என் மலர்
செய்திகள்
X
கரூரில் கைதான பெண் மாவோயிஸ்டுகள் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
Byமாலை மலர்23 July 2016 9:56 AM IST
கரூரில் கைதான பெண் மாவோயிஸ்டுகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை சேர்ந்த மணிவாசகம் , அவரது மனைவி கலா (வயது45), கலாவின் அண்ணன் சுந்தர மூர்த்தி மனைவி சந்திரா (53) உள்பட பலரை போலீசார் தேடி வந்தனர். இதில் சுந்தரமூர்த்தி ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார். மணிவாசகம், சந்திரா, கலா உள்ளிட்டோரை போலீசாரை தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்த எருமையூரில் பதுங்கியிருந்த மதுரையை சேர்ந்த ரீனா ஜாய்ஸ் மேரி (32) என்ற மாவோயிஸ்ட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 2002-ம் ஆண்டு ஊத்தங்கரை போலீஸ் நிலையம் மீதான தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள கலாவும், சந்திராவும் கரூரில் உள்ள வெங்கமேடு கணக்குபிள்ளை தெருவில் வசித்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து திருச்சி க்யூ பிராஞ்ச் துணை போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன் தலைமையிலான போலீசார் சந்திரா, , கலா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கரூர் சுங்ககேட் சத்திய மூர்த்தி நகரில் உள்ள க்யூ பிராஞ்ச் போலீசார் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து இருவரும் கரூர் குற்றவியல் கோர்ட்டு எண்-1ல் நீதிபதி மோகனவள்ளி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் வருகிற ஆகஸ்ட் 8-ந்தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story
×
X