என் மலர்
செய்திகள்
X
கோட்டூர்புரத்தில் கவரிங் நகை என்று தெரியாமல் பெண்ணிடம் செயின் பறித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
Byமாலை மலர்7 Jun 2016 2:15 PM IST (Updated: 7 Jun 2016 2:15 PM IST)
கோட்டூர்புரத்தில் கவரிங் நகை என்று தெரியாமல் பெண்ணிடம் செயினை பறித்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வசந்தி.
கிண்டி காந்தி மண்டபம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வசந்தியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார்.
இதையடுத்து அவர் கூச்சல் போட்டார். இந்த நேரத்தில் அந்த வழியாக போலீஸ் ரோந்து வாகனம் வந்தது. போலீசை பார்த்ததும் அந்த வாலிபர் தப்ப முயன்றார்.
இருப்பினும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், போலீஸ்காரர் அரிகிருஷ்ணன் ஆகியோர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
போலீஸ் விசாரணையில் அவரது பெயர் கார்த்திகேயன் ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது.
வசந்தி அணிந்திருந்த நகை தங்க நகை இல்லை. கவரிங் நகை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×
X