என் மலர்
செய்திகள்
X
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.59 கோடியில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம்
Byமாலை மலர்23 Jun 2016 6:58 AM IST (Updated: 23 Jun 2016 6:58 AM IST)
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.59 கோடியில் புறநோயாளிகள் பிரிவுக்கு புதிய கட்டிடத்தை 18 மாதத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் என தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே இயங்கி வந்த புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று, தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன்படி, ஏற்கனவே இயங்கி வந்த புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக தற்சமயத்துக்கு புறநோயாளிகள் பிரிவு பழைய மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.
இதேபோல், புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்துக்கு பின்புறம் அமைந்திருந்த மாத்திரைகள் வழங்கும் இடமும் பழைய மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு தற்சமயமாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரத்துக்கு மேலாக பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் எப்போது? எவ்வளவு செலவில் கட்டப்படும் என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
24 ஆயிரத்து 940 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு அந்த பணிகள் நடைபெறும்.
பழைய கட்டிடம் இடிக்கும் பணி முற்றிலுமாக நிறைவுபெற்ற பின்னர், புறநோயாளிகள் பிரிவுக்கு என்று புதிய கட்டிடம் அதே இடத்தில் ரூ.58 கோடியே 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. தரைத்தளத்துடன் மொத்தம் 5 மாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
தரைத்தளத்தில் வாகன நிறுத்தம் உள்பட இதர பணிகளுக்கான இடம் ஒதுக்கப்படும். முதல் தளம் முதல் 5-வது தளம் வரை அனைத்து துறைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு ஒருங்கே அமைக்கப்பட இருக்கின்றன.
ஒவ்வொரு தளத்திலும் நோயாளிகளுக்கு என்று தனித்தனியாக (ஆண்/பெண்) கழிவறை வசதியும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு என்று கழிவறை வசதியும் அமைக்கப்படும். சாய்வு தளம் மற்றும் ‘லிப்ட்’ வசதியும் செய்து தரப்பட இருக்கின்றன.
ஒவ்வொரு தளமும் 40 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைய உள்ளன. பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று முடிந்ததும், புதிய கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கப்படும். 18 மாதத்துக்குள்(1½ ஆண்டுக்குள்) இந்த பணிகளை முடிக்க திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ நிலைய அதிகாரி இளங்கோவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் அதிநவீன முறையில் கட்டப்பட உள்ளது. அனைத்து மருத்துவ துறைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு ஒருங்கே அமைக்க திட்டமிடப்பட்டு இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது.
ஒவ்வொரு தளங்களிலும் எந்தெந்த மருத்துவத்துறையின் புறநோயாளிகள் பிரிவு வரும் என்று இப்போது சொல்ல முடியாது. கட்டிடப்பணிகள் முடிவடைந்ததும் அதை ‘டீன்’ முடிவு செய்வார். இந்த கட்டிடத்தின் பின்புறத்திலேயே மாத்திரைகளை நோயாளிகள் வாங்குவதற்கு பெரிய அளவில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×
X