்டும் என்று என்னை கண்டித்தார். எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார். இதனால் முருகனை கொலை செய்ய முடிவு செய்தேன். இதுபற்றி சண்முகநாதனிடம் தெரிவித்தேன். அவரும் எனது முடிவுக்கு உடன்பட்டார்.
முருகனை கொலை செய்வதற்கு நேரம் பார்த்து காத்திருந்தோம். இந்தநிலையில் கோடம்பாக்கம் பகுதியில் வீட்டை வாடகைக்கு பார்ப்பதற்காக முருகன் கூறிவிட்டு சென்றார். இதுதான் சரியான தருணம் என்று கூலிப்படையை ஏவி முருகனை கொலை செய்தோம்.
கூலிப்படையினர் முருகனை கொலை செய்வதை சண்முகநாதன் மறைவில் இருந்து பார்த்தார். முருகன் இறந்த தகவலை எனக்கு அவர் போன் செய்து கூறினார். நானும் இது உண்மையாக இருக்குமா?, பொய்யாக இருக்குமா? என்பதை தெரிந்துகொள்ள முருகன் சொல்போனுக்கு தொடர்பு கொண்டேன். போன் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. அதனால், முருகன் இறந்தது உண்மையாக இருக்கும் என்று நம்பிக்கொண்டேன். ஆனால், அவரது செல்போனில் இருந்த ‘மிஸ்டுகால்’ எண்ணை வைத்து போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
லோகேஸ்வரி அளித்த வாக்குமூலத்தின் படி, முருகனை கொலை செய்தது வியாசர்பாடியை சேர்ந்த கூலிப்படை கும்பல் சுப்பு(எ) கோலார் சுப்பு (31), முரளி (27), சுப்பிரமணி (24), ஜஸ்டின்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கூலிப்படை கும்பலை சேர்ந்த சுப்பு, முரளி, சுப்பிரமணி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கூலிப்படையை சேர்ந்த ஜஸ்டினும், கள்ளக்காதலன் சண்முகநாதனும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Next Story
×
X