என் மலர்
செய்திகள்
X
சென்னை சலூனில் வழுக்கை தலையில் முடி நட்ட மருத்துவ மாணவர் பலி
Byமாலை மலர்7 Jun 2016 2:02 PM IST (Updated: 11 Jun 2016 4:52 PM IST)
சென்னை சலூனில் வழுக்கை தலையில் முடி நட்ட மருத்துவ மாணவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
வழுக்கை தலையால் திருமண தடையா? கவலை வேண்டாம். முடியை நட்டு அழகு பெறுவீர் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்க்கலாம்.
முடிகளை இழந்து வழுக்கைத் தலையால் கூனி குறுகும் இளம்வயதுகாரர்கள் இந்த மாதிரி விளம்பரங்களை பார்த்து ஏமாறுவது உண்டு.
மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவரே இந்த சிகிச்சையால் உயிரையே இழந்துள்ளார்.
ஆரணியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்து அவுஸ்சர்ஜனாக இருந்தார்.
இவருக்கு தலையில் வழுக்கை விழுந்திருந்தது. எனவே முடிநடும் ஆசை ஏற்பட்டது. அதற்காக சென்னையில் உள்ள சலூனுக்கு சென்றுள்ளார்.
அங்கு மயக்க டாக்டர் ஹரிபிரசாத், சீனாவில் உள்ள கல்லூரியில் எம்.பி. பி.எஸ். படிக்கும் மாணவர் வினித் சூரியகுமார் ஆகியோர் முடிநடும் சிகிச்சையை செய்துள்ளனர்.
மயக்க டாக்டர் மயக்க மருந்து செலுத்தி விட்டு சென்று விட்டார். காலையில் தொடங்கிய சிகிச்சை மாலை வரை நீடித்து இருக்கிறது.
அப்போது மாணவர் சந்தோஷ்குமார் தலை சுற்றல், படபடப்பு இருப்பதாக கூறி இருக்கிறார். உடனே அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். அந்த ஆஸ்பத்திரியில்தான் டாக்டர் ஹரிபிரசாத் கஸ்தூரி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் சிகிச்சை முடிந்ததும் மாணவர் சந்தோஷ் குமாரை சொந்த ஊரான ஆரணிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
மறுநாள் சந்தோஷ்குமாரின் உடல் நிலை பாதித்தது. உடனே வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
தவறான சிகிச்சை மருந்து ஒவ்வாமை காரணமாக அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் தரப்பில் போலீசில் புகார் செய்யவில்லை. பிரேத பரிசோதனை நடத்தாமல் உடல் அடக்கத்தையும் முடித்து விட்டனர்.
ஆனால் சந்தோஷ்குமார் மருத்துவ மாணவராக இருந்ததால் தகவல் அறிந்து மருத்துவ துறை சார்பில் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் செய்யப்பட்டது. அதன் பிறகே இந்த விபரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுபற்றி தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மயக்க மருந்து கொடுத்து விட்டு கடைசி வரை நோயாளியின் அருகில் இருக்காமல் சென்றது ஏன்? என்று மயக்கவியல் டாக்டருக்கும், அறுவை சிகிச்சை தகுதி பெறும் முன்பே சிகிச்சை அளித்தது எப்படி? என்பது பற்றி டாக்டர் வினித்திடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சலூன், முடிவெட்டவும், அழகு கலைக்காகவும் அனுமதி பெறப்பட்டது. ஆனால் அனுமதி இல்லாமல் மருத்துவ சிகிச்சைக்கு சமமான முடி நடும் சிகிச்சையை செய்து வந்துள்ளார்கள்.
முடிநடும் சிகிச்சைக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள். பண ஆசையில் மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள்.
சென்னையில் பல பெண்கள் அழகு நிலையங்களில் பெண்கள் தங்கள் முக அழகு பராமரிப்புக்காக செல்கிறார்கள். 40 வயதை கடந்த பெண்கள் முகத்தில் விழும் சுருக்கத்தை பார்த்து துடித்து போகிறார்கள். அதை போக்குவதற்காக ‘போட்டாக்ஸ்’ என்ற ஊசியை போட்டுக் கொள்கிறார்கள்.
சரியான மருத்துவ உபகரணங்கள், டாக்டர்கள் வசதி இல்லாமல் இந்த மாதிரி சிகிச்சை அளிப்பது குற்றமாகும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் செந்தில் கூறினார்.

Next Story
×
X