என் மலர்
செய்திகள்
X
கல்லூரி மாணவியிடம் நகை பறித்த வாலிபர்: பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்
Byமாலை மலர்7 Jun 2016 9:32 PM IST (Updated: 7 Jun 2016 9:32 PM IST)
பல்லடம் அருகே கல்லூரி மாணவியிடம் நகை பறித்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் . இவரது மகள் கலைவாணி (வயது18) கல்லூரி மாணவி.
நேற்று மாலை கல்லூரி முடிந்து இரண்டு சக்கர வாகனத்தில் கலைவாணி வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அவரை பின் தொடர்ந்து ஒரு மோட்டார் பைக்கில் வந்த ஒரு வாலிபர் பல்லடம் பனப்பாளையம் பெருமாள் கோயில் அருகில் கலைவாணியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது குறுக்கே வந்த ஒரு காரால் செல்லமுடியவில்லை. இந்த நிலையில் கலைவாணி ‘‘திருடன்...திருடன்’’ என்று கூச்சல் போட்டுஉள்ளார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து ‘‘தர்ம அடி’’ கொடுத்தனர்.
பின்னர் அந்த வாலிபரை அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த நெடுஞ்சாலை காவல் துறையினர் மீட்டு பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த செய்யது முகமது மகன் யாசு முகமது (29) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×
X