என் மலர்
செய்திகள்
X
பாசனத்துக்காக ஆழியாறு அணை நாளை திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு
Byமாலை மலர்7 Jun 2016 11:42 AM IST (Updated: 7 Jun 2016 11:42 AM IST)
பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
முதல் - அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையின் ஐந்து பழைய வாய்க்கால்களின் பாசன பகுதிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்காகவும் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையிலிருந்து நாளை (8-ந்தேதி) முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதோடு, பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Next Story
×
X